ரொமேஷ் பண்டாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரொமேஷ் பண்டாரி
பன்னிரெண்டாவது துணை நிலை ஆளுநர், புது தில்லி
பதவியில்
1988 ஆகத்து 4 – 1989 திசம்பர்
முன்னையவர்ஹரிகிசன் லால் கபூர்
பின்னவர்அர்ஜன் சிங்
மூன்றாவது துணைநிலை ஆளுநர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு
பதவியில்
1989 திசம்பர் – 1990 பிப்ரவரி 4
முன்னையவர்திரத் சிங் ஓப்ராய்
பின்னவர்இரஞ்சித் சிங் தயால்
ஏழாவது திரிபுரா ஆளுநர்
பதவியில்
1993 ஆகத்து 15 – 1995 சூன் 15
முன்னையவர்கே. வி. இரகுநாத் ரெட்டி
பின்னவர்பேராசிரியர். சிதேசுவர் பிரசாத்
ஆறாவது ஆளுநர், கோவா
பதவியில்
1995 சூன் 16 – 1996 சூலை 18
முன்னையவர்கோபால ராமானுஜம்
பின்னவர்பி. சி. அலெக்சாண்டர்
ஆறாவது உத்தரப் பிரதேச ஆளுநர்
பதவியில்
1996 சூலை 19 – 1998 மார்ச் 17
முன்னையவர்முகமது சபி குரேஷி
பின்னவர்முகமது சபி குரேஷி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1928-03-29)29 மார்ச்சு 1928
லாகூர், பஞ்சாப் பகுதி, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
(now in பஞ்சாப்)
இறப்பு7 செப்டம்பர் 2013(2013-09-07) (அகவை 85)
புது தில்லி, இந்தியா
தேசியம்இந்தியன்
தொழில்இராஜதந்திரி
நிர்வாகி

ரொமேஷ் பண்டாரி (Romesh Bhandari) (பிறப்பு: 1928 மார்ச் 29 - இறப்பு: 2013 செப்டம்பர் 7) இவர் இந்திய வெளியுறவு செயலாளராகவும், தில்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் முன்னாள் துணைநிலை ஆளுநராகவும், திரிபுரா, கோவா மற்றும் உத்தரபிரதேசத்தின் முன்னாள் ஆளுநராகவும் இருந்தார். [1]

தொழில்[தொகு]

காந்தி படுகொலை வழக்கை முடிவு செய்த அமர்வின் ஒரு பகுதியாக இருந்த பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி அமர் நாத் பண்டாரிக்கு இன்றைய பாக்கித்தானின் லாகூரில் பண்டாரி பிறந்தார்.

1950இல் நியூயார்க்கில் உள்ள துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இந்திய வெளியுறவு சேவையில் சேர்ந்தார். 1970 முதல் 1971 வரை மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் அமைச்சராக இருந்தார். இவர் தாய்லாந்திற்கான தூதராகவும், 1971 முதல் 1974 வரை ஆசிய மற்றும் தூர கிழக்கு நாடுகளுக்கான ஐ.நா. பொருளாதார ஆணையத்தின் நிரந்தர பிரதிநிதியாகவும், 1974 முதல் 1976 வரை ஈராக்கிற்கான தூதராகவும் இருந்தார். பின்னர் இவர் 1977 பிப்ரவரி முதல் 1979 சூலை வரை கூடுதல் செயலாளராக வெளியுறவு அமைச்சகத்திற்கு பணியாற்றினார். இவர் 1979 ஆகத்து 1, அன்று செயலாளராக பதவி உயர்வு பெற்றார். 1985 பிப்ரவரி 1 அன்று வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் 1986 மார்ச் 31, அன்று அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். [1]

1984ஆம் ஆண்டில் துபாயிலிருந்து கடத்திச் சென்ற ஒரு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டுவருவதில் இவருடைய பணி தனித்துவமானது. [1]

இவர் 1988 ஆகத்து 4, முதல் 1989 திசம்பர் வரை தில்லியின் துணைநிலை ஆளுநரராகவும், 1989 திசம்பர் முதல் 1990 பிப்ரவரி 24 வரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும் பணிபுரிந்தார். [2] இவர் 1993 ஆகத்து 15, முதல் 1995 சூன் 15 வரை திரிபுராவின் ஆளுநராகவும், 1995 சூன் 16 முதல் 1996 சூலை 18 வரை கோவாவின் ஆளுநராகவும், 1996 சூலை 19 முதல் 1998 மார்ச் 17 வரை உத்தரபிரதேச ஆளுநராகவும் இருந்தார். [1] [3] [4] [5]

நீடித்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த பண்டாரி 2013 செப்டம்பர் 7 அன்று இரவு இறந்தார். [6]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "About Shri Romesh Bhandari". upgovernor.gov.in. Archived from the original on 9 July 2011. பார்க்கப்பட்ட நாள் 9 July 2011.
  2. "Indian states since 1947". worldstatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 9 July 2011.
  3. "Governors of Goa since Liberation". rajbhavangoa.org. Archived from the original on 9 July 2011. பார்க்கப்பட்ட நாள் 9 July 2011.
  4. "Tripura - Governors". tripura.nic.in. Archived from the original on 9 July 2011. பார்க்கப்பட்ட நாள் 9 July 2011.
  5. "Governors of Uttar Pradesh". upgov.nic.in. Archived from the original on 9 July 2011. பார்க்கப்பட்ட நாள் 9 July 2011.
  6. PTI (1928-03-29). "Former UP governor Romesh Bhandari passes away - Times Of India". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2013-09-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொமேஷ்_பண்டாரி&oldid=3407115" இலிருந்து மீள்விக்கப்பட்டது