இந்திய அறிவியல் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய அறிவியல் விருது
India Science Award
விருது வழங்குவதற்கான காரணம்பல்துறைமை ஆராய்ச்சி
Locationபுது தில்லி
நாடுஇந்தியா Edit on Wikidata
வழங்குபவர்இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
முதலில் வழங்கப்பட்டது2004

இந்திய அறிவியல் விருது (India Science Award) அறிவியலுக்கான சிறந்த பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கம் வழங்கும் மிக உயர்ந்த மற்றும் மிகவும் மதிப்புமிக்க தேசிய அங்கீகாரமாகும்.. விஞ்ஞானத்தில் நிரூபிக்கப்பட்ட மற்றும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறப்பம்சமே விருதிற்கான முதன்மை மற்றும் அத்தியாவசியமான அளவுகோலாகும். இந்த விருது பொறியியல், மருத்துவம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட அறிவியல் துறை சார்ந்த அனைத்து துறைகளையும் உள்ளடக்கியதாகும். பரிசுத் தொகை ரூ. 25 லட்சமும் ஒரு சான்றிதழும் தங்கப் பதக்கமும் கொண்டது. இந்த விருது ஒவ்வோர் ஆண்டும் இந்திய அறிவியல் காங்கிரசில் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.[1]

இந்திய அறிவியல் விருது இந்தியாவின் 10 ஆவது பிரதமர் திரு அடல் பிகாரி வாச்பாய் அவர்களால் 2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[2][3] 2004 ஆம் ஆண்டுக்கான முதல் விருது, 3 ஜனவரி 2006 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் தேதியன்று 93 ஆவது இந்திய அறிவியல் காங்கிரசின் தொடக்க விழாவில், பிரதமர் மன்மோகன் சிங்கால், திட நிலை மற்றும் பொருள் வேதியியலில் செய்த பணிகளுக்காக, புகழ்பெற்ற வேதியியலாளர் பேராசிரியர் சிஎன்ஆர் ராவுக்கு வழங்கப்பட்டது..[4][5]

வரலாறு[தொகு]

3 ஜனவரி 2003 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் தேதியன்று பெங்களூரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 90 ஆவது இந்திய அறிவியல் காங்கிரசில் இந்தியப் பிரதமரால் இந்திய அறிவியல் விருது தொடங்கப்பட்டது. 30 சூன் 2003 அன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் (இந்தியா) விருதுக்கான கட்டமைப்பு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல் அளித்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 20 பிரபல விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.[6]

அளவுகோல்கள்[தொகு]

மருத்துவம், பொறியியல் மற்றும் விவசாயம் உள்ளிட்ட அறிவியலில் சாதனை படைத்தவர்களை பாராட்டி ஆண்டுதோறும் இந்திய அறிவியல் விருது வழங்கப்படுகிறது. பெறுபவர் ஒரு விஞ்ஞானியாக இருப்பார். எந்த வயது வரம்பும் இல்லை, அவர் ஒரு அற்புதமான அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொண்வராக இருப்பார். அந்த ஆராய்ச்சி பரவலாக நிரூபிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். மேலும் முதன்மையாக இந்தியாவில் செய்யப்பட்டிருக்கும். அசல் தன்மை மற்றும் புதுமையான வெளியீடுகள் வெறும் அளவை விட முக்கியமானதாகும். நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கான பங்களிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். குழுக்கள் அல்லது நிறுவனங்கள் இந்த விருதைப் பெற தகுதியற்றவை. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தகுதி பெற்றிருந்தாலும், ஒரு வருடத்தில் அதிகபட்சம் இரண்டு வெற்றியாளர்கள் மட்டுமே பரிசு பெற முடியும்.[1]

பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு பெறுபவர் களம்
2004 சிஎன்ஆர் ராவ் திட நிலை வேதியியல் மற்றும் பொருள் அறிவியல்
2005 ஆற்காடு ராமச்சந்திரன் [7] சுற்றுச்சூழல் திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் ஆராய்ச்சி திட்டம்
2006 சித்தார்த்த பால் திவாரி [8] ஒருங்கிணைந்த கிராமப்புற விவசாய மேம்பாடு: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
2007 உபிந்தர் சிங் பல்லா நரம்பியல்
2008 கோவிந்தராசன் பத்மநாபன் தடுப்பூசி வளர்ச்சி
2009 மாதவ் காட்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
2010 கலியம்புடி ராதாகிருட்டிண ராவ் [9][10] புள்ளியியல் கோட்பாடு மற்றும் முறை

நிறுத்தம்[தொகு]

2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நாகர் பரிசுடன் இணைந்ததைத் தொடர்ந்து இந்திய அறிவியல் விருது நிறுத்தப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நாகர் பரிசின் நிதிநிலை ஒதுக்கீடு அதற்கேற்ப அதிகரிக்கப்பட்டது.[11][12]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Ramasami T (2008). "India Science Award – 2009". Current Science 95 (12): 1762–1763. http://www.currentscience.ac.in/Downloads/article_id_095_12_1762_1763_0.pdf. 
  2. "Welcome to Department of Science and Technology, Govt. of India ::". Dst.gov.in. 2005-03-02. http://www.dst.gov.in/whats_new/press_releases05/india-science-award.htm. 
  3. Anon. (2003). "90th Indian Science Congress: Résumé and Recommendation". Everyday Science 38 (4): 1–11. http://www.sciencecongress.nic.in/html/pdf/90th_iscr.PDF. பார்த்த நாள்: 3 June 2013. 
  4. Rajeev M (4 January 2006). "Another major honour for C.N.R. Rao". http://www.hindu.com/2006/01/04/stories/2006010406312200.htm. 
  5. United News of India, PTI (3 January 2006). "First India Science Award for Prof CNR Rao". HT Media Limited. http://www.hindustantimes.com/technology/Gadgets-Reviews/First-India-Science-Award-for-Prof-CNR-Rao/SP-Article1-41959.aspx. 
  6. Ministry of Human Resource Development and Science and Technology (30 June 2006). "Meeting on modalities for india science award". PIB, Government of India. http://pib.nic.in/archieve/lreleng/lyr2003/rjun2003/30062003/r3006200318.html. 
  7. "Ramachandran, Arcot, 1923-2018". https://id.loc.gov/authorities/names/n85308615.html. 
  8. "Tiwari’s Research on Rural Economies". https://www.latinpost.com/articles/156060/20220725/tiwari-s-research-on-rural-economies-in-asia-confronts-unprecedented-challenges-in-the-aftermath-of-the-pandemic.htm. 
  9. "Society of Statistics, Computer and Applications Registration No. 32833". https://ssca.org.in/memberdetails/395/. 
  10. "Indian American C.R. Rao receives the Award". https://www.siliconindia.com/shownews/indian-american-cr-rao-receives-the-rss-guy-medal-award-nid-87678-cid-49.html. 
  11. "Bhatnagar Award Details". https://www.biospectrumindia.com/news/58/12972/pm-confers-shanti-swarup-bhatnagar-prizes-for-st.html. 
  12. "Award Merger and Budget". JSTOR. https://www.jstor.org/stable/24102255. 

புற இணைப்புகள்[தொகு]