உள்ளடக்கத்துக்குச் செல்

சைமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைமா
மஞ்சள் அலகு மீன்கொத்தி , (சைமா டொரோடோரோ)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லெசன், 1827
மாதிரி இனம்
சைமா டொரோடோரோ[1]
லெசன், 1827

சைமா என்பது நியூ கினி மற்றும் வடகிழக்கு ஆத்திரேலியாவில் காணப்படும் அல்செடினிடே குடும்பத்தில் உள்ள மர மீன்கொத்தி பேரினமாகும்.

1827-இல் பிரெஞ்சு அறுவை சிகிச்சை நிபுணரும் இயற்கை ஆர்வலருமான ரெனே லெசன் என்பவரால் இந்த பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] சைமா என்பது கிரேக்கப் புராணங்களில் காணப்படும் கடல் வாழ் இளம் உயிரியின் பெயர்.

இந்தப் பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. அவை:[3]

படம் விலங்கியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
சைமா மெகர்ஹிஞ்சா மலை மீன்கொத்தி நியூ கினி
சைமா டொரோடோரோ மஞ்சள் அலகு மீன்கொத்தி நியூ கினி மற்றும் ஆத்திரேலியாவின் வடக்கு கேப் யோர்க் தீபகற்பம்

இரண்டு சிற்றினங்களின் முதிர்வடைந்த மீன்கொத்திகள் பிரகாசமான மஞ்சள் அலகினைக் கொண்டுள்ளன. மலை மீன்கொத்தி நியூ கினி மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும். நியூ கினியாவின் தாழ் நிலப் பகுதிகளிலும், வடகிழக்கு ஆத்திரேலியாவில் உள்ள கேப் யோர்க் தீபகற்பத்திலும் மஞ்சள்-அலகு மீன்கொத்தி காணப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Alcedinidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. Retrieved 2023-07-25.
  2. René Lesson (1827). "Nouveau gendre d'oiseau" (in French). Bulletin Universel des Sciences et de l'Industrie 11: 443. https://www.biodiversitylibrary.org/page/4828758. 
  3. "Rollers, ground rollers & kingfishers". World Bird List Version 7.2. International Ornithologists' Union. 2017. Retrieved 17 May 2017.
  4. Fry, C. Hilary; Fry, Kathie; Harris, Alan (1992). Kingfishers, Bee-eaters, and Rollers. London: Christopher Helm. pp. 171–174. ISBN 978-0-7136-8028-7.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Syma
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைமா&oldid=3868854" இலிருந்து மீள்விக்கப்பட்டது