பூசெரோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூசெரோசு
காண்டாமிருக இருவாச்சி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: புசெரோடிபார்மிசு
குடும்பம்: புசோரோடிடே
பேரினம்: பூசெரோசு
சிற்றினம்
  • பூ. ரைனோசெரோசு
  • பூ. பைகோர்னிசு
  • பூ. ஹைட்ரோகோராக்சு
வேறு பெயர்கள்

ஹைட்ரோகோரக்சு பிரிசுசன், 1760

பூசெரோசு (Buceros) என்ற பேரினம் பெரிய ஆசிய இருவாச்சி எனப்படும். இது இருவாச்சி குடும்பமான பூசெரோடிடேவினைச் சார்ந்தது.

விளக்கம்[தொகு]

உலகில் மிகப்பெரிய இருவாய்ச்சி பூசெரோsu பேரினத்தில் உள்ளன. இதில் மலை இருவாட்சியும் அடங்கும். இந்த பேரினத்தில் உள்ள அனைத்து இருவாய்ச்சிகளும் பெரிய மற்றும் வெற்று எலும்பாலான தலைக்கவசத்தினை மேல் அலகில் கொண்டுள்ளன. விஞ்ஞானிகள் மற்றும் பறவை ஆர்வலர்களுக்கு இவற்றின் வயது, பாலினம் மற்றும் சிற்றினத்தினை அடையாளம் காணப் பயனுள்ளதாக உள்ளது. இவற்றின் இறக்கைகள் 1.8 மீட்டர் (6 அடி) வரை விரியக்கூடியது. மேலும் இவை மற்ற இருவாய்ச்சியினை விட அளவில் பெரிய இறக்கை விட்டத்தினைக் கொண்டுள்ளன.

சிற்றினங்கள்[தொகு]

இந்தப் பேரினத்தில் சேர்க்கப்பட்டுள்ள இனங்கள்:

படம் அறிவியல் பெயர் பொது பெயர் விநியோகம்
பூசெரோசு ரைனோசெரோசு காண்டாமிருக இருவாச்சி போர்னியோ, சுமத்ரா, ஜாவா, மலாய் தீபகற்பம், சிங்கப்பூர் மற்றும் தெற்கு தாய்லாந்து
பூசெரோசு பைகோர்னிசு பெரிய இருவாட்சி இந்தியா, பூட்டான், நேபாளம், மெயின்லேண்ட் தென்கிழக்கு ஆசியா, இந்தோனேசிய தீவின் சுமத்ரா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதி
பூசெரோசு ஹைட்ரோகோராக்சு செம்பழுப்பு இருவாச்சி பிலிப்பைன்ஸ்

தலைக்கவச இருவாச்சி சில நேரங்களில் இந்த பேரினத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது இது ஒற்றைச் சிற்றினமுடைய ரைனோபிளாக்சுவில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  • கெம்ப், ஏ.சி (2001). குடும்பம் புசெரோடிடே (ஹார்ன்பில்ஸ்). பக். 436-523 இல்: டெல் ஹோயோ, ஜே., எலியட், ஏ., & சர்காடல், ஜே. எட்ஸ். (2001). உலக பறவைகளின் கையேடு. தொகுதி. 6. ஹார்ஸ்பில்ஸுக்கு மவுஸ் பறவைகள். லின்க்ஸ் எடிசியன்ஸ், பார்சிலோனா.ISBN 84-87334-30-X
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசெரோசு&oldid=3145214" இருந்து மீள்விக்கப்பட்டது