சேற்று பூனைப்பருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேற்று பூனைப்பருந்து
Circus aeruginosus samiec4.jpg
ஆண் பருந்து
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
துணைவகுப்பு: Neornithes
உள்வகுப்பு: Neognathae
பெருவரிசை: Neoaves
வரிசை: அசிபித்ரிபார்மசு
குடும்பம்: அசிபித்ரிடே
பேரினம்: Circus
இனம்: C. aeruginosus
இருசொற் பெயரீடு
Circus aeruginosus
(L, 1758)
Circus aeruginosus distribution map.png
Dark green: present all year
Light green: nesting only
Blue: wintering only
Circus aeruginosus

சேற்று பூனைப்பருந்து (Western Marsh Harrier - Circus aeruginosus) ஒரு வலசை போகும் வேட்டைப்பருந்து (Harrier)[2] வகையாகும். சதுப்பு நிலங்களிலும் ஏரிகளிலும் நெல்வயல்களிலும் இப்பறவையைக் காணலாம்.

உடல் தோற்றம்[தொகு]

 • 48 cm முதல் 58 cm வரை நீளமுள்ளது.[3]
 • ஆண்: பறக்கும்போது இறக்கையின் உட்புறப் பகுதி செம்பழுப்பாகவும் அதன் நுனி கருப்பாகவும் இருக்கும்; அவற்றிற்கு இடைப்பட்ட பகுதி சாம்பல் நிறமாக இருக்கும். இறக்கையின் வெளிப்புறப் பகுதி கரும்பழுப்பாகவும் காணப்படும்.
 • பெண்: முழுவதும் கரும்பழுப்பாகக் காணப்படும்; உச்சந்தலையும் இறக்கையின் மேல்முனையும் வெளிர் மஞ்சள் நிறத்திலிருக்கும்.[4]
 • முதிர்வடையாத பருந்து: முழுவதும் கரும்பழுப்பு நிறத்திலிருக்கும். பெண் பருந்துக்குரிய அடையாளமான வெளிர் மஞ்சள் தலை/இறக்கை இருக்காது.
 • பொது: பார்வையாளரை நோக்கிப் பறந்து வரும்போது இறக்கை 'V' வடிவத்திலிருக்கும்.[5]

கள இயல்புகள்[தொகு]

Eurasian Marsh Harrier (Circus aeruginosus) in Kolkata W.jpg
 • தரையிலோ புதரிலோ குட்டையான கம்பங்களிலோ நீண்ட நேரம் அமைதியாகக் காத்திருக்கும்; சில மீட்டர் உயரம் பறந்து நகங்களை நீட்டியவாறு தரையிறங்கும்.
 • அனைத்துப் பருந்துகளும் வயல்வெளித் தரையிலேயே சேர்ந்து அடைந்து ஓய்வெடுக்கும்.[6]
 • வாத்து, உள்ளான் உள்ளிட்ட சிறு பறவைகளை வேட்டையாடுவோருக்கு நன்கு அறிமுகமான பருந்து இது. அடிபட்ட பறவையை வேடர்கள் வந்து எடுப்பதற்குள் கவர்ந்து சென்று விடும்.[7]

உட்பிரிவு[தொகு]

கலைச்சொற்கள்[தொகு]

rufous = செம்பழுப்பு; harrier = வேட்டைப்பருந்து; dark brown = கரும்பழுப்பு;

மேற்கோள்கள்[தொகு]

 1. "Circus aeruginosus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 16 July 2012.
 2. தமிழ் இணையக் கல்விக்கழக கலைக்களஞ்சியம் -பக். 568
 3. Pocket Guide to the Birds of the INDIAN Subcontinent - Grimmett, Carol& Tim Inskipp 2001 Reprint - பக். 156
 4. "r3dd0 வலைப்பூ-2வது படம்". மூல முகவரியிலிருந்து 2013-04-23 அன்று பரணிடப்பட்டது.
 5. ஏவிபேர்சு.காம்
 6. Birds of Tamilnadu - Dr. K. Ratnam - #43
 7. The Book of Indian Birds - Salim Ali - BNHS 1941 - p. 258