சுருதி கபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர். சுருதி கபூர் (Dr. Shruthi Kapoor)(பிறப்பு 25 செப்டம்பர்) ஓர் இந்திய பொருளாதார நிபுணர், பெண்கள் உரிமை ஆர்வலர் மற்றும் சமூக தொழில்முனைவோர் ஆவார் .

இவர் சேய்ஃப்டி என்ற நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். [1] இளம் பெண்கள் எல்லா வகையான வன்முறைகளையும் எதிர் கொள்வதற்கான விழிப்புணர்வு பெறவும், உரிமை பெறுதல் அல்லது அதிகாரம் பெற்றவர்களாக பெண்களை வலிமையடையச் செய்வதற்கான நோக்கம் கொண்ட தொடக்க நிலை முயற்சியாகும். [2]

பின்னணி[தொகு]

இந்தியாவின் கான்பூரில் பிறந்த [3] கபூர் 2000 ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்றார். [4] மார்க்வெட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, [5] இவர் வாஷிங்டன், டிசியில் உள்ள உலக வங்கியின் பொருளாதார நிபுணராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து, இவர் கலிஃபோர்னியாவிற்கு பொருளாதாரத்தில் தனது முனைவர் பட்ட ஆய்விற்காகச் சென்றார்.[5] உலக வங்கியின் ஆலோசகராக இருந்தார். முனைவர் பட்டம் பெற்ற பிறகு, கபூர் ஓக்சிடென்டல் கல்லூரியில் ஒரு வருடம் பொருளாதாரத்தை கற்பித்தார். [5]

செயல்பாடுகள் மற்றும் சமூகத் தொழில்முனைவு[தொகு]

முனைவர் கபூர் ஜூன் 2013 இல் அனைத்து வகையான வன்முறைகளுக்கும் எதிராக இளம் பெண்கள் மற்றும் பெண்களுக்கு கல்வி கற்பதற்கான ஒரு முயற்சியாக சேய்ஃப்டியை நிறுவினார். [3] இந்த முயற்சி இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு தற்காப்பு, மிளகு-தெளிப்பு [6]உள்ளிட்ட தற்காப்புக்கான உபாயங்களைச் சொல்லித்தந்தது. சட்டங்கள் மற்றும் சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு, [6] மற்றும் பாதுகாப்பை சுற்றி உரையாடலை உருவாக்குதல் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக உணரப்படும் விடயங்கள் குறிதத விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் ஃபெம்வர்டைசிங் மூலம் சேய்ஃப்டிக்கு மக்கள் தேர்வு விருது வழங்கப்பட்டது. [7] நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றும் உலகளாவிய செய்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த 2012 ஆம் ஆண்டு தில்லி கும்பல் பாலியல் வல்லுறவு மூலம் 23 வயது பெண்ணைக் கொன்றதைத் தொடர்ந்து சேய்ஃப்டியை நிறுவினார்.

2019 ஆம் ஆண்டு நியூயார்க் நகரமான ப்ரூக்ளின், பார்க் ஸ்லோப் பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இரண்டு தங்குமிடங்களை எதிர்த்து கபூர் ஒரு பொது மனுவைத் தொடங்கினார். அவர் தங்குமிடங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது, "வீடுகள் இல்லாதவர்களுக்கு இரண்டு அடுத்தடுத்த தொகுதிகளில் இரண்டு பெரிய கட்டிடத் தொகுப்புகளை அமைப்பது வீடற்றோரின் சமூகத்திற்கு நியாயமில்லை" என்றும், அவை "சொத்து மதிப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றும் கூறினார். [8] [9]

பொது பேச்சு[தொகு]

ஒரு ஆர்வலராக, முனைவர் கபூர் ஆகஸ்ட் 2016 இல் ஐக்கிய நாடுகள் சபையில் இளைஞர் பேரவை உட்பட பல பொது மன்றங்களில் உரையாற்றினார் [10]

ஆகஸ்ட் 2017 இல், சுருதி ஐக்கிய நாடுகள் சபையில் 2017 கோடைகால இளைஞர் பேரவையில் ஒரு உரையை நிகழ்த்தினார், பாலின சமத்துவத்தை நிவர்த்தி செய்வதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் தனது பணியை உரையாற்றினார். [11]

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இவர் ஐக்கிய நாடுகள் சபையில் இளைஞர் மன்றத்தில் (CSW61) ஒரு பொருளாதார சக்தியாக இளம் பெண்கள் என்ற குழுவை வழிநடத்தினார்.

ஜனவரி 2017 இல், சுருதி ஐக்கிய நாடுகள் சபையில் குளிர்கால இளைஞர் பேரவையில் உரையாற்றினார். இவர் இளம் பெண்களின் பொருளாதார மேம்பாடு பற்றி பேசினார்.

நவம்பர் 2016 இல், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தைக் கொண்டாடும் வகையில், ஐ.நா பெண்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இளைஞர் மேம்பாட்டிற்கான முகமைகளிடையே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில், இவர் இளம் பெண்களுக்கு பொருளாதார அதிகாரமளிப்பதில் பெண்களுக்கு எதிரான வன்முறையின் தாக்கம் பற்றி பேசினார். [12]

ஆகஸ்ட் 2016 இல், சுருதி ஐக்கிய நாடுகள் சபையில் கோடைக்கால இளைஞர் பேரவையில் இரண்டு தனித்தனி அமர்வுகளில் உரையாற்றினார். இவரது முதல் பேச்சே ஐக்கிய நாடுகள் சபையில் இளைஞர்களின் ஈடுபாட்டை மையமாகக் கொண்டிருந்தது. இரண்டாவது பேச்சு இளம் பெண்கள் தலைமைத்துவத்தில் முதலீடு செய்வதை மையமாகக் கொண்டிருந்தது.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

முனைவர் கபூர் 2019 ஆம் ஆண்டில் அரசியலற்ற சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராக அங்கீகரித்தது.[13]

இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் முனைவர் கபூரை சமூக வலைத்தளங்கள் மூலம் சமூக மாற்றத்தின் நேர்மறையான நிகழ்ச்சி நிரலை இயக்கிய 30 #வெப்ஒன்டர்உமன்களில் ஒருவராக வழிவகை செய்தது. [14]

ரிச்டோபியா 2018 ஆம் ஆண்டில் உலகளாவிய அளவில் பலதரப்பு அமைப்புகளின் முதல் 100 தலைவர்களில் ஒருவராக முனைவர் கபூரை பெயரிட்டார். [15]

டாக்டர் கபூர் இத்தாலியின் ஏஓஸ்டா பள்ளத்தாக்கின் (2015) ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த பெண்கள் விருதைப் பெற்றவர். [16] மார்ச் 23 ஆம் தேதி புதுடில்லியில் ரெக்ஸ் கரம்வீர் குளோபல் பெல்லோஷிப்பைப் பெற்றார்.

மார்ச் 2016 இல், உலகளாவிய மேம்பாட்டு சுவரின் புகழ்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் 200 பெண்களில் ஒருவராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Start up gathers funds for women's safety in India (Includes interview)". Digital Journal. 2014-01-14. பார்க்கப்பட்ட நாள் 2016-08-18.
 2. Prasad, Aryanna (10 July 2015). "South Asian Women Shine in 'Stars of STEM' Fashion Show in New York City". India.com. பார்க்கப்பட்ட நாள் 17 September 2016.
 3. 3.0 3.1 Segalov, Michael (11 March 2016). "The Indian women learning to fight for survival". Huck Magazine. Archived from the original on 12 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 17 September 2016.{{cite web}}: CS1 maint: unfit URL (link)Segalov, Michael (11 March 2016). . Huck Magazine. Archived from the original பரணிடப்பட்டது 2016-05-12 at the வந்தவழி இயந்திரம் on 12 May 2016. Retrieved 17 September 2016.
 4. Roy, Baisakhi (13 January 2014). "Start up gathers funds for women's safety in India". Digital Journal. பார்க்கப்பட்ட நாள் 17 September 2016.
 5. 5.0 5.1 5.2 "Meet the SHEROES - Shruti Kapoor". sheroes.in. Sheroes. பார்க்கப்பட்ட நாள் 2016-08-18.
 6. 6.0 6.1 "World Bank economist starts a website for women's safety". Hindustan Times. 2013-07-27. http://www.hindustantimes.com/lifestyle/world-bank-economist-starts-a-website-for-women-s-safety/story-Ep9MaT9M38EIcV33lj2Z3L.html. 
 7. Ross Godar, Julie (17 July 2015). "Meet the 7 Ad Companies Who Are Changing Our Culture". Blogher. Archived from the original on 9 October 2016. பார்க்கப்பட்ட நாள் 17 September 2016.
 8. "Park nope: Park Slope residents create petition to protest planned family shelters • Brooklyn Paper".
 9. Ginia Bellafante (31 May 2019). "Are We Fighting a War on Homelessness? Or a War on the Homeless?". New York Times. https://www.nytimes.com/2019/05/31/nyregion/homelessness-shelters.html. 
 10. "Dr. Shruti Kapoor". The Youth Assembly at the United Nations. Archived from the original on 14 September 2017. பார்க்கப்பட்ட நாள் 2016-08-18.
 11. "Opportunities in "Technovation" to create the World We Want and Achieve Gender Equality". http://webtv.un.org/search/opportunities-in-“technovation”-to-create-the-world-we-want-and-achieve-gender-equality-2017-summer-youth-assembly-9-12-august-/5538040240001/?term=&lan=english&page=3. 
 12. "Youth Action to End Violence Against Women and Girls". 2017-11-21. http://webtv.un.org/watch/youth-action-to-end-violence-against-women-and-girls/5219689865001. 
 13. "Gender Equality Top 100". https://apolitical.co/lists/gender-equality-100/. 
 14. "WebWonderWomen". http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=187372. 
 15. "Top 100 Leaders From Multilateral Organizations" இம் மூலத்தில் இருந்து 12 ஆகஸ்ட் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190812041854/https://richtopia.com/inspirational-people/multilateral-organisation-influencers-top-100. 
 16. "International Women Of The Year". http://www.valledaostaglocal.it/2015/03/21/leggi-notizia/argomenti/attualita-2/articolo/premio-donna-dellanno-aicha-belco-maiga-vincitrice-della-17esima-edizione.html. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருதி_கபூர்&oldid=3604843" இலிருந்து மீள்விக்கப்பட்டது