சுல்தான் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுல்தான் சிங் (Sultan Singh)(19 செப்டம்பர் 1923 - 16 திசம்பர் 2014) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பஞ்சாப் சட்ட மேலவை உறுப்பினராகவும் பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். இவர் திரிபுரா மாநிலத்தின் ஐந்தாவது ஆளுநராக 1989 முதல் 1990 வரை பணியாற்றினார். சிங் 16 திசம்பர் 2014 அன்று தில்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் நீண்ட காலமாக உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சைக்குப் பின் இறந்தார்.[1][2]

இளமை[தொகு]

சுல்தான் சிங் (செப்டம்பர் 19, 1923-திசம்பர் 12, 2014) அரியான மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் நிஜாம்பூர் மசுரா கிராமத்தில் பிறந்தார். இந்த கிராமம் இப்போது சோனிபட் மாவட்டத்தின் (தாசில் - கார்கோடா) பகுதியாக உள்ளது. இவர் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். இப்பணியின் போது புரட்சியாளர்களுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக ராணுவத்திலிருந்து விலகி கொல்கத்தா சென்றார். சில காங்கிரசு தலைவர்களுடன் தொடர்பு கொண்டு அக்கட்சியில் இணைந்தார்.

அரசியல்[தொகு]

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இவர் பஞ்சாப் சட்ட மேலவை உறுப்பினராகவும் பின்னர், மக்களவை உறுப்பினராகவும் (மூன்று முறை) பணியாற்றினார். 1978 முதல் 1986 வரை அரியானா மாநில காங்கிரசின் தலைவராகவும் இருந்தார். பின்னர் 1989 முதல் 1990 வரை திரிபுரா ஆளுநராகப் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ex-guv Sultan Singh passes away". hindustantimes.com. 16 December 2014. 17 December 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Tripura ex-Guv Sultan Singh dead". tribuneindia.com. 16 December 2014. 16 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுல்தான்_சிங்&oldid=3407113" இருந்து மீள்விக்கப்பட்டது