சுவர்ணஜெயந்தி ஆய்வு உதவித் தொகை
சுவர்ணஜெயந்தி ஆய்வு உதவித் தொகை Swarnajayanti Fellowship | |
---|---|
விருது வழங்குவதற்கான காரணம் | அடிப்படை அறிவியல் ஆய்வு, இந்தியா |
வழங்குபவர் | அறிவியல் தொழில்நுட்பத்துறை இந்திய அரசு |
முதலில் வழங்கப்பட்டது | 1997 |
இணையதளம் | Swarnajayanti Fellowship Website |
சுவர்ணஜெயந்தி ஆய்வு உதவித் தொகை (Swarnajayanti Fellowship) என்பது இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் (இந்தியா) ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆராய்ச்சி நிதி விருதாகும். இது இளம் ஆராய்ச்சியாளர்களின் குறிப்பிடத்தக்க மற்றும் சிறந்த ஆராய்ச்சிக்காக, உயிரியல், வேதியியல் , சுற்றுச்சூழல் அறிவியல், பொறியியல், கணிதம், மருத்துவம் . மற்றும் இயற்பியல் பிரிவுகளில் வழங்கப்படுகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தாக்கத்தினை ஏற்படுத்தும் சிறந்த படைப்புகளை உருவாக்கும் நம்பிக்கைக்குரிய இளம் இந்தியக் கல்வியாளர்களை இந்த பரிசு அங்கீகரிக்கிறது.[1][2][3]
விவரங்கள்[தொகு]
40 வயதுக்குட்பட்ட இந்தியக் குடிமக்கள் மற்றும் நிரூபிக்கப்பட்ட சாதனைப் பதிவைக் கொண்டவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.[4] மாதாந்திர ஆய்வு உதவித்தொகை ₹25,000 (US$310) (அத்துடன் ஆண்டுக்கு ₹5 இலட்சம் (US$6,300) ஆராய்ச்சி மானியமாக வழங்கப்படும். சுவர்ணஜெயந்தி ஆய்வு உதவித் தொகை விண்ணப்பதாரர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இந்திய நிறுவனத்தில் பணியில் இருக்க வேண்டும்.[5]
பிரிவுகள்[தொகு]
சுவர்ணஜெயந்தி ஆய்வு உதவித் தொகை ஆறு பிரிவுகளின் கீழ் ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
- வேதியியல் அறிவியல்
- பூமி மற்றும் வளிமண்டல அறிவியல்
- பொறியியல் அறிவியல்
- கணித அறிவியல்
- உயிர் அறிவியல்
- இயற்பியல் அறிவியல்
பெற்றவர்கள்[தொகு]
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "14 Indian scientists get Swarna Jayanti Fellowship". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-25.
- ↑ "14 scientists awarded Swarna Jayanti Fellowships". newsonair.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-25.
- ↑ "Meet the winners of Swarnajayanti fellowship". 23 November 2018.
- ↑ "Swarnajayanti Fellowships Scheme". Department of Science and Technology (India).
- ↑ "Swarnajayanti Fellowships". www.serc-dst.org. பார்க்கப்பட்ட நாள் 2020-08-25.