சூறாவளி மகாசென் (2013)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூறாவளிப் புயல் மகாசென்
சூறாவளிப் புயல் (இ.வா.து. அளவு)
Tropical storm (JTWC scale)
Mahasen May 13 2013 0755Z.jpg
மகாசென் சூறாவளிப் புயல் வங்காள விரிகுடாவில் மே 13, 2013
தொடக்கம்மே 10, 2013
மறைவுமே 17, 2013
உயர் காற்று3-நிமிட நீடிப்பு: 85 கிமீ/ம (50 mph)
1-நிமிட நீடிப்பு: 95 கிமீ/ம (60 mph)
தாழ் அமுக்கம்988 hPa (பார்); 29.18 inHg
இறப்புகள்மொத்தம் 93, காணாமல் போனோர்: 6
பாதிப்புப் பகுதிகள்இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மியான்மர், வங்காளதேசம்
2012 வட இந்திய பெருங்கடல் சூறாவளி பருவம்-இன் ஒரு பகுதி

சூறாவளிப் புயல் மகாசென் (Cyclone Mahasen) என்பது ஒப்பீட்டளவில் பலங்குறைந்த அயனமண்டலச் சூறாவளி ஆகும். இது தெற்காசிய மற்றும் தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த ஆறு நாடுகளில் சேதங்களை உண்டுபண்ணியுள்ளது. வங்காள விரிகுடாவின் கிழக்காக குறைந்த காற்றழுத்தத்துடன் சிறயளவில் உருவாகி, தாழமுக்கமாக மே 10 உருவாகி முன்னோக்கி நகர்ந்தது. படிப்படியாக தாழமுக்கம் வலுத்து மே 11 மகாசென் சூறவளிப் புரல் உருவெடுத்தது. இந்தியாவின் கிழக்குக் கரை நோக்கி அண்மித்து பாதகமான வளிமண்டல நிலைமைகளைத் தோற்றுவித்தது. மே 14, மகாசென் வடகிழக்கு நோக்கி திசைதிரும்பியது. மறுநாள் புயல் வேகம் அதிகரித்தது. மே 16, சூறாவளி 85 km/h (50 mph) வேகத்துடனும், வளிமண்டல அழுத்தம் 988 பார் (பாசுக்கல்; 29.18 பாதரச அங்குலம்) அதன் உச்சத்தை அடைந்தது. அதன்பிறகு மகாசென் வங்காளதேசத்தின் பதுவாக்காலி கடற்கரையை வியாழக்கிழமை தாக்கியபின் சிட்டகொங் நகருக்கு அணமியில் உள்ள சிகணடுவைத் தாக்கிப் பின் கொக்சு நகரை நோக்கி 100 km/h வேகத்தில் நகர்ந்தது.[1]

சூறாவளி நகர்ந்த பாதை[தொகு]

மகாசென் சூறாவளி நகர்ந்த பாதை

மேற்கோள்கள்[தொகு]

  1. வீரகேசரி, இலங்கை நாளிதழ், மே 17, 2013

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூறாவளி_மகாசென்_(2013)&oldid=2184959" இருந்து மீள்விக்கப்பட்டது