சுஷ்மா அகுஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுஷ்மா அகுஜா
பிறப்புசுஷ்மா ரோஷன் அஹுஜா
18 ஆகத்து 1952
தில்லி
பணிஇயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், ஆவணப்பட படைப்பாளி, படலாசிரியர், நடக எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1969-தற்போது
பெற்றோர்ரோஷன் லால் சர்மா
வாழ்க்கைத்
துணை
சுதிர் அஹுஜா (1971-தற்போது)

சுஷ்மா அகுஜா (Sushma Ahuja) என்பவர் இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் பணிபுரிந்த இந்திய இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகை ஆவார்.

தொழில்[தொகு]

சுஷ்மா தனது வளரிளம் பருவத்தில் அனைத்திந்திய வானொலியில் பாடகியாகவும், நடனக் கலைஞராகவும் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார், இந்தி தியேட்டர் சர்க்யூட்டில் ஈடுபடுவதற்கு முன்பு, இவர் இந்தி, உருது, பஞ்சாபி மொழி நிகழ்ச்சிகளில் பணியாற்றினார்.[1] 1977 ஆம் ஆண்டில், சுஷ்மா தன் கணவரின் பணியின் நிமித்தமாக தன் குடும்பத்துடன் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். பின்னர் இந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நிகழ்ச்சிகளை நடத்திய "அபுதாய்" என்ற நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். சிங்கீதம் சீனிவாசராவ் மற்றும் எல். வி. பிரசாத் உள்ளிட்ட திரைப்படப் படைப்பாளிகளுடன் இவர் அறிமுகமானார், அவர்கள் இவரை திரைப்பட இயக்கத்தில் ஈடுபடுமாறு ஊக்குவித்தனர். அதனால் இவர் பாலு மகேந்திரா, டி. ராமராவ், யஷ் சோப்ரா ஆகியோரிடம் பல படங்களின் வழியாக பயிற்சி பெற்றார்.[1]

சுஷ்மா தொடர்ந்து தமிழ் படங்களின் இந்தி பதிப்பு படங்களுக்கான பணிகளுக்கு உதவினார். அடிக்கடி உரையாடல்களை ஒலிபெயர்த்தார். நடிகை ஸ்ரீதேவிக்கு இந்தி உரையாடல்களை பேச உதவியதன் மூலம் இந்தி படங்களில் அவர் பணிபுரியும் மாற்றத்திற்கு உதவியதற்காகவும் இவர் பாராட்டப்பட்டார்.[2]

சுஷ்மா நடிகை, எழுத்தாளர், திரைப்பட இயக்குநராக புகழ் பெற்றவர். குறிப்பிடத்தக்க வகையில், டி. டி மெட்ரோவுக்காக தாரா கி துனியா என்ற இயங்குபட தொடரையும், அஜித் குமார் மற்றும் இவரது மகள் ரிச்சா அஹுஜா நடித்த உயிரோடு உயிராக (1998) என்ற காதல் நாடகத் திரைப் படத்தையும் இயக்கினார். படம் நேர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது. ஒரு விமர்சகர் படம் "மசாலா தன்மை இல்லாத சுத்தமான திரைப்படம்" என்று குறிப்பிட்டார், ஆனால் "பலவீனமான கதைக்-கோர்வை" என்று விமர்சித்தார்.[3] மற்றொரு விமர்சகர் ஸ்ரீவித்யாவின் பாத்திரத்தை குறிப்பிட்டு பாராட்டினார், படம் "ஒரு இனிமையான அனுபவம், பர்வையாளர்கள் ஸ்ரீவித்யாவை கிட்டத்தட்ட அஜித்தைப் போலவே கொண்டானினார்கள்" என்று கூறினார்.[4] திரைப்படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது, சரியாக விளம்பரம் செய்யாததே காரணம் என்று சுஷ்மா அஹுஜா குற்றம் சாட்டினார்.[5] இவர் லிட்டில் ஜான் (2001) மற்றும் ஏக் அலக் மௌசம் (2003) உள்ளிட்ட படங்களின் எழுத்தாக்கத்தில் பணியாற்றியுள்ளார்.[6][7] இவர் எம். நைட் ஷியாமளனின் ஆங்கிலத் திரைப்படமான ப்ரேயிங் வித் ஆங்கர் (1992) மற்றும் ஸ்ரீதேவியின் தொலைக்காட்சித் தொடரான மாலினி ஐயர் (2004) ஆகியவற்றில் நடித்தார்.[8]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

உயிரோடு உயிராக (1998) மற்றும் டும் டும் டும் (2001), மற்றும் சுஹாஸ் அஹுஜா போன்ற படங்களில் நடித்துள்ள சுஷ்மா அஹுஜாவுக்கு சௌரப், ரிச்சா உள்ளிட்ட மூன்று குழந்தைகள் உள்ளனர்.

பகுதி படத்தொகுப்பு[தொகு]

  • குறிப்பு: குறிப்பில் ஏதும் குறிப்பிடாத அனைத்து படங்களும் இந்தியில் இருக்கும்.

நடிகையாக[தொகு]

ஆண்டு திரைப்படம் பங்கு குறிப்புகள்
1980 யே கைசா இன்சாஃப்? கமலா
1988 கத்ரோன் கே கிலாடி
1992 பிரயாக் வித் அங்கர் திருமதி மோகன் ஆங்கிலப் படம்
1996 அவுர் ஏக் பிரேம் கஹானி நீலு நாத்
2004 மாலினி ஐயர் தொலைக்காட்சி தொடர்

எழுத்தாளராகவும், இயக்குநராகவும்[தொகு]

ஆண்டு திரைப்படம் பணி குறிப்புகள் Ref.
எழுத்தாளர் இயக்குனர்
1998 உயிரோடு உயிராக ஆம் ஆம் தமிழ்த் திரைப்படம்
2001 லிட்டில் ஜான் ஆம் இந்தி பதிப்பிற்கான உரையாடல் எழுத்தாளர்
2003 ஏக் அலக் மௌசம் ஆம் பாடலாசிரியரும்
2005 பியார் மெய் ட்விஸ்ட் ஆம்
2006 ஜெய் சந்தோஷி மா ஆம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Satish Kaushik remembers Sridevi: I used to call her 'madam', even after she married my buddy Boney Kapoor". DNA India. 26 February 2018. {{cite web}}: Missing or empty |url= (help)
  2. "Uyirodu Uyiraaga: Movie Review". 11 December 2000. Archived from the original on 11 December 2000.
  3. "Vaali (Tamil)". Archived from the original on 22 March 2012.
  4. "rediff.com, Movies: Gossip from the southern film industry".
  5. "Fame from many quarters". 26 February 2001. https://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/fame-from-many-quarters/article27918805.ece. 
  6. "Little John".
  7. "The Lesser-Known Story Of How M. Night Shyamalan Made His Debut Film In Chennai". 15 January 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஷ்மா_அகுஜா&oldid=3954126" இலிருந்து மீள்விக்கப்பட்டது