உள்ளடக்கத்துக்குச் செல்

சு. ஒளிச்செங்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சு. ஒளிச்செங்கோவின் இயற்பெயர் சு. நடராசன் ஆகும். இவர் திராவிட இயக்க எழுத்தாளர் ஆவார். சி.பா ஆதித்தனார், தந்தை பெரியாரிடம் நேரடித் தொடர்பில் இருந்தவர். திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவனிதம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். தர்போது விவசாயப் பணிகளை கவனித்துக்கொண்டு ஊரில் ஓய்வைக் கழித்துவருகிறார்.

இவரது மனைவியின் பெயர் தமிழரசி. இரு மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் சுந்தரபுத்தன், சென்னையில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறார். இளைய மகன் பெரியாரினியன், சொந்த ஊரில் ஜவுளித்தொழில் செய்துவருகிறார். மகள் வெண்ணிலா, திருமணமாகி வேளாங்கண்ணிக்கு அருகில் உள்ள காமேஸ்வரம் கிராமத்தில் வசிக்கிறார்.


செய்தியாளர் பணி

[தொகு]

மாலை முரசு நாளிதழில் முப்பதுக்கும் மேலான ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கிறார். விடுதலை, முரசொலி மலர்களில் பெரியார், அண்ணா, ஆதித்தனார் குறித்துப் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இயக்கச் செயல்பாடு

[தொகு]

1967 ஆம் ஆண்டில் மே மாதத்தின் கடைசி வாரத்தில் விடையபுரம் பண்ணையில் பெரியார் நடத்திய பகுத்தறிவுப் பயிற்சிப் பள்ளியில் மாணவராக, அணுக்கத் தொண்டராக பங்கேற்றவர். அங்கு பெரியார் தங்கியிருந்த பத்து நாட்களும் அவருக்கு உதவியாக பண்ணையிலேயே அருகில் இருந்தவர். அந்தப் பயிற்சிப் பள்ளியில்தான் கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை… எனத் தொடங்கும் கடவுள் மறுப்பு வாசகங்கள் முறையாக உலகுக்கு அறிவிக்கப்பட்டன. அந்த நாள் 24.5.1967. நாம் தமிழர் இயக்கத்தில் ஈடுபாடுகொண்டு தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர். பிறகு அவருடைய பரிந்துரையால் கொரடாச்சேரி நகரத்திற்கான பகுதிநேர செய்தியாளராக மாலை முரசு நாளிதழில் பணியைப் பெற்றார். யூனியன் பிரதேசங்கள் தொடர்பான சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று நான்கு மாதம் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி சிறைகளில் சிறைத்தண்டனை அனுபவித்தார

எழுதிய நூல்கள்

[தொகு]
  • பெரியார் – ஒரு வாழ்க்கைப் பாடம்
  • விடையபுரம் – கடவுள் மறுப்பின் தொடக்கப்புள்ளி
  • பெரியார் அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள்
  • வகுப்புவாரி பிரதிநிதித்துவம்: திருவிக – பெரியார் அறிக்கைப் போர்
  • கர்மவீரர் காமராசர்
  • பெரியார் பொன்மொழிகள்
  • பெரியார் பழமொழிகளும் பயன்மொழிகளும்

விருதுகள்

[தொகு]

திராவிடர் கழகம் இவருக்கு 2019 ஆம் ஆண்டு பெரியார் விருது வழங்கியது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஒளிச்செங்கோ அவர்களுக்கு தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._ஒளிச்செங்கோ&oldid=3539452" இலிருந்து மீள்விக்கப்பட்டது