உள்ளடக்கத்துக்குச் செல்

சுனில் தட்கரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனில் தத்தாத்ரே தட்கரே
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2024
தொகுதிராய்காட்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
23 மே 2019 – மே 2024
முன்னையவர்ஆனந்த் கீத்தே
தேசியவாத காங்கிரசு கட்சி
பதவியில்
16 பிப்ரவரி 2015 – 20 ஏப்ரல் 2018
தேசியவாத காங்கிரசு கட்சிசரத் பவார்
முன்னையவர்ஆர். ஆர். பட்டீல்
பின்னவர்ஜெயந்த் பட்டீல்
மகாராட்டிர சட்டமன்றம்
பதவியில்
2009–2014
முன்னையவர்துக்காராம் சுர்வே
பின்னவர்அவ்கூத் தட்கரே
தொகுதிசிறீவர்தன்
மகாராட்டிர சட்டமன்றம்
பதவியில்
1995–2009
முன்னையவர்அசோக் சப்பேலே
தொகுதிமகாராட்டிர சட்டமன்றம்
அமைச்சர், விலாஸ்ராவ் தேஷ்முக் அமைச்சரவை
பதவியில்
19 அக்டோபர் 1999 – 16 சனவரி
அமைச்சர்
  • நகர்புற மேம்பாடு
  • துறைமுக மேம்பாடு
  • நகர்ப்புற நிற உச்சவரம்புத் துறை
அமைச்சர், விலாஸ்ராவ் தேஷ்முக் அமைச்சரவை
பதவியில்
1 நவம்பர் 2004 – 4 திசம்பர் 2008
அமைச்சர்
  • உணவு, குடிமைப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு
  • களர் நிலமேம்பாடு
முன்னையவர்சுசில்குமார் சிண்டே
பின்னவர்இரமேஷ் சந்திர கோபிகிசான் பாங்
அமைச்சர், அசோக் சவான் அமைச்சரவை
பதவியில்
8 திசம்பர் 2008 – 6 நவம்பர் 2009
அமைச்சர்
  • எரிசக்த்தி. புதிய, புதுப்பிக்கவல்ல சக்தி, மாற்று எரிபொருள்
முன்னையவர்திலீப் வால்சி பட்டீல்
பின்னவர்அஜித் பவார்
அசோக் சவான் அமைச்சரவை
பதவியில்
07 நவம்பர் 2009 – 10 நவம்பர் 2010
அமைச்சர்
  • நிதியமைச்சர்
  • திட்டமிடல் துறை
முன்னையவர்திலீப் வால்சி பட்டீல்
பின்னவர்அஜித் பவார்
பிரித்வி சவான் அமைச்சரவை
பதவியில்
11 நவம்பர் 2010 – 26 செப்டம்பர் 2014
அமைச்சர்
  • நீர்வளம்
முன்னையவர்
பின்னவர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சூலை 1955
சுதார்வாதி, ஜம்க்கொன், ரோகா தாலுகா,ராய்கட் மாவட்டம்
தேசியம்இந்தியா இந்தியர்
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய ஜனநாயகக் கூட்டணி (2023–முதல்)
துணைவர்வர்தா தட்கரே
உறவுகள்அனில் தட்கரே (சகோதரர்), அவ்த்தூட் தட்கரே
பிள்ளைகள்அனிகெட் தட்கரே, அதீதி சுனில் தாக்கரே

சுனில் தத்தாத்ரே தட்கரே (Sunil Tatkare) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தற்போது ராய்காட் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் ஆவார். இவர் முன்பு மகாராட்டிராவின் நீர்வள அமைச்சராக இருந்துள்ளார். இவர் மகாராட்டிர சட்டமன்ற ரீவர்தன் தொகுதியிலிருந்து மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[1] இவர் முன்பு மகாராட்டிர சட்டமன்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராகவும் பணியாற்றினார். தட்கரே பல வழக்குகளில் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊழல் தடுப்பு பணியகம் நில அபகரிப்பு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இவருக்கு எதிராக விசாரணையைத் தொடங்க மாநில அரசாங்கத்தின் உத்தரவைக் கோரியுள்ளது.[2] சொத்துக்கள் வழக்கில் அவருக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் விசாரணையைத் தொடங்கியது.[3]


தட்கரே 10 சூலை 1955 அன்று சுதர்வாடி கோலாட்டில் பிறந்தார். புனேயில் உள்ள பெர்குசன் கல்லூரியில் இடைநிலை அறிவியல் வரை கல்வி கற்றுள்ளார். 1984-இல் இந்திய தேசிய காங்கிரசில் சேருவதற்கு முன்பு இவர் அரசு சாலை ஒப்பந்தக்காரராகப் பணியாற்றினார். 1995-இல் காங்கிரசு கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ஆம் ஆண்டில் இவர் உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2008ஆம் ஆண்டில் எரிசக்தி அமைச்சராகவும், 2009ஆம் ஆண்டில் நிதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இவரது மகள் அதீதி சுனில் தட்கரே மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "A Whole Lotta Loot Going On?".
  2. "Anti-Corruption Bureau seeks nod to probe irrigation minister | Mumbai News - Times of India". The Times of India.
  3. "Enforcement Directorate begins probe against NCP leader Sunil Tatkare in assets case". NDTV.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_தட்கரே&oldid=3997079" இலிருந்து மீள்விக்கப்பட்டது