செங்குத குக்குறுவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்குத குக்குறுவான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
மெகலைமிடே
பேரினம்:
சைலோபோகன்
இனம்:
சை. லாக்ராண்டியேரி
இருசொற் பெயரீடு
சைலோபோகன் லாக்ராண்டியேரி
வெறுலக்சு, 1868
வேறு பெயர்கள்

மேகாலைமா லாக்ராண்டியேரி

செங்குத குக்குறுவான் (Red-vented barbet)(சைலோபோகன் லாக்ராண்டியேரி ) என்பது லாவோஸ், வியட்நாம் மற்றும் கம்போடியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு ஆசியக் குக்குறுவான் ஆகும். இங்கு இது மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகளில் வாழ்கிறது.[1]

விளக்கம்[தொகு]

செங்குத குக்குறுவானின் இறகுகள் பச்சை நிறத்திலிருந்து வெண்கல நிறம் வரை இருக்கும். இதன் தலை பழுப்பு நிறத்தில் தொண்டை மற்றும் பக்கவாட்டில் சாம்பல் நிற திட்டுகளுடன் கண்களுக்கு மேல் நீல நிற கோட்டுடன் காணப்படும். இதன் வாலின் கீழே சிவப்பு திட்டு ஒன்று உள்ளது. இது 29–34 cm (11–13 அங்) நீளமானது.[2]

உணவு[தொகு]

வியட்நாமில் உள்ள லாம் தாங் மாகாணத்தின் லாக் பாக் காடுகளில், இது அத்தி சிற்றினம், லிட்சியா குபெபா, கேம்பைலோபெர்மும் செராட்டம், தாளிசபத்த்ரிரி சிற்றினம் பழங்களை உட்கொள்கிறது. நெமா சிற்றினம் விரிங்தியா சிற்றின மலர்கள், முதுகெலும்பில்லாத மற்றும் சில முதுகெலும்பு உயிரிகளை உண்ணுகின்றது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2018). "Psilopogon lagrandieri". IUCN Red List of Threatened Species 2018: e.T22681594A130044154. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22681594A130044154.en. https://www.iucnredlist.org/species/22681594/130044154. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. Short, L. L.; Horne, J. F. M. (2014). "Red-vented Barbet (Psilopogon lagrandieri)". in del Hoyo, J.. Handbook of the Birds of the World and BirdLife International Illustrated Checklist of the Birds of the World. 7: Jacamars to Woodpeckers. Barcelona, Spain and Cambridge, UK: Lynx Edicions and BirdLife International. https://www.hbw.com/species/red-vented-barbet-psilopogon-lagrandieri. 
  3. Trounov, Vitaly L.; Vasilieva, Anna B. (2014). "First record of the nesting biology of the red-vented barbet, Megalaima lagrandieri (Aves: Piciformes: Megalaimidae), an Indochinese endemic". Raffles Bulletin of Zoology 62 (671–678). https://lkcnhm.nus.edu.sg/app/uploads/2017/04/62rbz671-678.pdf. பார்த்த நாள்: 12 January 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்குத_குக்குறுவான்&oldid=3757687" இலிருந்து மீள்விக்கப்பட்டது