செம்பழுப்பு இருவாச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பழுப்பு இருவாச்சி
புசெரோசு ஹெ. ஹைட்ரோகோராக்சு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: புசோரிடிபார்மிசு
குடும்பம்: பூசோரிடிடே
பேரினம்: பூசெரோசு
இனம்: பூ. ஹைட்ரோகோராக்சு
இருசொற் பெயரீடு
பூசெரோசு ஹைட்ரோகோராக்சு
லின்னேயசு, 1766
வேறு பெயர்கள்
  • பூசெரோசு மிண்டான்சென்சு டுவெட்டேல், 1877

செம்பழுப்பு இருவாச்சி (Rufous hornbill)(பூசெரோசு ஹைட்ரோகோராக்சு), பிலிப்பீன்சு இருவாச்சி என்றும் உள்நாட்டில் கலாவ் (கா-லா என்று உச்சரிக்கப்படுகிறது) என்றும் அழைக்கப்படும் இருவாச்சி பெரிய வகை இருவாய்ச்சி ஆகும்.

பரவலும் வாழிடமும்[தொகு]

செம்பழுப்பு இருவாச்சி பிலிப்பீன்சில் மட்டும் காணக்கூடிய அகணிய உயிரி ஆகும். இங்கு, இவை 11 தீவுகளில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. இவை காணப்படும் தீவுகளாக லுசோன், மரின்டுவிக் (இனம் ஹைட்ரோகொரெக்சு), சமர், பிலிப்பீன்சு, லெய்டி, போகொல், பானான், பிலிரான், கேலிகோன் மற்றும் பூயுட் (இனம் செமிகேலியேடசு), டைனாகட், சியர்காவ், மிண்டானாவோ (பிளஸ் பலுட், புகாஸ் மற்றும் தாலிகுட்) மற்றும் பசிலன் (ரேஸ் மைண்டனென்சிஸ் ). இது உள்நாட்டில் இன்னும் பொதுவானது, குறிப்பாக லுசோனின் சியரா மேட்ரேயில். வேட்டையாடுதல் மற்றும் வாழ்விடங்களின் பரவலான இழப்பு ஆகியவற்றால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. இவை வெப்பமண்டல தாழ்நில காட்டில் காணப்படும் மிகப்பெரிய பறவைகளில் ஒன்றாகும்.

துணையினங்கள் பு. ஹெ. மிண்டானென்சிசு; படம் ஜோசப் ஸ்மிட், 1881

விளக்கம்[தொகு]

பு. ஹை. மிண்டானென்சிசு (பெண்) வளரிடத்தில்

இதனுடைய அலகு முழுவதும் சிவப்பு நிறத்தில் உள்ளது. துணையினங்கள் செமிகேலெக்டசு மற்றும் மிண்டாயென்சிசில் தூரப் பகுதி வெளிறிய மஞ்சள் வெளிறிய நிறத்தில் காணப்படுகிறது.

நடத்தை[தொகு]

மதிய நேரங்களில் இவை எழுப்பும் ஒலி காரணமாக இது "மலைகளின் கடிகாரம்" என்று அழைக்கப்படுகிறது.[2]

இனப்பெருக்கம்[தொகு]

மற்ற இருவாச்சிகளைப் போலவே, பெண்கள் கூட்டு குழிக்குள் அடைந்து முட்டை இடுகின்றன. முட்டையிலிருந்து பொரித்து வெளிவரும் குஞ்சுகள் கூடு கட்டும் நிலையினை அடையும் வரை அவற்றுடன் இவை வாழ்கின்றன. சில நேரங்களின் ஆண்கள் கூட்டு குழிக்கு வெளியேயிருந்து கூட்டினைக் காக்கும் பணியினைச் செய்கின்றன. பெண் கூடுகளை மூடி உள்ளிருக்கும் போது கூட்டில் உள்ள சிறு செங்குத்து பிளவு மூலம் உணவினைப் பெறுகின்றது. சில நேரங்களில் இனப்பெருக்கம் செய்யாத ஆண்கள் உதவி புரிகின்றன.[3] கூடு கட்டும் நேரம் சராசரியாக 4–6 மாதங்கள் நீடிக்கும். இந்த காலகட்டத்தில் ஆண் தனது துணைக்கு உணவு வழங்கும். இவை பிணைப்பினை உருவாக்கி ஆண்டாண்டுகளாகப் பராமரிக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]