சேந்தமங்கலம் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேந்தமங்கலம் கோயில் இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரா [1]வட்டத்தில் சோரோடு பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சிவன், ஐயப்பன் ஆவர்.

துணைத்தெய்வங்கள்[தொகு]

கணேஷ், விஷ்ணு, அன்னபூர்ணேஸ்வரி ஆகிய துணைத்தெய்வங்களும் இக்கோயிலில் உள்ளன.

சிறப்பு[தொகு]

இது கேரளாவின் பழமையான கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. த்வஜ பிரதிஷ்டை கொண்ட மிகச் சில கோயில்களில் ஒன்று என்ற பெருமையை இக்கோயில் பெற்றுள்ளது. இது இரண்டாவது சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் சபரிமலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் பலர் அங்கு செல்ல முடியாமல் தவித்தபோது, அங்கு செல்வதற்கு பதிலாக இங்கு வந்திருந்தனர். உள்ளூர் மக்களின் உதவியுடன் 2018இல் சீரமைக்கப்பட்டது.

விழாக்கள்[தொகு]

இக்கோயில் விழா பொதுவாக ஏப்ரல் மாதத்தில் நடைபெறுகிறது. விழாவின்போது மேடையில் இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேந்தமங்கலம்_கோயில்&oldid=3836987" இலிருந்து மீள்விக்கப்பட்டது