சுருதி சடோலிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுருதி சடோலிகர்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சுருதி சடோலிகர்
பிறப்பு9 நவம்பர் 1951 (1951-11-09) (அகவை 72)
பிறப்பிடம்மகாராட்டிரா, இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
இசைக்கருவி(கள்)பாடகர்

சுருதி சடோலிகர் கட்கர் (Shruti Sadolikar-பிறப்பு: நவம்பர் 9, 1951) செய்ப்பூர்-அத்ராலி கரானாவில் கியால் பாணியில் ஓர் இந்தியப் பாரம்பரிய பாடகர் ஆவார்.[1] இவர் 2011ஆம் ஆண்டுக்கான இந்துஸ்தானி குரல் இசைக்கான சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றுள்ளார்.[2]

இளமை[தொகு]

சுருதி 1951ஆம் ஆண்டு கோலாப்பூரைச் சேர்ந்த ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார்.[3][4] இவரது குடும்பம் இசை பாரம்பரியத்திற்குப் பெயர் பெற்றது. சிறுவயதிலிருந்தே இந்தியப் பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றார், சுருதி. இவரது ஆரம்பப் பயிற்சியை இவரது தந்தை வாமன்ராவ் சடோலிகர் வழங்கினார். சுருதி, ஜெய்ப்பூர்-அத்ராலி கரானாவின் நிறுவனர் அல்லாடியா கான் மற்றும் அவரது மகன் புர்ஜி கான் ஆகியோரால் கற்பிக்கப்பட்டார். சதோலிகர் தனது தந்தையுடன் படித்ததைத் தொடர்ந்து, குலுபாய் ஜஸ்தன்வாலாவிடம் பன்னிரண்டு ஆண்டுகள் இசையைக் கற்றுக்கொண்டார்.[1][5] சுருதி மும்பையில் உள்ள திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவரது ஆய்வறிக்கை ஹவேலி சங்கீதம், கோயில் இசையின் ஒரு வகை குறித்தது.[5]

இசைப்பணி[தொகு]

சுருதி, தும்ரி, தப்பா மற்றும் நாட்டிய சங்கீதம் உட்பட இந்தியப் பாரம்பரிய மற்றும் பகுதி பாரம்பரிய இசையின் அனைத்து வடிவங்களையும் நிகழ்த்துகிறார். மேலும் இந்தியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். இவர் பல இசை மற்றும் கல்வி பதிவுகளை வெளியிட்டு உள்ளார். தேசிய கலை நிகழ்ச்சிகளுக்கான ஹோமி பாபா நிதியுதவியினையும் பெற்றுள்ளார்.[5] 1999ஆம் ஆண்டில், சடோலிகர் "சங்கீத துளசிதாசு" என்ற பெயரில் ஒரு நாடகத்தைத் தயாரித்தார். இதற்கு இவர் இசையும் அமைத்துள்ளார். மேலும் இவர் இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கத்தின் மூலம் இந்தியப் பாரம்பரிய இசையில் ஆர்வம் உள்ள இளம் இந்தியர்களுக்கு உதவ ஆர்வம் காட்டினார்.[5] சடோலிகர் இந்தியத் திரைப்படங்களில் தொடர்ந்து பின்னணி பாடியுள்ளார். சடோலிகர் 2009 முதல் 2020 வரை உத்தரப் பிரதேசத்தின் இலக்னோவில் உள்ள பத்கண்டே இசைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Das, C. L. (4 July 2008). "Some enticing variety". தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 December 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081203204025/http://hindu.com/thehindu/fr/2008/07/04/stories/2008070450310200.htm. பார்த்த நாள்: 5 April 2009. 
  2. Sangeet Natak Akademi Award(15 December 2011). "Declaration of Sangeet Natak Akademi Fellowships (Akademi Ratna) and Akademi Awards (Akademi Puraskar) for the year 2011". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 17 January 2012.
  3. Dorian, Frederick; Broughton, Simon; Ellingham, Mark; McConnachie, James; Trillo, Richard; Duane, Orla (2000). World Music: The Rough Guide. Rough Guides. பக். 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85828-636-0. https://books.google.com/books?id=QzX8THIgRjUC&pg=PA92. 
  4. Tandon, Aditi (6 Nov 2000). "Three Days of Rich Musical Treat". The Tribune. http://www.tribuneindia.com/2000/20001107/cth2.htm. பார்த்த நாள்: 8 January 2014. 
  5. 5.0 5.1 5.2 5.3 Kumar, Mala (1 March 2004). "Reflecting on notes". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 May 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040506223057/http://www.hindu.com/mp/2004/03/01/stories/2004030102360300.htm. பார்த்த நாள்: 5 April 2009. 
  6. "Prof. Shruti Sadolikar-Katkar". Bhatkhande Music Institute University, Lucknow. Archived from the original on 12 January 2010. பார்க்கப்பட்ட நாள் 11 January 2010.

புற இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருதி_சடோலிகர்&oldid=3920324" இலிருந்து மீள்விக்கப்பட்டது