சோதி சுரேகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோதி சுரேகா
சோதி சுரேகா
தனிநபர் தகவல்
பிறப்பு3 சூலை 1996 (1996-07-03) (அகவை 27)
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
நிகழ்வு(கள்)வில்வித்தை
பதக்கத் தகவல்கள்
மகளிர் வில்வித்தை
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 ஹாங்சோ மகளிர் கூட்டு வில்வித்தை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 ஹாங்சோ மகளிர் கூட்டு வில்வித்தை (அணி)
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 ஹாங்சோ கலப்பு கூட்டு வில்வித்தை (அணி)

சோதி சுரேகா ஒரு இந்திய வில்வித்தை வீராங்கனை ஆவார். இவர் வில்வித்தை உலகக் கோப்பை, உலக வில்வித்தை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கூட்டு வில்வித்தை போட்டியில் பல தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2023 ஆம் ஆண்டில், உலக வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வில்வித்தை வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். இவருக்கு 2017 ஆம் ஆண்டில் இந்திய அரசால் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விளையாட்டு விருதான அருச்சுனா விருது வழங்கப்பட்டது.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சோதி சுரேகா 3 சூலை 1996 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சல்லப்பள்ளியில் வெண்ணம் சுரேந்திர குமார் மற்றும் துர்கா ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தை முன்னாள் கபடி வீரர் மற்றும் விசயவாடாவில் கால்நடை மருத்துவர் ஆவார்.[1]

ஆரம்பத்தில், மூன்று வயதிலிருந்தே சோதி சுரேகா நீச்சல் பயிற்சியைத் தொடங்கினார். 2001ல் சோதி ஐந்து கிலோ மீட்டர் நீந்தி கிருஷ்ணா நதியை மூன்று மணி நேரம், 20 நிமிடங்கள் மற்றும் ஆறு வினாடிகளில் கடந்து, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இளையவர் என்ற பெருமையைப் பெற்றார்.[2] சோதி விசயவாடாவில் உள்ள நாளந்தா வித்யா நிகேதனில் பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் K L பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் இளையர் மற்றும் முதுகலை வணிக மேலாண்மைபட்டம் பெற்றார்.[3]

வில்வித்தை[தொகு]

சோதி 11 வயதிலிருந்தே வில்வித்தை பயிற்சி செய்யத் தொடங்கினார், இளைஞர் மட்டத்தில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றார். 2011 இல், ஈரானின் தெகுரானில் நடைபெற்ற 2011 ஆசிய வில்வித்தை சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[4] 2013 இல், சீனாவின் வுக்ஸியில் நடைபெற்ற 2013 உலக வில்வித்தை இளைஞர் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்.[5][6] இவர் ஐந்து ஆசிய வில்வித்தை போட்டிகளில் பங்கேற்று நான்கு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். இவர் வில்வித்தை உலகக் கோப்பைகளில் ஐந்து தங்கம், நான்கு வெள்ளி மற்றும் ஏழு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

சோதி 2021 உலக வில்வித்தை போட்டிகளில் மூன்று வெள்ளிப் பதக்கங்களை வென்றார் மற்றும் அதைச் செய்த முதல் இந்தியர் ஆனார். உலக வில்வித்தை போட்டிகளில் ஒரு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.[7] சனவரி 2022 இல், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள லான்காஸ்டர் அருகே நடைபெற்ற லான்காஸ்டர் வில்வித்தை பெண்கள் ஓபன் நிகழ்வில் முதல் இடத்தைப் பிடித்தார்.[8] 2023 இல் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சோதி மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார், வில்வித்தையில் பல தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் ஆனார்.[9]

விருதுகளும் பாராட்டுகளும்[தொகு]

2017 ஆம் ஆண்டில், அப்போதைய ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அவருக்கு 00 சதுர அடியில் வீட்டு மனையுடன் 1 கோடி ரூபாய் ரொக்கப் பரிசாக 5 வழங்கினார்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jyothi Surekha Vennam". World Archery (in ஆங்கிலம்). Archived from the original on 11 January 2020. பார்க்கப்பட்ட நாள் 2019-11-23.
  2. 2.0 2.1 2.2 2.3 "Take a bow". தி டெக்கன் குரோனிக்கள். 6 October 2023 இம் மூலத்தில் இருந்து 5 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231005190251/https://www.deccanchronicle.com/sports/other-news/051023/take-a-bow-1.html. 
  3. "Jyothi Surekha Vennam Biography: Age, weight, archery, achievements". KreedOn (in ஆங்கிலம்). 2 July 2019. Archived from the original on 10 July 2019. பார்க்கப்பட்ட நாள் 23 November 2019.
  4. "Indian women bags bronze medal in Asian Archery championship" இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304081041/http://www.deccanherald.com/content/199572/indian-women-bags-bronze-medal.html. 
  5. "19th Asian Championships + CQT Asia". World Archery. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 7 November 2015.
  6. "World Youth Championship" இம் மூலத்தில் இருந்து 13 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131213220302/http://old.archery.org/EventResults/ResultSummary.aspx?e=476. 
  7. "Archery World Championships: Jyothi Surekha Vennam stuns world No 2 to win second bronze of the day" (in en). https://scroll.in/field/927153/archery-world-championships-jyothi-surekha-vennam-stuns-world-no-2-to-win-second-bronze-of-the-day. 
  8. Kasprzak, Emma (31 January 2022). "Ella Gibson finishes 3rd at Lancaster Archery Classic". https://www.archerygb.org/ella-gibson-finishes-3rd-at-lancaster-archery-classic/. 
  9. "Archery WC: Jyothi clinches two gold medals" (in en). 22 April 2023. https://www.espn.in/olympics/story/_/id/36260816/jyothi-ojas-clinch-mixed-team-compound-gold-archery. 
  10. ANI (31 August 2017). "Andhra CM rewards Guinness record holder, archer Jyothi Surekha". http://www.business-standard.com/article/news-ani/andhra-cm-rewards-guinness-record-holder-archer-jyothi-surekha-117083101526_1.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோதி_சுரேகா&oldid=3932331" இலிருந்து மீள்விக்கப்பட்டது