சுல்தான் அகமது பள்ளிவாசல்
{{{building_name}}} | |
---|---|
![]() | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | இசுதான்புல், துருக்கி |
புவியியல் ஆள்கூறுகள் | 41°00′19″N 28°58′37″E / 41.0053851°N 28.9768247°E |
சமயம் | சுன்னி இசுலாம் |
இணையத் தளம் | Official website |
சுல்தான் அகமது பள்ளிவாசல் (Sultan Ahmed Mosque) என்றும் நீல பள்ளிவாசல் என்றும் அழைக்கப்படும் இது துருக்கியின் இசுதான்புல்லில் அமைந்துள்ள உதுமானியப் பேரரசு கால பள்ளிவாசலாகும். தற்போதும் செயல்பாட்டிலிருக்கும் இந்த பள்ளிவாசல், இது ஏராளமான சுற்றுலா பார்வையாளர்களை ஈர்க்கிறது. சுல்தான் முதலாம் அகமது ஆட்சியின் போது இது 1609 முதல் 1616 வரை கட்டப்பட்டது. இது சமூகத்திற்கான பல்வேறு தொண்டு சேவைகளுக்கான பிற கட்டிடங்கள், அகமதுவின் கல்லறை, ஒரு மதரசா, ஒரு நல்வாழ்வு மையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கையால் வரையப்பட்ட நீல ஓடுகள் மசூதியின் உட்புற சுவர்களை அலங்கரிக்கின்றன. இதனால், இரவில் இது நீல நிறமாகக் காணப்படுகிறது. விளக்குகள் இதன் ஐந்து முக்கிய குவிமாடங்கள், ஆறு மினாரெட்டுகள் மற்றும் எட்டு இரண்டாம் நிலை குவிமாடங்களை வடிவமைக்கின்றன.[1] நீல பள்ளிவாசல் கட்டப்படும் வரை மற்றொரு பிரபலமான சுற்றுலாத் தலமாக இருந்த இஸ்தான்புல்லின் பிரதான பள்ளிவாசலான ஹேகியா சோபியாவிற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இது .
வரலாறு
[தொகு]உதுமானியப் பேரரசுக்கும் அப்ஸ்பர்க் முடியாட்சிக்கும் இடையிலான பதினைந்து ஆண்டுகால யுத்தத்தை நவம்பர் 11, 1606 அன்று முடிவுக்குக் கொண்டுவந்த சமாதான உடன்படிக்கைகளின் ஒரு பகுதியான சிட்வடோரோக் அமைதி ஒப்பந்ததிற்குப் பிறகும், பெர்சியாவுடனான 1603–18 வரை நடந்த போரில் ஏற்பட்ட நஷ்டத்திற்குப் பிறகும்,உதுமானியப் பேரரசின் அதிகாரத்தை மீண்டும் உறுதிப்படுத்த சுல்தான் முதலாம் அகமது இசுதான்புல்லில் ஒரு பெரிய பள்ளிவாசலைக் கட்ட முடிவு செய்தார். இது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக முதல் ஏகாதிபத்திய பள்ளிவாசலாக இருந்தது. அவரது முன்னோடிகள் தங்களால் எழுப்பப்பட்ட பள்ளிவாசல்களுக்கு போரின் கொள்ளையிலிருந்து பணம் செலுத்தியிருந்தாலும், முதலாம் அகமது அரசின் கருவூலத்திலிருந்து நிதியை வாங்கினார். ஏனெனில் அவர் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறவில்லை. இந்த கட்டுமானம் 1609 இல் தொடங்கப்பட்டு 1616 இல் நிறைவடைந்தது. [2]
இது உலமாக்கள், முஸ்லிம் நீதிபதிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியது. பைசாந்தியப் பேரரசர்களின் அரண்மனையின் தளத்தில், ஹேகியா சோபியா (அந்த காலத்தில், இசுதான்புல்லில் இருந்த ஏகாதிபத்திய பள்ளிவசல்) மற்றும் ஹிப்போட்ரோம் ஆகியவற்றின் முன்னால் இது கட்டப்பட்டது.[3]
கட்டிடக்கலை
[தொகு]இந்த பள்ளிவாசலில் ஐந்து முக்கிய குவிமாடங்கள், ஆறு மினாரெட்டுகள் மற்றும் எட்டு இரண்டாம் நிலை குவிமாடங்கள் உள்ளன. இந்த வடிவமைப்பு இரண்டு நூற்றாண்டுகளின் உதுமானியர்களின் பள்ளிவாசல் வளர்ச்சியின் உச்சமாகும். இது அருகே இருக்கும் ஹேகியா சோபியாவின் பல பைசாந்தியர்களின் கூறுகளை பாரம்பரிய இஸ்லாமிய கட்டிடக்கலைகளுடன் இணைத்துள்ளது. மேலும் இது அவர்கள் காலத்தின் கடைசி பெரிய பள்ளிவாசலாக கருதப்படுகிறது. கட்டிடக் கலைஞரும், குடிசார் பொறியாளருமான, செடெப்கர் மெக்மத் அகா, தனது எஜமானர் சினானின் கருத்துக்களை ஒருங்கிணைத்தார். இது மிகப்பெரிய அளவு, கம்பீரத்தையும், சிறப்பையும் நோக்கமாகக் கொண்டது. மேல் பகுதி சுமார் 60 வெவ்வேறு துலிப் வடிவங்களில் கையால் வரையப்பட்ட மெருகூட்டப்பட்ட சுமார் 20,000 பீங்கான்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கீழ் தளம் 200 படிந்த கண்ணாடி சாரளங்களால் ஒளிருகின்றது. இந்த பள்ளிவாசலுக்கு முன்னதாக ஒரு பெரிய நீரூற்றும், நீர் வெளியேருவதற்கான சிறப்பு பகுதி கொண்ட ஒரு முன்பகுதியும் உள்ளது. மேற்குப் பகுதியில் உள்ள மாளிகையின் நுழைவாயிலில் ஒரு இரும்புச் சங்கிலி தொங்குகிறது.[4] சுல்தான் மட்டுமே இதன் வழியே குதிரையில் சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் சங்கிலியைத் தாக்காதபடி தலையைக் குணிந்து செல்ல வேண்டும், இது அல்லாஹ்வின் முன் ஆட்சியாளரின் மனத்தாழ்மையை உறுதிப்படுத்தும் ஒரு அடையாள சைகையாகும்.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்டின் வருகை
[தொகு]திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், நவம்பர் 30, 2006 அன்று துருக்கி பயணத்தின் போது சுல்தான் அகமது பள்ளிவாசலுக்கு வருகை புரிந்தார். இந்த வருகை ஒரு முஸ்லிம் வழிபாட்டுத் தலத்திற்கு வருகை தந்த இரண்டாவது போப்பாண்டவர் என ஆனது. தனது காலணிகளை அகற்ளை மூடி அமைதியான தியானத்தில் இருந்தார்.[5] இஸ்தான்புல்லின் முப்தி முஸ்தபா காக்ரேசியும், நீல மசூதியின் இமாம் எமருல்லா ஹதிபோகுவும் ஆகியோரும் அவருடன் அருகருகே இருந்தனர்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Blue Mosque". sultanahmetcamii.org. Archived from the original on 18 ஆகஸ்ட் 2013. Retrieved 12 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Goodwin 2003, ப. 343.
- ↑ "History". sultanahmetcamii.org. Archived from the original on 10 மார்ச் 2016. Retrieved 12 June 2014.
- ↑ "Architecture". sultanahmetcamii.org/architecture-of-the-mosque/. Archived from the original on 1 செப்டம்பர் 2018. Retrieved 12 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Pope Benedict XVI Visits Turkey's Famous Blue Mosque". Fox News. 2006-11-30. Retrieved 2011-10-19.
- ↑ "Pope makes Turkish mosque visit". BBC News. 2006-11-30. Retrieved 2012-01-26.
ஆதாரங்கள்
[தொகு]- Efendi, Evliya (1834). Narrative of Travels in Europe, Asia, and Africa, in the Seventeenth Century. Vol. Volume 1. trans. Ritter Joseph Von Hammer. London: Printed for the Oriental translation fund of Great Britain and Ireland.
{{cite book}}
:|volume=
has extra text (help); Invalid|ref=harv
(help) - Goodwin, Godfrey (2003) [1971]. A History of Ottoman Architecture. London: Thames & Hudson. ISBN 978-0-500-27429-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
The Inside Track, On the Go Tours.
மேலும் படிக்க
[தொகு]- Sheila S. Blair, Jonathan M. Bloom – "The Art and Architecture of Islam, 1250–1800", Yale University Press, 1994; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-05888-8
- Turner, J. (ed.) – Grove Dictionary of Art – Oxford University Press, USA; New edition (January 2, 1996); பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-517068-7