சுமாத்திரா பச்சைக்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமாத்திரா பச்சைக்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: குளோரப்செடே
பேரினம்: குளோரோப்சிசு
இனம்: கு. மீடியா
இருசொற் பெயரீடு
குளோரோப்சிசு மீடியா
(போனாபர்தி, 1850)
வேறு பெயர்கள்

குளோரோப்சிசு ஆரிப்ரான்சு மீடியா

சுமாத்திரா பச்சைக்குருவி (Sumatran leafbird-குளோரோப்சிசு மீடியா) என்பது குளோரோப்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவின் சுமாத்திராவில் உள்ள காடு மற்றும் தோட்டங்களில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது பெரும்பாலும் தங்க முக பச்சைச்சிட்டின் (கு. ஆரிப்ரான்சு) துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் இரண்டும் மற்றவற்றுடன், உருவ அமைப்பில் விரிவாக வேறுபடுகின்றன. சுமாத்திரா பச்சைக்குருவியின் ஆண் மஞ்சள் (ஆரஞ்சு அல்ல) நெற்றியைக் கொண்டுள்ளது. பெண் குருவி நீல நிற இறக்கைகள் கொண்ட பெண் பச்சைக்குருவியினை ஒத்திருக்கும். ஆனால் மஞ்சள் நிற நெற்றி மற்றும் இறக்கைகள் மற்றும் வால் வரை நீலம் இல்லை (ஆணும் பெண்ணும் மிகவும் ஒத்ததாக இருக்கும் தங்க நெற்றி பச்சைக்குருவியிலிருந்து வேறுபட்டது).

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2019). "Chloropsis media". IUCN Red List of Threatened Species 2019: e.T22732267A156989848. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22732267A156989848.en. https://www.iucnredlist.org/species/22732267/156989848. பார்த்த நாள்: 16 November 2021. 
  • Wells, D. R. (2005). Chloropsis media (Sumatran Leafbird). P. 266 in: del Hoyo, J., A. Elliott, & D. A. Christie. eds. (2005). Handbook of the Birds of the World. Vol. 10. Cuckoo-shrikes to Thrushes. Lynx Edicions, Barcelona.