செ. சிவசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செ. சிவசாமி (C. Sivasamy)(பிறப்பு 27 சூன் 1957) என்பவர் இந்திய அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியினைச் சார்ந்த இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சிவசாமி, 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.[2] 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளர் கே. சுப்பராயனுக்கு எதிராக போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.[3]

நாடாளுமமன்ற உறுப்பினர்[தொகு]

சிவசாமி 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக திருப்பூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.
  2. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. 1996 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது 7 அக்டோபர் 2010 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._சிவசாமி&oldid=3479079" இலிருந்து மீள்விக்கப்பட்டது