சி. வெ. கணேசன்
சி. வெ. கணேசன் | |
|---|---|
| தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்படுத்துறை அமைச்சர், தமிழ்நாடு அமைச்சரவை | |
| தொகுதி | திட்டக்குடி |
| சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| பதவியில் மே 2021 – முதல் | |
| பதவியில் 16 மே 2016 – மே 2021 | |
| முன்னையவர் | டி. பெரியசாமி |
| பின்னவர் | கே. தமிழழகன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 16 சூன் 1959 கழுதூர், சென்னை மாநிலம் (தற்பொழுது தமிழ்நாடு), இந்தியா |
| அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| துணைவர்(கள்) | க. பவானி (தி. 1984; இற. 2021) |
| பிள்ளைகள் | 1 மகன் 4 மகள்கள் |
| பெற்றோர் | தந்தை : வெங்கடன் தாயார் : சின்னம்மாள் |
| வாழிடம் | 5/172, கழுதூர் கிராமம், தேசிய நெடுஞ்சாலி, திட்டக்குடி வட்டம், கடலூர்- 606304. |
| கல்வி | முதுகலை, இளங்கலை கல்வியியல் |
| முன்னாள் மாணவர் | சென்னைப் பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
சி. வெ. கணேசன் (C. V. Ganesan) என்பவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல்வாதியும், திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரும் ஆவார்.[1][2]
இளமை
[தொகு]1959ஆம் ஆண்டு சூன் 16ஆம் நாள் தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கழுதூர் கிராமத்தில் வெங்கடன் மற்றும் சின்னம்மாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தார்.[3]
கல்வி
[தொகு]வேலூர் முத்துரங்கம் அரசுக் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தினை முடித்த கணேசன், 1984ஆம் ஆண்டு சென்னை பல்கலைகழத்தில் முதுகலைப் படிப்பும், 1986ஆம் ஆண்டு அண்ணமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் படிப்பினை முடித்தார்.[3] திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டப் படிப்பினையும் இவர் முடித்துள்ளார்.[4]
அரசியல் வாழ்க்கை
[தொகு]முதல்முறை சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரான கணேசன் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டம் மங்களூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்
[தொகு]1996ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற கீழவையான மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி உள்ளார்.
மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சர்
[தொகு]2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் பதவியேற்ற மு. க. ஸ்டாலின் அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்படுத்துறை அமைச்சராக உள்ளார்.
குடும்பம்
[தொகு]கணேசன், பவானி என்பவரை வாழ்க்கை துணைவியாக ஏற்றார். இந்த இணையருக்கு கவிதா லட்சுமி, கனிமொழி, கலையரசி, சிந்துஜா, நிவேசு என்ற நான்கு மகள்களும் வெங்கடேசன் என்ற ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி பவானி, 9 திசம்பர் 2021 அன்று காலமானார்.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tittagudi (SC) Election Result: Ganesan CV of DMK Wins by 51.94%, Defeats D. Periyasamy of BJP". India com.
- ↑ "Ganesan C. V". 7 May 2021 – via News 18.
- ↑ 3.0 3.1 "Biographical Sketch of Member of XI Lok Sabha". loksabhaph.nic.in. Retrieved 2022-12-18.
- ↑ "Ganesan, C.V.(DMK):Constituency- TITTAKUDI (SC)(CUDDALORE) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2022-12-18.
- ↑ C.V.Ganesan [cvganesan1] (9 December 2022). "என்னாகப் போகிறதென்று தெரியவில்லை. உன்னைப் பிரிந்த இந்த இதயத்தை எப்படி கடைத்தேற்றுவது என்று புரியவில்லை. ஆறுதல் தேடிய வண்ணம் உன் நினைவுகளால் நனைகிறேன் நீ வர மாட்டாய் என தெரிந்தும் !!! t.co/rdSbaBinE4" [I don't know what I'm going to become. I don't know how to handle this broken heart. Looking for comfort, I am soaked in your memories, knowing that you will not come!!!] (Tweet). Retrieved 21 December 2022.
{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link) - ↑ C.V.Ganesan [cvganesan1] (9 December 2022). "இன்று எனது துணைவியார் தெய்வத்திரு: க.பவானி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் எனது குடும்பத்தினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் அஞ்சலி செலுத்தினேன். t.co/cwfOfJoKU8" [Today I paid tribute to my wife Deivathiru: K. Bhavani on her first death anniversary with my family and club administrators.] (Tweet). Retrieved 21 December 2022.
{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)