சி. பு. வரதப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. பு. வரதப்பா
பிறப்புசிங்கநல்லூர் புட்டசுவாமய்யா வரதராஜ்
1935
கஜனூர், சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு8 பெப்ரவரி 2006(2006-02-08) (அகவை 70–71)
பெங்களூர், இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்வரதப்பா
பணிதிரைப்பட தயாரிப்பாளர், நடிகர்

சிங்கநல்லூர் புட்டசுவாமய்யா வரதராஜ் (Singanalluru Puttaswamayya Varadaraj) எஸ். பி. வரதப்பா என்றும் அழைக்கப்படுகிறார். [a] 1935 - 8 பிப்ரவரி 2006) கன்னடத் திரைப்பட நடிகரும் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். லோகேஷ் நடித்த பூதய்யனா மக அய்யு, உதய்குமார் நடித்த ஹேமாவதி போன்ற படங்களைத் தயாரித்தார்.[1]

கன்னடத் திரையுலகில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த ஸ்ரீ வஜ்ரேஸ்வரி கம்பைன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தனது மைத்துனி பார்வதம்மா ராஜ்குமார்வுடன் இணைந்து வடிவமைத்ததில் இவர் ஒரு முக்கிய பங்கு வகித்தார். அதன் கீழ் சகோதரும் கன்னட நடிகருமான ராஜ்குமார், ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மா ராஜ்குமார் , மற்றும் அவர்களது மகன்கள் சிவ ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் , புனீத் ராச்குமார் ஆகியோர் நடித்த பல படங்களைத் தயாரித்துள்ளார்.[2][3]

சுயசரிதை[தொகு]

இவர் கருநாடகம் - தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள கஜனூரில் - நாடகக் கலைஞரான சிங்கநல்லூர் புட்டசுவாமய்யாவுக்கும், இலட்சுமம்மாவுக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார். கன்னடத் திரையுலகப் பிரமுகரான ராஜ்குமார் இவரது மூத்த சகோதரர், சாரதாம்மா மற்றும் நாகம்மா ஆகியோர் இவரது சகோதரிகள்.[4]

இவர் குப்பி நிறுவனத்தின் (நாடகக் குழு) நடிகராக தனது தந்தை, மூத்த சகோதரர் - எஸ்.பி. முத்துராஜ் - பிரபலமாக ராஜ்குமார் என்று அழைக்கப்படுகிறார்- மற்றும் அவரது தங்கை ஆகியோருடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், மகரந்தா மற்றும் கிருஷ்ணலீலா ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக இரண்டு படங்களில் நடித்தார். வயது வந்தவராக, இவர் 1965 இல் வெளியான சர்வக்னமூர்த்தி, சதிசக்தி மற்றும் 1959 இல் வெளியான தர்ம விஜயா போன்ற கன்னடத் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். அதில் இவரது சகோதரர் ராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் தனது நண்பரான சந்துலால் ஜெயினுடன் இணைந்து பூதய்யனா மக அய்யு மற்றும் ஹேமாவதி படங்களைத் தயாரித்தார்.[1][5][6]

பெத்தர கண்ணப்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜ்குமாரின் குடும்பத்தினர் சென்னையில் குடியேறியபோது அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தார். ஸ்ரீ வஜ்ரேஷ்வரி கம்பைன்ஸ் என்ற தங்களது குடும்பத்திற்குச் சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் ராஜ்குமாருக்கு இவர் மிகவும் நம்பகமான வழிகாட்டியாகவும் நண்பராகவும் இருந்தார். வரதப்பாவின் முயற்சி இல்லாமல், கன்னடத் திரையுலகம் ஒரு சிறந்த நடிகரான ராஜ்குமாரை இழந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.[1][2][6] இவர் ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக இருந்தார் என்றும், ராஜ்குமாரின் படங்களின் வெற்றிக்கு இவரது மைத்துனி பர்வதம்மா ராஜ்குமாருடன் இணைந்து காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.[2]

இறப்பு[தொகு]

இதயக் கோளாறு காரணமாக பிப்ரவரி 8, 2006 அன்று பெங்களூரில் தனது 71வது வயதில் காலமானார்..[1] இவரது பெயரில் ஆண்டுதோறும் நாடக கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் எஸ். பி. வரதராஜு விருதுகள் நிறுவப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. "அப்பா" என்பது இந்தியாவில் உள்ள பெரியவர்களை குறிக்க பயன்படுத்தப்படும் மரியாதைக்குரிய வார்த்தையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "S.P. Varadaraj passes away". தி இந்து. 9 February 2006. Archived from the original on 13 April 2006. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012. S.P. Varadaraj – Varadaraj, popularly known as Varadappa
  2. 2.0 2.1 2.2 "Love is life –". தி இந்து. 24 December 2010. Archived from the original on 25 January 2013. பார்க்கப்பட்ட நாள் 22 March 2012. Parvathamma followed Rajkumar constantly. Her keen observation, soon gave her the confidence to start Vajreshwari Combines and became the producer of all Rajkumar's films. Recalling her brother-in-law Varadappa who was a big support to her, she says, "Trimurthi was my first film. It was a big success.
  3. "Movies Produced – Vajreshwari Combines productions include the following movies". raj-kumar.com. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
  4. "Gajanur prays for their 'hero'". rediff.com. 7 August 2000. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
  5. "Kannada Actor Rajkumar Movies Dr. Rajkumar Films Top Hit Films Best Movie". celebrity.psyphil.com. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012. Dharma Vijaya – Dr Rajkumar, Leelavathi, Narshimaraju, Harini, Varadappa
  6. 6.0 6.1 "The man who changed Kannada cinema". rediff.com. 13 April 2006. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012. Rajkumar joined his father Singanallur Puttaswamayya and brother Varadappa's (Varadanna as he is called) in performing for a drama troupe

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._பு._வரதப்பா&oldid=3854416" இலிருந்து மீள்விக்கப்பட்டது