உள்ளடக்கத்துக்குச் செல்

சுபதீப் சாட்டர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபதீப் சாட்டர்ஜி
Subhadeep Chatterjee
பிறப்பு
மேற்கு வங்காளம், இந்தியா
வதிவுகொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
Alma mater
துறை ஆலோசகர்
  • இரமேஷ் வெங்கட சோந்தி
  • ஸ்டீவன் ஈ லிண்டோவ்
அறியப்பட்டதுதாவர நுண்ணுயிரி குறுக்கீடுகள்

சுபதீப் சாட்டர்ஜி (Subhadeep Chatterjee) என்பவர் இந்திய மூலக்கூறு உயிரியலாளர் மற்றும் டி.என்.ஏ கைரேகை மற்றும் நோயறிதலுக்கான மையத்தின் (சி.டி.எஃப்.டி) ஆராய்ச்சியாளர் ஆவார்.[1] குஹா ஆராய்ச்சி மாநாட்டின் உறுப்பினரான [2] இவர் தாவர-நுண்ணுயிர் இடைவினைகள் குறித்த ஆய்வுகளுக்காக அறியப்பட்டவர். சட்டர்ஜி சி.டி.எஃப்.டி[3]வின் தாவர-நுண்ணுயிர் தொடர்பு ஆய்வகத்தின் தலைமை ஆய்வாளராக இருந்து பல ஆராய்ச்சியாளர்களை வழிநடத்தி வருகிறார்.[4]

சாட்டர்ஜி, அமிருதசரசில் உள்ள குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை உயிரித்தொழில்நுட்பவியல் கல்விக்குப் பின்னர், ஐதராபாத்தின் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் (சி.சி.எம்.பி) ரமேஷ் வெங்கட சோந்தியின் ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.[3] இவர், தனது முனைவர் பட்ட மேல் ஆய்வுகளை பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஸ்டீவன் ஈ. லிண்டோவின் ஆய்வகத்தில் தொடர்ந்தார். இவர் தாவர-நுண்ணுயிர் தொடர்பு அமைப்பு குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். ஆய்வுகளின் முடிவுகளை ஆய்வுக் கட்டுரைகளாகப் பன்னாட்டு அறிவியல் ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார்.[5][குறிப்பு 1] ரிசர்ச் கேட், அறிவியல் கட்டுரைகளின் இணைய களஞ்சியம் அவற்றில் 52 கட்டுரைகளைப் பட்டியலிட்டுள்ளது.[6][7] இந்திய அரசின் உயிரித்தொழில்நுட்பவியல் துறை, 2017/18ஆம் ஆண்டில், உயிரியலுக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக, மிக உயர்ந்த இந்திய அறிவியல் விருதுகளில் ஒன்றான, தொழில் மேம்பாட்டுக்கான தேசிய உயிர் அறிவியல் விருதை வழங்கியது.[8]

உயிரியல் அறிவியல் பிரிவில் 2020ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருது சுபதீப் சாட்டர்ஜிக்கு வழங்கப்பட்டது. [9]

தேர்ந்தெடுக்கப்பட்ட நூலியல்

[தொகு]
சி.டி.எஃப்.டி உப்பல் வளாகம்

குறிப்புகள்

[தொகு]
  1. Please see Selected bibliography section

 

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Subhadeep Chatterjee's Publons profile". publons.com (in ஆங்கிலம்). 2018-12-29. பார்க்கப்பட்ட நாள் 2018-12-29.
  2. "CDFD-Awards". Centre for DNA Fingerprinting and Diagnostics. 2018-12-29. பார்க்கப்பட்ட நாள் 2018-12-29.
  3. 3.0 3.1 "CDFD :: Plant-Microbe Interactions :: Dr. Subhadeep Chatterjee". www.cdfd.org.in. 2018-12-29. பார்க்கப்பட்ட நாள் 2018-12-29.
  4. "CDFD :: Plant-Microbe Interactions :: Group". www.cdfd.org.in. 2018-12-29. பார்க்கப்பட்ட நாள் 2018-12-29.
  5. "Subhadeep Chatterjee - Google Scholar Citations". scholar.google.com. 2018-12-29. பார்க்கப்பட்ட நாள் 2018-12-29.
  6. "Subhadeep Chatterjee's research works - The Centre for DNA Fingerprinting and Diagnostics, Hyderabad (CDFD) and other places". ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-29.
  7. "Subhadeep Chatterjee's research works - Visva Bharati University, Bolpur and other places". ResearchGate (in ஆங்கிலம்). 2018-12-29. பார்க்கப்பட்ட நாள் 2018-12-29.
  8. "Awardees of National Bioscience Awards for Career Development" (PDF). Department of Biotechnology. 2016. Archived from the original (PDF) on 2018-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-11-20.
  9. "Shanti Swarup Bhatnagar Prize (SSB) for Science and Technology 2020 List of recipients" (PDF). Shanti Swarup Bhatnagar Prize for Science and Technology. CSIR Human Resource Development Group, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 28 September 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபதீப்_சாட்டர்ஜி&oldid=4053287" இலிருந்து மீள்விக்கப்பட்டது