சையத் அக்பருதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையத் அக்பருதீன்
ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர்
பதவியில்
1 ஜனவரி 2017 – 19 மே 2020
குடியரசுத் தலைவர்பிரணப் முகர்ஜி
ராம்நாத் கோவிந்த்
முன்னையவர்அசோக் குமார் முகர்ஜி
பின்னவர்டி. எஸ். திருமூர்த்தி
வெளியுறவுத் துறை அமைச்சகம்
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இணைச் செயலாளர் (வெளிநாட்டு உறவுகள்)
பதவியில்
1 ஜனவரி 2012 – 1 ஏப்ரல் 2015
முன்னையவர்விஷ்ணு பிரகாஷ்
பின்னவர்விகாஸ் சுவர்ப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 ஏப்ரல் 1960 (1960-04-27) (அகவை 64)
கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
துணைவர்பத்மா அக்பருதீன்
வேலைஇராஜதந்திரி/ இந்திய வெளியுறவு சேவை

சையத் அக்பருதீன் (Syed Akbaruddin) 1985 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவையிலிருந்து ஓய்வுப் பெற்ற இந்திய இராஜதந்திரி ஆவார். நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக 2016 ஜனவரி முதல் 2020 ஏப்ரல் வரை பணியாற்றினார். இதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராகவும், 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தில் இந்திய பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார். [1] [2]

தொழில்[தொகு]

அக்பருதீன் 1985 ஆம் ஆண்டு தேர்வான இந்திய வெளியுறவு சேவை அதிகாரி. [3] இவர் 34 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வெவ்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இவர் கெய்ரோவில் தனது முதல் வேலையைத் தொடங்கினார். அங்கு தான் இவர் அரபு மொழியையும் கற்றுக்கொண்டார். சவுதி அரேபியாவிலும் இரண்டு முறை பணியாற்றினார். 1988 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை ரியாத்தில் மற்றும் 2000 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஜித்தாவில் இந்தியாவின் துணைத் தூதராக பணியாற்றினார். மேலும் இவர் இந்தியாவில் மேற்கு ஆசியா நாடுகளின் பிரச்சினைகள் குறித்த தகவலை அறிந்த ஒரு நிபுணராகக் கருதப்படுகிறார். வியன்னாவில் உள்ள பன்னாட்டு அணுசக்தி முகமையத்தில், இவர் நான்கு ஆண்டுகள் பிரதிநிதியாக இருந்தார். பிறகு 2011 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். 2004 முதல் 2005 வரை இந்திய அமைச்சின் வெளியுறவு செயலாளர் அலுவலகத்தில் இயக்குநராக இருந்தார். [4]


தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சையத் அக்பருதீன் 1960 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி கேரளாவில் பிறந்தார். இவரது தந்தை உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் பத்திரிக்கை மற்றும் தகவல் தொடர்புத் துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் சையத் பசிருதீன் ஆவார். இவர் பல ஆண்டுகளாக இத்துறையின் தலைவராகவும், கத்தார் நாட்டின் இந்திய தூதராகவும், டாக்டர் பி.ஆர்.அம்ப்தேகர் திறந்தவெளி பல்கலைகழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். மேலும் புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவின் இயக்குனர் ஆவார். இவரது தாயார் பேராசிரியர். (டாக்டர்) ஜெபா பசிருதீன், பிரசாந்தி நிலயம் வளாகத்தில் உள்ள ஸ்ரீ சத்திய சாயி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராக இருந்தார். சத்தியய சாயி பாபா குறித்து 2 புத்தகங்களையும் எழுதியுள்ளார். [5]

சையத் அக்பருதீன் ஹைதராபாத் பொதுப் பள்ளியில் படித்தார். [6] அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர். [7] [8]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "India's New UN Envoy Meets His Pakistani Counterpart". Press Trust Of India. NDTV Convergence Limited. http://www.ndtv.com/india-news/indias-new-un-envoy-meets-his-pakistani-counterpart-1265722. பார்த்த நாள்: 14 January 2016. 
  2. "Syed Akbaruddin made India's permanent representative to the UN in major MEA rejig". http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/syed-akbaruddin-made-indias-permanent-representative-at-the-un-in-major-mea-rejig/articleshow/49085480.cms. பார்த்த நாள்: 25 September 2015. 
  3. "Hyderabadis lead India's charge on Article 370 at UN | Hyderabad News - Times of India". The Times of India.
  4. "West Asia expert Syed Akbaruddin to be MEA's spokesperson". http://indiatoday.intoday.in/story/syed-akbaruddin-takes-over-as-mea-spokesperson/1/163305.html. 
  5. http://www.saibaba.ws/teachings/quranicmyths/sbqm.htm
  6. https://www.newindianexpress.com/nation/2019/aug/21/syed-akbaruddin-grateful-to-alma-mater-hyderabad-public-school-2022253.html
  7. "Welcome to Permanent Mission of India to the UN, New York". www.pminewyork.gov.in.
  8. "MEA | India and the United Nations". www.mea.gov.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையத்_அக்பருதீன்&oldid=3820291" இலிருந்து மீள்விக்கப்பட்டது