சுந்தா சிறிய ஆந்தை
சுந்தா சிறிய ஆந்தை | |
---|---|
![]() | |
சிங்கப்பூரில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஓடசு
|
இனம்: | ஓ. லெம்பிஜி
|
இருசொற் பெயரீடு | |
ஓடசு லெம்பிஜி கோர்சூபீல்டு, 1821 |
சுந்தா சிறிய ஆந்தை (Sunda scops owl)(ஓடசு லெம்பிஜி) என்பது சுந்தா தீவுகளைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு சிறிய பழுப்பு ஆந்தை ஆகும்.
வகைப்பாட்டியல்
[தொகு]இந்த உயிரலகானது சில ஆசிரியர்களால் ஓடசு பக்கமோனாவின் துணையினமாகக் கருதப்படுகிறது.[3]
விளக்கம்
[தொகு]சுந்தா சிறிய ஆந்தை, 20 முதல் 25 வரை செ.மீ. நீளமும், 100 முதல் 170 வரை கிராம் எடையுள்ளதாக இருக்கும் . இதனுடைய மேல் பகுதிகளில் கறுப்பு நிறப் புள்ளிகள் மற்றும் கீழ்ப் பகுதிகளில் கருப்பு நிற கோடுகளுடன் உள்ளது. இது ஒளிரக்கூடிய கழுத்துப் பட்டை மற்றும் கருமையான கண்களைக் கொண்டுள்ளது. இது சிவப்பு நிற சிறிய ஆந்தை, மலை ஆந்தை, கிழக்கத்தியச் சிறிய ஆந்தை மற்றும் ராஜா சிறிய ஆந்தைகளிலிருந்து வேறுபடுகிறது.[4]
பரவல்
[தொகு]சுந்தா சிறிய ஆந்தை, மலாய் தீபகற்பம், சிங்கப்பூர், போர்னியோ, சுமத்திரா மற்றும் சாவகம் தீவில் வாழ்கிறது. இது முதன்மையாகக் காடுகள் மற்றும் தோட்டங்களில் காணப்படுகிறது. ஆனால் எப்போதாவது கட்டிடங்களில் காணப்படும்.
உணவு
[தொகு]சுந்தா சிறிய ஆந்தையின் உணவில் முக்கியமாகப் பூச்சிகள், தரைப்பல்லிகள் மற்றும் பல்லிகள் போன்ற சிறிய விலங்குகள் உள்ளன.[5]
பாதுகாப்பு
[தொகு]சுந்தா சிறிய ஆந்தையானது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க செம்பட்டியலில்அழிந்து வரும் உயிரினங்களின் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. பொருத்தமான வாழ்விடம் இருக்கும் இதன் எல்லை முழுவதும் இது பொதுவானது.[6]
நடத்தை
[தொகு]சுந்தா ஆந்தை தன் கூட்டை தாவர நார்களால் கட்டுகிறது. இது ச்அனவரி முதல் ஏப்ரல் வரை ஒரு மரத்தின் குழியில் மூன்று முட்டைகள் வரை இடும் அவற்றின் இனப்பெருக்க காலம் சில நேரங்களில் சூன் அல்லது சூலை பிற்பகுதி வரை நீட்டிக்கப்படும். சுந்தா சிறிய ஆந்தை, பிராந்திய நடத்தையைக் காட்டி மற்ற ஆந்தைகளால் அச்சுறுத்தப்படும்போது ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும். ஒரு பெண் சுந்தா ஆந்தை அச்சுறுத்தலை உணரும் போது ஆக்ரோஷமாகச் செயல்படும், ஊடுருவும் நபர்களைக் குறுக்கிட்டு அவற்றைத் தனது இருப்பிடத்திலிருந்து தூர வைத்திருப்பதை எச்சரிக்கும் வகையில் குரல் கொடுக்கும்.[7]
படங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Otus lempiji". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T61859106A95182654. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T61859106A95182654.en. http://www.iucnredlist.org/details/61859106/0. பார்த்த நாள்: 15 January 2018.
- ↑ "Appendices | CITES". cites.org. Retrieved 2022-01-14.
- ↑ "Sunda Scops Owl". Retrieved 16 February 2021.
- ↑ "Sunda Scops Owl". Singapore Birds. 10 January 2016. Retrieved 10 August 2021.
- ↑ "Sunda Scops Owl - BirdForum Opus". Bird Forum. Retrieved 10 August 2021.
- ↑ "Otus lempiji". IUCN Red List of Threatened Species. 2016. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T61859106A95182654.en. http://dx.doi.org/10.2305/IUCN.UK.2016-3.RLTS.T61859106A95182654.en. பார்த்த நாள்: 16 February 2021.
- ↑ Phillcaine, Pilla (2018). "Sunda Scops-Owl Density Estimation via Distance Sampling and Call Playback.". Sains Malaysiana 47 (3): 441–446. doi:10.17576/jsm-2018-4703-03. http://www.ukm.my/jsm/pdf_files/SM-PDF-47-3-2018/03%20Phillcaine%20Pilla.pdf.
மேலும் படிக்க
[தொகு]- Yee, SA, Puan, CL, Chang, PK, & Azhar, B. (2016). தீபகற்ப மலேசியாவில் சுண்டா ஸ்கோப்ஸ்-ஆந்தையின் குரல் தனித்தன்மை (ஓடஸ் லெம்பிஜி). ஜர்னல் ஆஃப் ராப்டார் ரிசர்ச், 50 (4), 379–390.எஆசு:10.3356/JRR-15-76.1
- உலக ஆந்தை அறக்கட்டளை: சுந்தா ஸ்கோப்ஸ் ஆந்தை