செருமன்விங்ஸ் விமானம் 9525

ஆள்கூறுகள்: 44°16′48.3″N 6°26′19.5″E / 44.280083°N 6.438750°E / 44.280083; 6.438750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செருமன்விங்ஸ் விமானம் 9525
மே, 2014இல் எடுக்கப்பட்ட விபத்தில் சிக்கிய வானூர்தியின் படம்
Occurrence சுருக்கம்
நாள்24 மார்ச்சு 2015 (2015-03-24)
இடம்பிரான்சு ஆப்சு, தென்பிரான்சு[1]
44°16′48.3″N 6°26′19.5″E / 44.280083°N 6.438750°E / 44.280083; 6.438750
பயணிகள்144[2]
ஊழியர்6 (2 விமானிகள் உட்பட)[2][3]
உயிரிழப்புகள்150 (நம்பப்படுவது)[4]
தப்பியவர்கள்0
வானூர்தி வகைஏர்பஸ் எ320-211
இயக்கம்செர்மன்விங்ஸ்
வானூர்தி பதிவுD-AIPX
பறப்பு புறப்பாடுபார்சிலோனா எல் பிராட் வானூர்தி நிலையம், எசுப்பானியா
சேருமிடம்தியூசல்டோர்ஃபு வானூர்தி நிலையம், செருமனி

செருமன்விங்ஸ் விமானம் 9525 (Germanwings Flight 9525, 4U9525) என்பது பார்செலோனாவிலிருந்து தியூசல்டோர்ஃபு வரை செல்லும் செர்மன்விங்சு நிறுவனத்தால் இயக்கப்படும் பன்னாட்டு பயணிகள் வானூர்தியாகும். இது செருமனியின் லுஃப்தான்சா வானூர்தி நிறுவனத்தின் குறைந்த விலை வானூர்திப்பிரிவாகும். ஏர்பஸ் ஏ320-200 ரக வானூர்தி 2015 மார்ச்சு 24 அன்று பிரான்சில் ஆல்ப்ஸ் மலையில் நீசூ நகரின் வடமேற்கே 100 கிமீ தொலைவில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 144 பயணிகளும் 6 பணியாளர்களும் உயிரிழந்தனர்.[5][6][7]

இவ்விபத்து செருமன்விங்க்சு வானூர்தியின் துணை வானோடி 27-அகவையுள்ள அந்திரேயாசு லூபிட்சு வேண்டுமென்றே வானூர்தியை மலையில் மோதவிட்டுள்ளார் எனவும், இவர் மனத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர் என்றும் பிரெஞ்சு மற்றும் செருமானிய வான்போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.[8]

பின்னணி[தொகு]

வானூர்தி[தொகு]

பயண தடம், புறப்பட்ட & விபத்து நேர்ந்த நேரம்

விபத்துக்குள்ளான ஏர்பஸ் ஏ320 ரகத்தைச் சேர்ந்த வானூர்தி 24-ஆண்டுகள் பழமையானதாகும். இது 1990 நவம்பர் 29 இல் தனது பறப்பை ஆரம்பித்தது.[9] மொத்தம் 58,300 பறப்பு மணித்தியாலங்களில் 46,700 தடவைகள் இது பறந்துள்ளது.[10]

வானோடிகள்[தொகு]

தேசியம் வாரியாக வானூர்தியில் பயணித்தவர்கள்[11]
தேசியம் எண். மூலம்
 செருமனி 71 [12]
 எசுப்பானியா 51 [13]
 அர்கெந்தீனா 3 [14]
 கசக்ஸ்தான் 3 [15]
 ஐக்கிய இராச்சியம் 3 [16]
 ஐக்கிய அமெரிக்கா 3 [17]
 ஆத்திரேலியா 2 [18]
 கொலம்பியா 2 [19]
 ஈரான் 2 [20]
 சப்பான் 2 [21]
 மெக்சிக்கோ 2 [22]
 மொரோக்கோ 2 [23]
 வெனிசுவேலா 2 [24]
 பெல்ஜியம் 1 [25]
 சிலி 1 [26]
 டென்மார்க் 1 [27]
 இசுரேல் 1 [28]
 நெதர்லாந்து 1 [29]
மொத்தப் பயணிகள் 150
இரட்டைக் குடியுரிமை உடையோர் 4

தலைமை வானோடி காப்டன் பாட்ரிக் சொன்டன்ஹைமர்,[30] 10 ஆண்டுகள் வரை (6000 பறப்பு மணிகள்) செருமன்விங்சு, லுஃப்தான்சா, கொன்டோர் சேவைகளின் வானோட்டியாகப் பணியாற்றியுள்ளார்.[30][31][32]

துணை வானோடி முதலாவது அதிகாரி அந்திரியாசு லூபிட்சு (27).[33][34] இவர் மனத்தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும்,[35] இதனால் 2009 ஆம் ஆண்டில் வானோடிப் பயிற்சியின் போது இவர் சில காலம் விடுமுறை எடுத்துக் கொண்டார்.[36] இவர் 630 பறப்பு மணிகள் பறந்த அனுபவம் உள்ளவர்.[37]

பயணிகள்[தொகு]

விபத்துக்குள்ளான வானூர்தியில் 144 பயணிகள் சென்றிருந்தனர். மொத்தம் 18 நாடுகளை சேர்ந்த இவர்களில் பெரும்பாலானோர் செருமனியரும் எசுப்பானியரும் ஆவர். இவர்களில் சிலர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களும் அடங்குவர்.[38]

பயணிகளில் 18 பேர் செருமானியப் பாடசாலை மாணவர்களும், 2 ஆசிரியர்களும் அடங்குவர். இவர்கள் பயிற்சிக்காக பார்செலோனா சென்று திரும்பியிருந்தனர்.[39][40] செருமனியைச் சேர்ந்த இரண்டு புகழ்பெற்ற ஒபேரா பாடகர்களும் பயணிகளில் அடங்குவர்.[41]

விபத்து[தொகு]

வானூர்தி 9295 பார்சிலோனாவின் எல் பிராட் வானூர்தி நிலையத்தில் 10:01:12 மஐநே (09:01.12 ஒஅநே) மணிக்கு புறப்பட்டது. தியூசல்டோர்ஃபு வானூர்தி நிலையத்திற்கு 1:39 மஐநே (10:39 ஒஅநே) வர வேண்டும். வானூர்தி புறப்பட குறிக்கப்பட்டிருந்த நேரம் 09:35 மஐநே (08:35 ஒஅநே).

பிரெஞ்சு வான் வழி போக்குவரத்து அதிகாரி வானூர்தி உயரத்தில் இருந்து கீழ் நோக்கி பயணித்த போது இன்னலில் இருந்ததாகவும் பின்பு வானூர்தியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

வேண்டுமென்றே வானூர்தி வீழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என நிபுணர்களால் நம்பப்படுகிறது.

காரணம்[தொகு]

இந்த வானூர்தி விபத்துக்கு துணை வானோடி அந்திரியாசு லூபிட்சு [42] காரணம் என்று கூறப்பட்டுள்ளது. முதல் வானோடி வானூர்தியின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும் படி முதல் வானோடியிடம் கூறுவதும் அதன் பின் அவரின் இருக்கை நகர்த்தப்படுவதும் பின்னர் அவர் கதவைத்தட்டும்போது இரண்டாவது வானோடி கதவை திறப்பது கேட்கப்படவில்லை என்றும் ஒலிப்பதிவுக்கருவியில் கேட்பதாக கூறப்படுகிறது.[43] இரண்டாவது கருப்புப்பெட்டி கண்டிபிடிக்கப்பட்டுள்ளது, அதன் படி அந்திரியாசு லூபிட்சு வானூர்தியை 100 அடிக்கு செல்லும்படி தானியங்கிக்கு கட்டளை கொடுத்துள்ளார் என்றும் தானியங்கியின் பல முறை வேகத்தை மாற்றி விரைவாக கீழிறங்கும் படி வைத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.[44]

மேற்கோள்கள்[தொகு]

 1. Withnall, Adam (24 March 2015). "A320 crashes: Germanwings Flight down in southern France". The Independent. பார்க்கப்பட்ட நாள் 24 March 2015.
 2. 2.0 2.1 "Un Airbus A320 transportant 148 personnes s'écrase près de Digne-les-Bains". BFMTV. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச்சு 2015.
 3. 150 feared dead after plane crashes in French Alps. Al Jazeera. Retrieved March 24, 2015.
 4. "Confirmed by Police". News 24. பார்க்கப்பட்ட நாள் 24 March 2015.
 5. "France plane crash: No survivors expected, French President says". CNN.com. 24 மார்ச் 2015. http://www.cnn.com/2015/03/24/europe/france-plane-crash/index.html?sr=tw032415franceplanecrash7aVideo. பார்த்த நாள்: 24 மார்ச் 2015. 
 6. "Germanwings airliner crashes in French Alps". பிபிசி. 24 மார்ச் 2015. http://www.bbc.co.uk/news/world-europe-32030270. பார்த்த நாள்: 24 மார்ச் 2015. 
 7. "Germanwings plane crashes in France, up to 150 feared dead". ராய்ட்டர்ஸ். 24 மார்ச் 2015 இம் மூலத்தில் இருந்து 2015-03-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150324132419/http://www.reuters.com/article/2015/03/24/us-france-crash-airbus-lufthansa-idUSKBN0MK0ZP20150324. பார்த்த நாள்: 24 மார்ச் 2015. 
 8. "Airbus 320 crash: What we known about a320 co-pilot Andreas Lubitz". நியூசு.காம். 28 மார்ச் 2015. Archived from the original on 2015-03-28. பார்க்கப்பட்ட நாள் 28 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 9. "4U9525 Accident description". Aviation Safety Network. Archived from the original on 2015-05-24. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 10. Engel, Pamela; Kelley, Michael B. (24 மார்ச் 2015). "A plane with 150 people aboard crashed in France – no survivors expected". Business Insider. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 11. "Airbus A320 Crash in France". BBC News. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 12. "Live: 72 deutsche Opfer bei Germanwings-Absturz" (in de). n-tv. 25 March 2015. http://www.n-tv.de/newsletter/breakingnews/72-deutsche-Opfer-bei-Germanwings-Absturz-article14773486.html. பார்த்த நாள்: 25 March 2015. 
 13. "72 Deutsche waren an Bord der Unglücksmaschine" (in de). Frankfurter Allgemeine Zeitung. 25 March 2015. http://www.elmundo.es/espana/2015/03/25/55129152e2704ee7018b4580.html. பார்த்த நாள்: 25 March 2015. 
 14. "Quiénes eran los argentinos fallecidos en la tragedia aérea de Germanwings en Francia [Who were the Argentinians who died in the Germanwings tragedy in France]" (in es). Infobae. 24 March 2015. http://www.infobae.com/2015/03/24/1717942-quienes-eran-los-argentinos-fallecidos-la-tragedia-aerea-germanwings-francia. பார்த்த நாள்: 25 March 2015. 
 15. "На борту разбившегося во Франции самолета находились трое граждан Казахстана [On board the aircraft crashed in France were three citizens of Kazakhstan]" (in ru). Interfax. 25 March 2015. http://www.interfax.ru/world/432010. பார்த்த நாள்: 25 March 2015. 
 16. "Alps air crash 'killed three Britons'". BBC News. பார்க்கப்பட்ட நாள் 25 March 2015.
 17. "Third American Killed in Germanwings Crash, State Department Says". The Huffington Post. 25 March 2015. பார்க்கப்பட்ட நாள் 25 March 2015.
 18. "Germanwings plane crash: Two Australians among 150 victims of Airbus A320 crash, which included 16 school children". Australian Broadcasting Corporation. 25 March 2015. http://www.abc.net.au/news/2015-03-25/germanwings-airbus-a320-crash-familes-mourn-victims/6345758. பார்த்த நாள்: 25 March 2015. 
 19. "Dos colombianos viajaban en el avión que chocó en los Alpes franceses". Caracol Radio (in ஸ்பானிஷ்). 24 March 2015. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 24 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |trans_title= ignored (help)
 20. "Tasnim Reporter Among Germanwings Crash Victims". Tasnim News Agency. 25 March 2015. http://www.tasnimnews.com/english/Home/Single/694374. பார்த்த நாள்: 25 March 2015. 
 21. "Germanwings crash: why don't we know who was on board Flight 9525?". The Daily Telegraph. பார்க்கப்பட்ட நாள் 26 March 2015.
 22. "SRE identifica a 2 mexicanas que murieron en avionazo [SRE identifies 2 Mexicans killed in aircraft]" (in Spanish). Milenio (Mexico City). 25 March 2015. http://www.milenio.com/internacional/mexicanos_accidente_avion_Francia-avionazo_Francia-aerolinea_Germanwings-Daniela_Ayon_0_487751273.html. பார்த்த நாள்: 25 March 2015. 
 23. "ثنائي مغربي ضمن ضحايا الطائرة المتحطّمة على التراب الفرنسي" [Two Moroccan victims were in the plane that crashed on French soil]. Hespress (in அரபிக்). 24 March 2015. பார்க்கப்பட்ட நாள் 24 March 2015.
 24. "Germanwings Flight 4U9525 victims include opera singers, high school students". CBC News. 25 March 2015. http://www.cbc.ca/news/world/germanwings-flight-4u9525-victims-include-opera-singers-high-school-students-1.3008457. பார்த்த நாள்: 25 March 2015. 
 25. "Belg onder doden vliegtuigcrash [Belgian among the dead in airplane crash]" (in nl). AD. 24 March 2015. http://www.ad.nl/ad/nl/34341/Crash-Airbus-Frankrijk/article/detail/3923529/2015/03/24/Belg-onder-doden-vliegtuigcrash.dhtml. பார்த்த நாள்: 24 March 2015. 
 26. "Chilena figura entre las víctimas fatales de avión accidentado en Francia". EMOL (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 25 March 2015. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)
 27. de Stordeur, Gudmund (24 March 2015). "Dansker blandt de omkomne i flystyrt" [Dane died in plane crash]. nyhederne.tv2.dk (in டேனிஷ்). பார்க்கப்பட்ட நாள் 24 March 2015.
 28. "Israeli among 150 killed in Germanwings crash named". Itamar Eichner. 24 March 2015. http://www.ynetnews.com/articles/0,7340,L-4640615,00.html. பார்த்த நாள்: 24 March 2015. 
 29. "Zeker één Nederlandse dode bij crash Frankrijk [Certainly one Dutch dead in France crash]" (in nl). nos.nl. http://nos.nl/artikel/2026666-zeker-een-nederlandse-dode-bij-crash-frankrijk.html. பார்த்த நாள்: 24 March 2015. 
 30. 30.0 30.1 "Patrick S: Who was Germanwings captain on board crashed flight 9525?". The Independent. 26 மார்ச் 2015. http://www.independent.co.uk/news/world/europe/patrick-s-who-was-germanwings-captain-on-board-crashed-flight-a320-10135934.html. பார்த்த நாள்: 26 மார்ச் 2015. 
 31. "Crash: Germanwings A320 near Barcelonnette on Mar 24th 2015, lost height and impacted terrain". The Aviation Herald. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 32. "Alps plane crash: What we know". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 33. "Andreas Lubitz and Patrick S: What do we know about the pilots on Germanwings flight 4U9525?". The Daily Telegraph. Archived from the original on 2015-03-28. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 34. "Germanwings Co-Pilot Named as Andreas Lubitz". The Wall Street Journal. Dow Jones & Co. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 35. "Andreas Lubitz: First picture of Germanwings pilot and what we know about him". The Daily Telegraph. Archived from the original on 28 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 26 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 36. "Germanwings Plane Crash Investigation". The Guardian. 26 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 37. "Germanwings crash: Who was co-pilot Andreas Lubitz?". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 38. "Germanwings Flight 9525 crash: 2 Americans among 150 killed". AL.com. 25 மார்ச் 2015. http://www.al.com/news/index.ssf/2015/03/germanwings_flight_9525_crash.html. பார்த்த நாள்: 25 மார்ச் 2015. 
 39. "Germanwings A320 Crash Victims Include 15 German Schoolchildren, Local Media Reports". International Business Times. 24 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 40. "16 schoolchildren believed to be aboard Germanwings plane that crashed in Alps". யாகூ! செய்திகள். 24 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 41. "Oleg Bryjak unter den Opfern des Airbus-Absturzes". Deutsche Oper am Rhein. 24 March 2015. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |trans_title= ignored (help)
 42. விமான விபத்து: 'சந்தேக' விமானியின் வீட்டில் ஆதாரங்களை திரட்டியது ஜெர்மன் போலீஸ்
 43. 'ஜெர்மன்விங்ஸ் விமானம் இரண்டாம் விமானியால் வேண்டுமென்றே வீழ்த்தப்பட்டது '
 44. "Germanwings crash: Co-pilot Lubitz 'accelerated descent'". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செருமன்விங்ஸ்_விமானம்_9525&oldid=3846628" இலிருந்து மீள்விக்கப்பட்டது