செல்லையா இராசதுரை
செ. இராசதுரை C. Rajadurai | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் மட்டக்களப்பு | |
பதவியில் 1956–1989 | |
முன்னையவர் | ஆர். பி. கதிராமர் |
மட்டக்களப்பு மாநகர சபையின் 1வது முதல்வர் | |
பதவியில் 1967–1968 | |
பின்னவர் | ஜே. எல். திசவீரசிங்கி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 சூலை 1927 சிங்களவாடி, மட்டக்களப்பு, இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி |
துணைவர் | இராஜலட்சுமி |
இனம் | இலங்கைத் தமிழர் |
செல்லையா இராசதுரை (Chelliah Rajadurai, பிறப்பு: 27 யூலை 1927[1]) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் இலங்கை அமைச்சரும், எழுத்தாளரும், சிறந்த பேச்சாளரும் ஆவார். 1956 முதல் 1989 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]இராசதுரை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்து, பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை முடித்தார். இராசதுரை ஊடகவியலாளரும், சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.[2]
அரசியலில்
[தொகு]இராசதுரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக முதன் முதலாக மட்டக்களப்பு தொகுதியில் 1956 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] தொடர்ந்து மார்ச் 1960, யூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4][5][6][7] தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து 1977 தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[8]
1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22 இல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1979 மார்ச் 7 இல் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.[9][10][11] பின்னர் இவர் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார்.[12]. பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து வருகிறார்.
இராசதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1967 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராக ஓராண்டு காலத்திற்குப் பதவியில் இருந்தார்.[13]
எழுதிய நூல்கள்
[தொகு]- ராசாத்தி – குறும் புதினம் - 1982
- பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் - சொற்பொழிவுகளின் தொகுப்பு
- அன்பும் அகிம்சையும் - தேசிய ஒற்றுமைக்கு வழி – 1984
- மிஸ் கனகம் - சிறுகதைத் தொகுப்பு
- இலங்கையில் மகா அஸ்வமேதயாகம்
விருதுகள்
[தொகு]- இலக்கிய கலாநிதிப் பட்டம் - மதுரைப் பல்கலைக்கழகம்
- சொல்லின் செல்வர்
சமூகப் பணிகள்
[தொகு]- இவர் அமைச்சராகப் பதவியில் இருந்த் போது சுவாமி விபுலாநந்தரைத் தேசிய வீரராக அறிவித்து அஞ்சல் தலை வெளியிட்டார்.
- விபுலாநந்தரின் மதங்கசூளாமணியை மறுபதிப்புச் செய்து வெளியிட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajadurai, Chelliah". இலங்கைப் பாராளுமன்றம்.
- ↑ Sri Kantha, Sachi. "One Hundred Tamils of the 20th Century: V.Navaratnam". Tamil Nation.
- ↑ "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-01-11.
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2014-01-11.
- ↑ "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-01-11.
- ↑ "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2014-01-11.
- ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2014-01-11.
- ↑ "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2014-01-11.
- ↑ Rajasingham, K. T. "Chapter 27: Horsewhip Amirthalingham". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2002-06-22. பார்க்கப்பட்ட நாள் 2014-01-11.
- ↑ Wickramasinghe, Wimal (15 யனவரி 2008). "Saga of crossovers, expulsions, resignations, terminations, death and by-elections in Sri Lanka". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304062122/http://www.island.lk/2008/01/15/features1.html.
- ↑ Jayawarden, Kishali Pinto (7 ஏப்ரல் 2002). "That conscience Bill coming again". சண்டே டைம்ஸ். http://www.sundaytimes.lk/020407/focus.html.
- ↑ "TELO opposes Rajadurai attending Chelva anniversary in Jaffna". தமிழ்நெட். 23 ஏப்ரல் 2012. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35120.
- ↑ "History of Municipal Council". மட்டக்களப்பு மாநகர சபை. Archived from the original on 2013-07-27. பார்க்கப்பட்ட நாள் 2014-01-11.
- 1927 பிறப்புகள்
- இலங்கை அமைச்சர்கள்
- இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்
- வாழும் நபர்கள்
- இலங்கையின் 3வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 4வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 5வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 7வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல்வாதிகள்
- ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள்
- மட்டக்களப்பு மாவட்ட நபர்கள்
- மலேசியத் தமிழர்
- ஈழத்து எழுத்தாளர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- மட்டக்களப்பு முதல்வர்கள்