உள்ளடக்கத்துக்குச் செல்

செவ்விடை அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செவ்விடை அணில்
சீனாவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகெலும்பி
வகுப்பு:
பாலூட்டி
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
திரெமோமிசு
இனம்:
தி. பைரோமெரசு
இருசொற் பெயரீடு
திரெமோமிசு பைரோமெரசு
(தாமசு, 1895)

செவ்விடை அணில் (Red-hipped squirrel)(திரெமோமிசு பைரோமெரசு) என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும்.[2] இது சீனா மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளிலும் காணப்படுகிறது.

விளக்கம்

[தொகு]

செவ்விடை அணிலின் தலை-உடல் நீளம் 194-210 மி.மீ. ஆகும். இதனுடைய வால் 140-162 மி.மீ. நீளமுடையது. இதனுடைய உடல் எடை 245 கிராம் ஆகும். செவ்விடை அணிலின் ஒவ்வொரு தொடையிலும் வெளிப்படையான சிவப்புத் திட்டு உள்ளது. வாலின் கீழ்ப் பகுதி முழுமையும் தெளிவான சிவப்பு நிறத்தில் காணப்படும். பைரோமெரசு என்ற பரிந்துரைக்கப்பட்ட துணையினத்தின் தொடைகளில் சிவப்பு நிற திட்டுகள் உள்ளன. ஆனால் தலை சிவப்பு நிறத்தில் இல்லை. ரியுடோனென்சிசு துணையினம் சிவப்பு நிற இடுப்புத் திட்டுகளுடன் முற்றிலும் சிவப்பு நிற தலையுடன் கூடியது.[3]

வாழிடம்

[தொகு]

பாறை நிலப்பரப்பு மற்றும் ஒத்த வாழ்விடங்களில் உள்ள துளைகளில் செவ்விடை அணில் பரவலாகக் காணப்படுகிறது.

நிலை

[தொகு]

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது சீனாவில் அச்சுறுத்தலுக்கு அண்மித்த இனமாகப் பிராந்திய ரீதியாக செம்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Smith, A. T.; Johnston, C. H. (2008). "Dremomys pyrrhomerus". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/6823/0. பார்த்த நாள்: 6 January 2009. 
  2. Thorington, R.W. Jr. and R.S. Hoffman. (2005). Family Sciuridae. pp. 754–818 In Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D.E. Wilson and D.M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.
  3. "Dremomys pyrrhomerus (Thomas, 1895)". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்விடை_அணில்&oldid=3750274" இலிருந்து மீள்விக்கப்பட்டது