உள்ளடக்கத்துக்குச் செல்

செரியமுண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செரியமுண்டம்
சிற்றூர்
செரியமுண்டம் is located in கேரளம்
செரியமுண்டம்
செரியமுண்டம்
கேரளத்தில் அமைவிடம்
செரியமுண்டம் is located in இந்தியா
செரியமுண்டம்
செரியமுண்டம்
செரியமுண்டம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°56′56″N 75°56′53″E / 10.949°N 75.948°E / 10.949; 75.948
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
அஞ்சல் குறியீட்டு எண்
676106
வாகனப் பதிவுKL 55

செரியமுண்டம் (Cheriyamundam) என்பது இந்தியாவின் கேரளத்தில் உள்ள ஒரு சிற்றூர் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். [1] இது 11.95  கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் 25,760 (1991) மக்களைக் கொண்டுள்ளது. இது திரூர் ஆற்றின் அருகே அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான நிலங்கள் முன்பு கோழிக்கோடு சமுத்திரிகள் மற்றும் திருக்கண்டியூர் தேவஸ்வத்தின் கீழ் இருந்தன. 1956-ல் கேரள அரசு நிலச் சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, குத்தகைதாரர்கள் நில உரிமையாளர்களாக ஆக்கப்பட்டனர்.

காணதக்க இடங்கள்

[தொகு]

இந்த ஊராட்சியில் பல பழைய பள்ளிவசல்கள் மற்றும் கோயில்கள் உள்ளன. இரிங்காவூர் ஜும்ஆ மசூதி, வாணியன்னூர் ஜும்ஆ மசூதி, சோப்பந்தே மண்டகம் கோவில் போன்றவை பழமைவாய்ந்த சமய மையங்களாகும். இங்கு ஒரு பழமையான பிரித்தானியர் கால பங்களாவும் உள்ளது.

போக்குவரத்து

[தொகு]

செரியமுண்டம் கிராமம் திரூர் நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 திரூர் வழியாக செல்கிறது. இச்சாலையின் வடக்கு பகுதி கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. நெடுஞ்சாலை எண்.966 பாலக்காடு மற்றும் கோவைக்கு செல்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் திரூரில் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Cheriyamundam Pin Code | Postal Code (Zip Code) of Cheriyamundam, Malappuram, Kerala, India". பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரியமுண்டம்&oldid=3888486" இலிருந்து மீள்விக்கப்பட்டது