சிவப்பு நிற சிறிய ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு நிற சிறிய ஆந்தை
அருங்காட்சியக மாதிரி, 1901
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுடிரிகிபார்மிசு
குடும்பம்:
இசுடிரிகிடே
பேரினம்:
ஓட்டசு
இனம்:
ஓ. உரூபெசென்சு
இருசொற் பெயரீடு
ஓட்டசு உரூபெசென்சு
கோர்சூபீல்டு, 1821

சிவப்பு நிற சிறிய ஆந்தை (Reddish scops owl)(ஓட்டசு உரூபெசென்சு) என்பது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஆந்தை சிற்றினம் ஆகும்.[3]

விளக்கம்[தொகு]

இந்த ஆந்தையின் காதில் குஞ்சத்துடனும் ஒட்டுமொத்த உடலும் சிவப்பு-பழுப்பு தோற்றத்துடன் கூடியது. மிகச் சிறிய ஆந்தை ஆகும்.

அளவு: இதனுடைய உடலின் நீளம் 15 முதல் 18 செ.மீ. வரையிலும் இறக்கையின் நீளம் 12.7 முதல் 13.7 செ.மீ. வரையும், வால் நீளம் 5.8 முதல் 6.8 செ.மீ. வரையிலும் இருக்கும். சிவப்பு நிற சிறிய ஆந்தையின் எடை 70.5 முதல் 83 கிராம் வரை இருக்கும்.

நடத்தை[தொகு]

இந்த ஆந்தையின் நடத்தைக் குறித்து அதிகம் அறியப்படவில்லை. சிவப்பு நிற சிறிய ஆந்தை இரவாடி வகையினைச் சார்ந்தது. மற்ற சிறிய ஆந்தைகளைக் காட்டிலும் பொதுவாகக் காடுகளில் குறைந்த மட்டத்தில் காணப்படுகிறது.[4]

குரல்[தொகு]

நல்ல இடைவெளியில் உச்சரிக்கப்படும் "ஹீஓ" என்ற வெற்று ஒலி

உணவு[தொகு]

பூச்சிகள், முக்கியமாக வெட்டுக்கிளிகள் மற்றும் கிரிகெட்டுகள். இந்த ஆந்தை நண்டுகளை எடுத்துச் செல்வதாகவும் அறியப்படுகிறது.

இனப்பெருக்கம்[தொகு]

குறைந்த அளவுத் தகவல்களே இதன் இனப்பெருக்கம் குறித்துக் கிடைக்கின்றன. மரத்துளைகள், மற்றும் பழைய பார்பெட் அல்லது மரங்கொத்தி துளைகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. சாவகம் தீவில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் சூலை நடுப்பகுதியில் ஒரு தாழ்வான கூடு காணப்பட்டது.

வாழ்விடம்[தொகு]

சிவப்பு சிறிய ஆந்தையானது தாழ் நிலப் பசுமையான, மலையடிவார மற்றும் சப்மண்டேன் காடுகளிலும், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை காடுகளிலும் காணப்படுகிறது. பெரும்பாலும் தாழ் நிலங்களில் காணப்படும் இந்த ஆந்தைகள் 1350மீ உயரம் வரையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.[5]

பரவல்[தொகு]

தாய்லாந்து தீபகற்பத்தின் தெற்குப் பகுதி, மலாய் தீபகற்பம், சுமாத்திரா, சாவகம் மற்றும் போர்னியோ தீவுகளில் காணப்படுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Otus rufescens". IUCN Red List of Threatened Species 2016: e.T22688554A93200471. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22688554A93200471.en. https://www.iucnredlist.org/species/22688554/93200471. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. "Reddish Scops-Owl - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.
  4. Duncan, James R.. 2003. "Owls of the World: Their Lives, Behavior and Survival". Firefly Books.
  5. Mikkola, Heimo. 2013. "Owls of the World: A Photographic Guide (Second Edition)". Bloomsbury. Otus rufescens at Xeno-canto.
  6. Lewis, Deane. "Reddish Scops Owl (Otus rufescens) - Information, Pictures, Sounds". The Owl Pages (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_நிற_சிறிய_ஆந்தை&oldid=3478804" இலிருந்து மீள்விக்கப்பட்டது