சைமன் கின்பெர்க்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைமன் கின்பெர்க்கு
பிறப்புசைமன் டேவிட் கின்பெர்க்கு
ஆகத்து 2, 1973 (1973-08-02) (அகவை 50)
ஹேமர்ஸ்மித், இலண்டன், இங்கிலாந்து
தேசியம்அமெரிக்கன்
பணிதிரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2000–இன்று வரை
துணைவர்கிளியோ வேட் (நிச்சயதார்த்தம்)
வாழ்க்கைத்
துணை
மாலி ஹெல்ட்
(தி. 2001; ம.மு. 2017)
பிள்ளைகள்4

சைமன் டேவிட் கின்பெர்க்கு (ஆங்கில மொழி: Simon David Kinberg)[1] (பிறப்பு: 2 ஆகத்து 1973)[2] என்பவர் பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க நாட்டுத் திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார்.

இவர் 20ஆம் சென்சுரி பாக்ஸ் திரைப்பட உரிமையில் எக்ஸ்-மென் போன்ற பல படங்களை எழுதியுள்ளார் அல்லது தயாரித்துள்ளார், மேலும் மிஸ்டர் & மிசஸ் சிமித் மற்றும ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற படங்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார். இவர் சிண்டரெல்லா மற்றும் த மார்சன் உள்ளிட்ட பிற படங்களில் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார், அத்துடன் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான எக்ஸ்-மென் திரைப்படமான எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் 2 ஆகத்து 1973 ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் இலண்டனில் உள்ள ஹேமர்ஸ்மித்தில் அமெரிக்க பெற்றோரான மோனிகா மெனெல் கின்பெர்க் மற்றும் நியூயார்க் நகரில் பிறந்த எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளரான ஜூட் கின்பெர்க் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[3] ஆறு வயதிலிருந்து, இவர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வளர்ந்தார். இவர் யூதர் ஆவார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Weddings; Mali Heled, Simon Kinberg". The New York Times. July 29, 2001 இம் மூலத்தில் இருந்து May 27, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150527175926/http://www.nytimes.com/2001/07/29/style/weddings-mali-heled-simon-kinberg.html. 
  2. Frank Lovece (January 26, 2016). "Everyone into the Deadpool: Producer Simon Kinberg helps revive Marvel's raunchy superhero". Film Journal International இம் மூலத்தில் இருந்து January 28, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160128182927/http://www.filmjournal.com/features/deadpool-marvel-simon-kinberg-producer-interview. 
  3. "Index entry". FreeBMD. ONS. பார்க்கப்பட்ட நாள் 14 January 2022.
  4. "IGN Interviews Simon Kinberg". IGN. September 30, 2005. Archived from the original on October 5, 2015. பார்க்கப்பட்ட நாள் August 25, 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைமன்_கின்பெர்க்கு&oldid=3859799" இலிருந்து மீள்விக்கப்பட்டது