மட்டக்களப்பு மாநகர சபை
மட்டக்களப்பு மாநகர சபை | |
|---|---|
| வகை | |
| வகை | |
| தலைமை | |
முதல்வர் | சிவம் பாக்கியநாதன், இலங்கைத் தமிழரசுக் கட்சி 11 சூன் 2025 முதல் |
துணை முதல்வர் | வைரமுத்து தினேசுகுமார், இலங்கைத் தமிழரசுக் கட்சி 11 சூன் 2025 முதல் |
| கட்டமைப்பு | |
| உறுப்பினர்கள் | 34 |
அரசியல் குழுக்கள் | அரசு (16)
எதிர் (18) |
ஆட்சிக்காலம் | 4 ஆண்டுகள் |
| தேர்தல்கள் | |
| கலப்புத் தேர்தல் | |
அண்மைய தேர்தல் | 6 மே 2025 |
| வலைத்தளம் | |
| https://batticaloa.mc.gov.lk/ | |
மட்டக்களப்பு மாநகர சபை (Batticaloa Municipal Council, BMC) கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பு நகரை நிர்வாகம் செய்துவரும் உள்ளூராட்சிச் சபை ஆகும்.[1] மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குள் அடங்கும் பகுதிகள் இந்த மாநகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.[2] இது வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இது 20 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, மட்டக்களப்பு மாநகரசபைக்கு 20 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 18 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 38 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[3][4]
வரலாறு
[தொகு]1884 இற்கும் 1932 இற்கும் இடையில் மட்டக்களப்பு ஒரு உள்ளூராட்சி வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டது.[5] 1933 இல் எட்டு வட்டாரங்களைக் கொண்ட நகரசபையாக இந்த நகரம் தரம் உயர்த்தப்பட்டது.[5] 1944 இல் வட்டாரங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட்டது. 1956 இல் 14 ஆக அதிகரிக்கப்பட்டது. 1967 இல் நகரசபை மண்முனை வடக்கு - கிழக்கு (வடக்கு பகுதி) கிராமசபையுடன் இணைக்கப்பட்டு நகரசபையாக உயர்த்தப்பட்டது.[5] அப்போது இது 19 வட்டாரங்களைக் கொண்டிருந்தது. இதன் முதலாவது முதல்வராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை இருந்தார்.
1974 இல் சபை கலைக்கப்பட்டு, 1983 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறும் வரை சிறப்பு ஆணையர்களால் நிர்வகிக்கப்பட்டது.[5] தேர்தலுக்குப் பிறகு சபையின் அனைத்து உறுப்பினர்களும் பதவியில் இருந்து விலகினர். 1994 இல் உள்ளூர் தேர்தல்கள் நடைபெறும் வரை, மட்டக்களப்பு மாநகரசபை மீண்டும் சிறப்பு ஆணையர்களால் நிர்வகிக்கப்பட்டது.[5] 1988 இல் வலையிறவு கிராமசபையை இது உள்வாங்கியது. 1999 மார்ச் 31 அன்று சபை கலைக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு தேர்தல்கள் நடைபெறும் வரை சிறப்பு ஆணையர்கள் நகரத்தை நிர்வகித்தனர்.
வட்டாரங்கள்
[தொகு]மட்டக்களப்பு மாநகரசபைக்கு பின்வரும் 20 வட்டாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன:[6]
சபை முதல்வர்கள்
[தொகு]மட்டக்களப்பு மாநகர சபையின் தலைவர் "முதல்வர்" என அழைக்கப்படுகிறார்.[5]
தலைவர்கள்
[தொகு]- ஜி. என். திசவீரசிங்கம் - 1935
- எம். சின்னையா - 1936-38
- என். எஸ். இராசையா - 1939-41
- எஸ். ஏ. செல்வநாயகம் - 1942-44
- கே. வி. எம். சுப்பிரமணியம் - 1945-47
- ஜே. எல். திசவீரசிங்கி - 1951-53
- டி. வேலுப்பிள்ளை - 1954-56
- ஏ. எஸ். டி. கனகசபை - 1957-1959
முதல்வர்கள்
[தொகு]- செல்லையா இராசதுரை - 1967-68
- ஜே. எல். திசவீரசிங்கி - 1968-70
- கே. தியாகராசா - 1971-73
- ஈ. அம்பலவாணர் - 1983
- செழியன் பேரின்பநாயகம் - 1994-99
- சிவகீதா பிரபாகரன் - 2008 - 2013
- சரவணபவன் தியாகராஜா - 2018 - 2023
தேர்தல் முடிவுகள்
[தொகு]1983 உள்ளூராட்சித் தேர்தல்
[தொகு]18 மே 1983 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[7]
| கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |
|---|---|---|---|---|
| தமிழர் விடுதலைக் கூட்டணி | 10,993 | 62.75% | 13 | |
| ஐக்கிய தேசியக் கட்சி | 6,229 | 35.55% | 6 | |
| சுயேச்சைக் குழு | 298 | 1.70% | 0 | |
| செல்லுபடியான வாக்குகள் | 17,520 | 100.00% | 19 | |
| செல்லாத வாக்குகள் | 62 | |||
| அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 17,582 | |||
| பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 22,894 | |||
| வாக்குவீதம் | 76.80% | |||
பதவியேற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு சபையின் அனைத்து உறுப்பினர்களும் பதவியில் இருந்து விலகினர்.[5][8] அல்ஜசீரா, ஆசியாஃபவுண்டேஷன், டெய்லி மிரர் ஆகியவை இதற்கு உள்நாட்டுப் போர் காரணம் என்று கூறுகின்றன;[9][10] ராய்ட்டர்ஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை இதற்கு விடுதலைப் புலிகளின் தேர்தல் புறக்கணிப்பு அழைப்புகள் என்று கூறுகின்றன,[11][12] 1983 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அனைத்து உள்ளூர் அரசாங்கங்களையும் இடைநிறுத்தியதே இதற்குக் காரணம் என்று தமிழ்நெட் கூறுகிறது.[13]
2008 உள்ளூராட்சித் தேர்தல்கள்
[தொகு]2008 மார்ச் 10 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[14]
| கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |
|---|---|---|---|---|
| ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (த.ம.வி.புலிகள் உள்ளடங்கலாக) | 14,158 | 53.77% | 11 | |
| சுயேச்சைக் குழு 1 (ஈபிடிபி, ஈபிஆர்எல்எஃப், புளொட்) | 9,601 | 36.46% | 6 | |
| சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | 1,788 | 6.79% | 1 | |
| ஈழப் புரட்சி அமைப்பு) | 427 | 1.62% | 1 | |
| தேசிய அபிவிருத்தி முன்னணி | 291 | 1.11% | 0 | |
| சுயேச்சைக் குழு 3 | 43 | 0.16% | 0 | |
| சுயேச்சைக் குழு 2 | 23 | 0.09% | 0 | |
| செல்லுபடியான வாக்குகள் | 26,331 | 100.00% | 19 | |
| செல்லாத வாக்குகள் | 2,822 | |||
| அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 29,153 | |||
| பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 54,948 | |||
| வாக்குவீதம் | 53.06% | |||
சபை முதல்வராக சிவகீதா பிரபாகரன் (தமவிபு), சபை துணை முதல்வராக எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராஜா (தமவிபு) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[15]
2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்
[தொகு]2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 20 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 18 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 38 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் முடிவுகள் வருமாறு:[6]
| கூட்டணிகளும் கட்சிகளும் |
வாக்குகள் | % | வட்டாரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் |
பெற்ற வாக்குகளுக்குரிய கூடுதல் உறுப்பினர்கள் |
உரித்தான முழு உறுப்பினர்களின் எண்ணிக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இதக, புளொட், டெலோ) | 17,469 | 36.72% | 17 | 0 | 17 | |||||||||||||||||||||||||||||||||||||||
| தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் | 7,611 | 16.00% | 0 | 5 | 5 | |||||||||||||||||||||||||||||||||||||||
| ஐக்கிய தேசியக் கட்சி (முகா, அஇமகா ஏனை.) | 6,209 | 13.05% | 0 | 4 | 4 | |||||||||||||||||||||||||||||||||||||||
| தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ), ஈபிஆர்எல்எஃப்) | 5,465 | 11.49% | 1 | 3 | 4 | |||||||||||||||||||||||||||||||||||||||
| இலங்கை சுதந்திரக் கட்சி | 5,030 | 10.57% | 1 | 3 | 4 | |||||||||||||||||||||||||||||||||||||||
| சுயேச்சைக் குழு 2 | 1,347 | 2.83% | 1 | 0 | 1 | |||||||||||||||||||||||||||||||||||||||
| சுயேச்சைக் குழு 1 | 653 | 1.37% | 0 | 1 | 1 | |||||||||||||||||||||||||||||||||||||||
| ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 553 | 1.16% | 0 | 1 | 1 | |||||||||||||||||||||||||||||||||||||||
| சுயேச்சைக் குழு 4 | 533 | 1.12% | 0 | 1 | 1 | |||||||||||||||||||||||||||||||||||||||
| நல்லாட்சிக்கான தேசிய முன்னணி | 476 | 1.00% | 0 | 0 | 0 | |||||||||||||||||||||||||||||||||||||||
| தமிழர் சமூக சனநாயகக் கட்சி | 471 | 0.99% | 0 | 0 | 0 | |||||||||||||||||||||||||||||||||||||||
| அகில இலங்கை மக்கள் காங்கிரசு | 417 | 0.88% | 0 | 0 | 0 | |||||||||||||||||||||||||||||||||||||||
| சுயேச்சைக் குழு 3 | 382 | 0.73% | 0 | 0 | 0 | |||||||||||||||||||||||||||||||||||||||
| சனநாயக தேசிய இயக்கம் | 345 | 0.73% | 0 | 0 | 0 | |||||||||||||||||||||||||||||||||||||||
| சுயேச்சைக் குழு 5 | 329 | 0.69% | 0 | 0 | 0 | |||||||||||||||||||||||||||||||||||||||
| மக்கள் விடுதலை முன்னணி | 279 | 0.59% | 0 | 0 | 0 | |||||||||||||||||||||||||||||||||||||||
| செல்லுபடியான வாக்குகள் | 47,569 | 100.00% | 20 | 18 | 38 | |||||||||||||||||||||||||||||||||||||||
| செல்லாத வாக்குகள் | 622 | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 48,191 | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 63,033 | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| வாக்குவீதம் | 76.45% | |||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டக்களப்பு மாநகரசபைக்குத் முதல்வராக தியாகராசா சரவணபவன் (இதக), துணை முதல்வராக கந்தசாமி சத்தியசீலன் (இதக) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[6]
2025 உள்ளூராட்சித் தேர்தல்கள்
[தொகு]2025 மே 6 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[16] 20 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 14 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 34 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
| கூட்டணிகளும் கட்சிகளும் |
வாக்குகள் | % | வட்டாரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் |
பெற்ற வாக்குகளுக்குரிய கூடுதல் உறுப்பினர்கள் |
உரித்தான முழு உறுப்பினர்களின் எண்ணிக்கை | |
|---|---|---|---|---|---|---|
| இலங்கைத் தமிழரசுக் கட்சி | 18,642 | 43.72% | 16 | 0 | 16 | |
| தேசிய மக்கள் சக்தி | 11,062 | 25.94% | 3 | 6 | 9 | |
| சுயேச்சைக் குழு | 5,325 | 12.49% | 1 | 3 | 4 | |
| தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் | 4,303 | 10.09% | 0 | 3 | 3 | |
| ஐக்கிய மக்கள் சக்தி | 3,052 | 7.16% | 0 | 2 | 2 | |
| ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 255 | 0.60% | 0 | 0 | 0 | |
| செல்லுபடியான வாக்குகள் | 42,639 | 100.00% | 20 | 14 | 34 | |
| செல்லாத வாக்குகள் | 462 | |||||
| அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 43,101 | |||||
| பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 70,124 | |||||
| வாக்குவீதம் | 61.46% | |||||
2025 சூன் 11 இல் நடைபெற்ற மட்டக்களப்பு மாநகர சபைக்கான முதல்வர் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சிவம் பாக்கியநாதன் போட்டியின்றித் தெரிவிவு செய்யப்பட்டார். துணை முதல்வராக வைரமுத்து தினேசுகுமார் (இதக) தெரிவு செய்யப்பட்டார்.[17]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Batticaloa Municipal Council". இலங்கை அரசு. Archived from the original on 28 September 2011. Retrieved 3 April 2011.
- ↑ "Geography". Batticaloa Municipal Council. Archived from the original on 5 September 2011. Retrieved 2 April 2011.
- ↑ "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017.
- ↑ "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 "History of Municipal Council". Batticaloa Municipal Council. Archived from the original on 27 July 2013.
- ↑ 6.0 6.1 6.2 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
- ↑ Sarveswaran, K. (2005). The Tamil United Liberation Front: Rise and Decline of a Moderate Ethnic Party in Sri Lanka (1976-2000). Jawaharlal Nehru University.
- ↑ Lanka cannot afford to despise UN system
- ↑ In Northern Sri Lanka, Local Governments Prepare for Post-War Development
- ↑ Sri Lankans vote in local elections
- ↑ "Sri Lanka's war-weary north votes amid intimidation, mistrust". ராய்ட்டர்ஸ். Archived from the original on 9 September 2012. Retrieved 30 June 2017.
- ↑ US State Department
- ↑ "TNA urges PM to put off NE local polls". தமிழ்நெட். 11 September 2002. Retrieved 4 July 2009.
- ↑ "Local Authorities Election 2008 Final Results Batticaloa Municipal Council". Department of Elections, Sri Lanka. Archived from the original on 17 June 2010. Retrieved 2 April 2011.
- ↑ "UPFA-TMVP councilors take oath in Colombo". TamilNet. 18 March 2008. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25013.
- ↑ "Local Authorities Election - 6.05.2025 Batticaloa District Batticaloa Municipal Council" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 13 June 2025. Retrieved 9 June 2025.
- ↑ "மட்டு. மாநகர சபையின் 8வது முதல்வராக சிவம் பாக்கியநாதனும் பிரதி முதல்வராக தினேஸ்குமாரும் தெரிவு". வீரகேசரி. Archived from the original on 13 June 2025. Retrieved 13 June 2025.