உள்ளடக்கத்துக்குச் செல்

சுரபி லெட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரபி லெட்சுமி
பிறப்புசுரபி.சி.எம்
16 நவம்பர் 1986 (1986-11-16) (அகவை 39)
நரிக்குனில், கோழிக்கோடு, கேரளா,இந்தியா
கல்விதிரையரங்கக்கலை முதுகலை பட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்மகாத்மாகாந்தி பல்கலைக்கழகம், கேரளா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
விபின் சுதாகர் (திருமணம் 2014; விவாகரத்து 2017)[1]
விருதுகள்தேசிய திரைப்பட விருது (2016)
வலைத்தளம்
www.surabhilakshmi.com

சுரபி சி.எம் (Surabhi Lakshmi) என்று அழைக்கப்படும் சுரபி லட்சுமி என்பவர், ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் மேடை ஆகியனவற்றிலும் நடித்து வருகிறார். இவர் மலையாளத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தோன்றுகிறார்.

மின்னாமினுங்கு என்ற மலையாளத் திரைப்படத்தில் நடுத்தர வயதுடைய தாயின் பாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக 2016 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

லெட்சுமி அக்டோபர் 5, 1987 ஆண்டு ஆண்டி-ராதா இணையருக்குப் பிறந்தார். இவர் கேரள மாநிலம் கோழிக்கோடில் உள்ள நரிக்குனி எனும் ஊரை சார்ந்தவர்.[3][4]

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், காலடியில் உள்ள ஸ்ரீ சங்கராச்சாரியா சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் முதல் தரவரிசையுடன் பரதநாட்டியத்தில் பி.ஏ பட்டம் பெற்றார்.[2]

சிறீ சங்கராச்சார்யா சமசுகிருதப் பல்கலைக்கழகத்தில் நாடகக் கலையில் எம்.ஏ பட்டமும், மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் நிகழ்த்துக் கலையில் எம்.பில் பட்டமும் பெற்றார்.[4]

2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவர் ஸ்ரீ சங்கராச்சாரியா சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் நிகழ்த்துக் கலையில் பி.எச்.டி மாணவி ஆவார்.[5]

சுரபி லெட்சுமி அனைத்து விவரங்கள் உள்ளன பரணிடப்பட்டது 2024-12-28 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Surabhi Lakshmi divorced: National award winning actress' ex-husband posts their 'last selfie'". International Business Times. 2017-07-12.
  2. 1 2 https://www.newindianexpress.com/entertainment/malayalam/2017/apr/07/six-things-you-did-not-know-about-national-award-winning-surabhi-lakshmi-1591070.html
  3. "The Scent Of Acting - Trivandrum News | Yentha.com". web.archive.org. 2018-06-27. Archived from the original on 2018-06-27. Retrieved 2025-04-26.
  4. 1 2 "About Surabhi Lakshmi, Indian National Award winner for best actress 2016". www.surabhilakshmi.com. Archived from the original on 2019-09-03. Retrieved 2025-04-26.
  5. "I Don't Want To Be A Star, I Want To Be A Good Artist, Says Surabhi Who Won The National Award For Best Actress". Outlook India (in ஆங்கிலம்). 2018-01-27. Retrieved 2025-04-26.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரபி_லெட்சுமி&oldid=4587397" இலிருந்து மீள்விக்கப்பட்டது