உள்ளடக்கத்துக்குச் செல்

செய்ந்நன்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செய்ந்நன்றியை குறிக்கும் விதமாக கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நினைவுச் சின்னம்

செய்ந்நன்றி (Gratitude) என்பது நமக்கு உதவி செய்தவர்களை மறக்காமல் அவர்களுக்குப் பெரிதும் நன்றி உடையவர்களாக இருக்கும் உணர்வு அல்லது மனப்பாங்கு ஆகும். இது பண்டையக் காலத்திலிருந்து வரும் ஒரு சிறந்த மனப்பாங்காக அனைத்து மதங்களிலும் கூறப்படுகிறது[1].இந்த மனப்பாங்கு பற்றி விரிவாக திருவள்ளுவர் எழுதிய திருக்குறளிலும், ஆங்கில தத்துவஞானி ஆடம் சிமித் அவர்களும் விளக்கியுள்ளனர்[2]. செய்ந்நன்றி, 2000 ஆம் ஆண்டிற்கு பிறகே உளவியல் ரீதியாக முறைப்படி ஆய்வு செய்ய ஆரம்பிக்கப்பட்டது. ஏனெனில் அதற்கு முன்புவரை இஃது ஒரு சிறப்புக் குணமாகத் தோன்றவில்லை. செய்ந்நன்றி என்பது ஒரு குறுகிய கால உணர்ச்சி வசப்படுதல் எனவும் இதன் கால அளவு ஒருவருக்கு ஒருவர் வேறுபடும் எனவும் ஆய்வில் அறிந்துள்ளார்கள்[3][4].

நன்றி

[தொகு]

நன்றி என்னும் சொல் தமிழ் மொழியில் ஒருவர் செய்த உதவிக்குத் தங்களது உணர்வின் வெளிப்பாடாகக் கூறப்படுவது ஆகும். பல வேளைகளில் விடைபெறும் பொழுதும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. தான் செய்ய வேண்டிய கடமைகளைத் தன்னால் செய்ய இயலாத பொழுது தன் சார்பாகப் பிறர் அச்செயலைச் செய்து முடிக்கும் நேரத்தில் மிக்க நன்றி எனச் சொல்வது இயல்பாக உள்ளது. தமிழ்ப் பெருநூலான திருக்குறள் செய்ந்நன்றியறிதல் என்னும் ஒரு அதிகாரத்தையே படைத்து நன்றியின் பெருமையைக் கூறியுள்ளது.

திருக்குறள்

[தொகு]

திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் செய்ந்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தில் உதவி செய்தவற்கு செய்ந்நன்றியுடன் இருப்பதைப் பற்றி விளக்கியுள்ளார்.[5]
உதாரணமாக:

101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.
  • தானாக முன் வந்து செய்யும் உதவிக்கு ஈடான செயல் இரு உலகங்களிலும் அரிது.

கடன்பட்டதன்மையுடன் ஒப்பிடுதல்

[தொகு]

செய்ந்நன்றி என்பது கடன்பட்டதன்மை அன்று. இதை திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் தெளிவாக விளக்கியுள்ளார்.

103. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
  • ஆதாவது ஒருவன் கடன் குடுத்தால் மட்டுமே திருப்பி அதை எதிர்பார்க்க வேண்டும். ஆனால் பயன் கருதாது ஒருவர் செய்த உதவி, கடலை விடப் பெரியது என விளக்கியுள்ளார்.

ஊக்கப்படுத்தும் நடத்தை

[தொகு]

செய்ந்நன்றி எதிர்கால சமுதாயத்தை வலிமைமிக்கதாக மாற்றும். ராணுவ வீரர்களுக்குச் செய்யப்படும் செய்ந்நன்றி, பிறரையும் ராணுவத்தில் சேர ஊக்கப்படுத்தும். இரு தங்க நகை வணிகக் கடையில் செய்த ஆய்வில், செய்ந்நன்றியுடன், கடை இலாபம் அடையும் போது வாடிக்கையாளர்களை அழைத்து நன்றி தெரிவிக்கும் கடை 70% வணிகத்தை அதிகரித்துள்ளது எனவும்[6], இதைச் செய்யத் தவறிய கடை 30% வணிகத்தை மட்டும் அதிகரித்துள்ளது எனவும் அறியப்பட்டது. மேலும் ஒரு ஆய்வில் உணவு விடுதியில் வாடிக்கையாளர்களுக்கு நன்றி சொல்லும் ஊழியர்கள் அதிக படி (tips) பெறுகிறார்கள் எனவும் அறியப்பட்டது[7].

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Category:Gratitude
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Emmons, Robert A., and Cheryl A. Crumpler. "Gratitude as a Human Strength: Appraising the Evidence." Journal of Social and Clinical Psychology 19.1 (2000): 56-69. Print.
  2. Smith, A. (1790/1976). The Theory of Moral Sentiments (6th ed.). Indianapolis, IN: Liberty Classics. (Original work published 1790).
  3. Wood, A. M., Maltby, J., Stewart, N., Linley, P. A., & Joseph, S. (2008). A social-cognitive model of trait and state levels of gratitude பரணிடப்பட்டது 2011-07-17 at the வந்தவழி இயந்திரம்.Emotion, 8, 281-290.
  4. McCullough, M. E., Tsang, J. & Emmons, R. A. (2004). Gratitude in intermediate affective terrain: Links of grateful moods to individual differences and daily emotional experience. Journal of Personality and Social Psychology, 86,295-309. (electronic copy) பரணிடப்பட்டது 2011-09-28 at the வந்தவழி இயந்திரம்
  5. http://thirukural4u.blogspot.in/2009/05/11.html செய்ந்நன்றி அறிதல்
  6. Carey, J. R., Clicque, S. H., Leighton, B. A., & Milton, F. (1976). A test of positive reinforcement of customers. Journal of Marketing, 40, 98-100.
  7. Rind, B., & Bordia, P. (1995). Effect of server's "Thank you" and personalization on restaurant tipping. Journal of Applied Social Psychology, 25, 745-751.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்ந்நன்றி&oldid=3348251" இலிருந்து மீள்விக்கப்பட்டது