உள்ளடக்கத்துக்குச் செல்

செருகாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செருகாடு
Cherukad
பிறப்புசெருகாடு கோவிந்த பிசரோடி
(1914-08-26)26 ஆகத்து 1914
செம்மலச்சேரி, பெரிந்தல்மண்ணை, சென்னை மாநிலம், பிரித்தானிய இந்தியா
இறப்பு28 அக்டோபர் 1976(1976-10-28) (அகவை 62)
தொழில்நாடகாசிரியர்,அரசியல் ஆர்வலர், ஆசிரியர்
மொழிமலையாளம்
தேசியம் இந்தியா
வகைநாடகம், புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை
இலக்கிய இயக்கம்முற்போக்கு எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஜீவிதப்பதா, முத்தாசி, மன்னிந்தே மரிள்
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது, கேரள சாகித்திய அகாதமி விருது

செருகாடு கோவிந்த பிசரோடி (Cherukad Govinda Pisharodi) (26 ஆகத்து 1914-28 அக்டோபர் 1976), பொதுவாக செருகாடு என்று அழைக்கப்படும் இவர், மலையாள மொழி நாடகாசிரியரும், புதின எழுத்தாளரும், கவிஞரும் அரசியல் ஆர்வலரும் ஆவார். இவர் இந்தியாவின் கேரள மாநிலத்தில் பொதுவுடைமை இயக்கத்துடன் தொடர்புடையவர்.[1]

வாழ்க்கை வரலாறு.

[தொகு]

பெரிந்தல்மண்ணை வட்டத்தில் உள்ள செம்மலசேரியில் கிழேட்டில் பிசராத் கருணாகர பிசரோடி மற்றும் செருகாட்டில் பிசரோடி நாராயணி பிசரோடியார் ஆகியோருக்கு மகனாக செருகாடு பிறந்தார்.[1] குரு கோபாலன் எழுதச்சனிடம் சமசுகிருதத்தில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, செம்மளா நிதியுதவி மாப்பிளா பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார்.[1] பின்னர் வித்வான் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பட்டாம்பி சமசுகிருதக் கல்லூரியில் விரிவுரையாளராக சேருவதற்கு முன்பு பல பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றினார்.[1]

1936இல், கிழேட்டில் பிசராத் லட்சுமி பிசரோடியரை மணந்தார்.[1] இவர்களது மகன் கே. பி. மோகனனும் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார்.[1]

இலக்கியம்

[தொகு]

ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளின் மலையாள இலக்கியத்தை வரையறுப்பதில் செருகாட்டின் அரசியல் ரீதியான எழுத்துக்கள் செல்வாக்கு செலுத்தியது. இவரது அரசியல் வாழ்க்கை கேரளாவின் முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் தேசபக்தர்களின் வாழ்க்கையுடன் பிணைக்கப்பட்டுள்ளது.[2] கேரளாவின் முற்போக்கு இலக்கிய இயக்கமான தேசாபிமானி ஆய்வு வட்டத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், புரோகமன கலா சாகித்ய சங்கத்தின் முன்னோடியாகவும் இருந்தார்.[1] ஜீவிதப்பதா, தாராவதிதம், மனுஷ்யபந்தங்கள், நாமல் ஓன்னு, மனுஷ்ய இருதயங்கள், ஜன்மபூமி, தேவலோகம், மன்னிந்தே மரிள் (மண்ணின் அடிப்பகுதியில்) முத்தாசி மற்றும் சனிதசா போன்றவை இவரது முக்கியமான படைப்புகளில் சில.[1] இவரது சுயசரிதையான ஜீவிதப்பதா (1974) 1975இல் கேரள சாகித்ய அகாடமி விருதையும், 1977இல் கேந்திர சாகித்ய அகாதமி விருதையும் பெற்றது.[3]

இறப்பு

[தொகு]

செருகாடு 1976 அக்டோபர் 28 அன்று இறந்தார்.[1] செருகாடு விருது என்ற இலக்கிய விருது இவரது நினைவாக வருடந்தோறும் வழங்கப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "ചെറുകാട് ഗോവിന്ദപ്പിഷാരഡി" [Cherukad Govinda Pisharodi] (in மலையாளம்). Kerala Sahitya Akademi. {{cite web}}: Missing or empty |url= (help)
  2. "Remembering Mundassery, Cherukad". தி இந்து (கோழிக்கோடு). 26 October 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/remembering-mundassery-cherukad/article4033477.ece. 
  3. Amaresh Datta (1988). Encyclopaedia of Indian Literature. Vol. 2. p. 1846.
  4. "Cherukad Award presented". தி இந்து. 30 October 2005 இம் மூலத்தில் இருந்து 9 November 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061109005110/http://www.hindu.com/2005/10/30/stories/2005103008610300.htm. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செருகாடு&oldid=4112636" இலிருந்து மீள்விக்கப்பட்டது