காலடி (ஊர்)
Jump to navigation
Jump to search
காலடி கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஓரு ஊர் ஆகும். ஆதிசங்கரர் பிறந்த ஊரான இது இந்து மத மக்களின் ஒரு முக்கிய புனித யாத்திரை வழிபாட்டு தலமாக விளங்குகிறது. இங்கு ஆதிசங்கரர் பிறந்த இடமான பூர்ணா நதிக்கரையில் ஒரு மடமும், காலடி பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஒரு ஸ்தம்ப மண்டபமும் உள்ளது.
பெயர் விளக்கம்[தொகு]
மலையாளம் மற்றும் தமிழில் காலடி என்கிற வார்த்தைக்கு பாதச்சுவடு என்று பொருள்.
அருகில் உள்ள மற்ற முக்கிய இடங்கள்[தொகு]
- கிருஷ்ணர் கோயில்
- காலடி ஆதிசங்கர கீர்த்தி ஸ்தம்ப மண்டபம்
- இராமகிருஷ்ண அத்வைத ஆசிரமம்.