சி. நாராயண ரெட்டி
சிங்கிரெட்டி நாராயண ரெட்டி (ஆங்கிலம்: Cingireddi Narayana Reddy) (பிறப்பு: 29 ஜூலை 1931 - இறப்பு: 12 ஜூன் 2017), சி. நாராயண ரெட்டி என்றும் நன்கு அறியப்படும் இவர் விருதுகள் பல பெற்ற இந்திய தெலுங்கு கவிஞரும் எழுத்தாளருமாவார். கவிதைகள், உரைநடை நாடகங்கள், பாடல் நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் மற்றும் கசல்கள் உள்ளிட்ட எண்பதுக்கும் மேற்பட்ட இலக்கியப் படைப்புகளை ரெட்டி உருவாக்கியிருந்தார். மேலும், இவர் பேராசிரியராகவும், பாடலாசிரியராகவும், நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
[தொகு]சிங்கிரெட்டி நாராயண ரெட்டி, 1931 ஜூலை 29, அன்று தெலுங்கானா மாநிலத்தின் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள அனுமாசிப்பேட்டையிலுள்ள மருமுலு என்ற கிராமத்தில், (இப்போது இந்தியாவின் தெலுங்கானாவின் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டம்) மல்லா ரெட்டி மற்றும் புச்சாமா ஆகியோருக்கு ஒரு தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒருவிவசாயி, தாயார் வீட்டு மனைவியாவர். இவர் உயர்நிலைக் கல்வியை முடித்த பின்னர், 1949 இல் ஐதராபாத்தின் உசுமானியா பல்கலைக்கழகத்தில் படித்தார். நிசாமின் ஆட்சியில் தெலுங்கில் கல்வி கிடைக்காததால் ரெட்டி பட்டம் பெறும் வரை உருது வழியில் படித்தார்.[1] அவர் தனது பட்டப்படிப்பின் போது தெலுங்கை தனது முதல் பாடமாக எடுத்துக் கொண்டார். ரெட்டி 1954 இல் தனது முதுகலை பட்டத்தைப் பெற்றார். 1955 இல் கல்லூரி விரிவுரையாளரானார். 1962 இல் அவர் "தெலுங்கின் நவீன மரபுகள்" என்பதில் முனைவரானார். 1976 இல் பேராசிரியரானார்.[2] :2
அவர் தனது தொடக்கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியில் உருது வழியில் படித்தார். மச்சிலிப்பட்டினத்தைச் சேர்ந்த குருக்கள் சதாவதானி சேசாத்ரி ரமணா கவ்லுவின் வழிகாட்டுதலின் கீழ் சிர்சில்லாவில் பள்ளிப்படிப்பின் போதே தெலுங்கைத் தனியாகப் படித்தார்.[3] கரீம்நகர் அரசுக் கல்லூரியின் முதல் முதல்வரும் (1959–61) விஜயவாடாவின் புகழ்பெற்ற கவிஞரும், ஞானபீட விருது பெற்றவருமான கவி சாம்ராத் விஸ்வநாத சத்யநாராயணா அவருக்கு வழிகாட்டினார்.[4][5] தனது சொந்த ஊரில் தொடக்கல்வி, இடைநிலைக் கல்வியை முடித்த பின்னர், தனது பட்டப்படிப்பைத் தொடர ஐதராபாத் சென்றார். அவர் நவீன தெலுங்கு இலக்கிய பேராற்றல் வாய்ந்தவர்களை அறிந்து குர்ரம் சாசுவா, சிறீ சிறீ, தேவுலப்பள்ளி கிருஷ்ணா சாத்திரி எழுதிய புத்தகங்களையும் படித்தார் .
நாராயண ரெட்டி சுசீலா என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு நான்கு மகள்கள் இருந்தனர். நாராயண ரெட்டி தனது மனைவியின் பெயரில் ஒரு விருதை நிறுவினார். இதன்மூலம் ஆண்டுதோறும் பெண் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.[6][7]
ஆகஸ்ட் 1997 இல் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு ரெட்டி பரிந்துரைக்கப்பட்டார்.[8]
விருதுகள்
[தொகு]ரெட்டி தனது இலக்கியப் படைப்புகளுக்காக பல விருதுகளை வென்றார். அதில் 1973 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருதும் அடங்கும். மந்தலு மனவாடு என்ற அவரது கவிதைத் தொகுப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டது.[9] 1988 ஆம் ஆண்டில் விஸ்வாம்பரா என்ற படைப்பிற்காக ஞானபீட விருது வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி பெல்லோஷிப் வழங்கப்பட்டது. இது இந்தியாவின் தேசிய கடிதங்களின் அகாதமி வழங்கிய இது மிக உயர்ந்த விருதான சாகித்ய அகாடமி விருதாகும். [2] ரெட்டிக்கு 1978 ஆம் ஆண்டில் ஆந்திர பல்கலைக்கழகத்தால் கலா பிரபூர்ணா என்ற கௌரவம் வழங்கப்பட்டது.[8] 1982 இல் சோவியத் ஒன்றியத்தின் நேரு விருதும், சிறீ ராஜா-லட்சுமி அறக்கட்டளையின் ராஜா-லட்சுமி விருதும் 1988 இல் 2011 இல் பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகம் "விசிட்ட புரசுகாரம்" என்ற விருதினை வழங்கியது. நான்காவது மற்றும் மூன்றாவது மிக உயர்ந்த சிவில் விருதுகளான பத்மஸ்ரீ (1977) மற்றும் பத்ம பூஷண் (1992) ஆகியவற்றை வழங்கி இந்திய அரசு இவரை கௌரவித்தது.[10] சீத்தைய்யா என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற "இதிகோ ராயலசீமா கதா" என்ற பாடலுக்காகவும், பிரேமிஞ்சு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற "கன்டேனே அம்மா அனி என்டே எலா?" என்ற பாடலுக்காகவும் இரண்டு முறை சிறந்த பாடலாசிரியருக்கான நந்தி விருதையும் வென்றார்.
இறப்பு
[தொகு]ரெட்டிக்கு உடல்நலம் மோசமடைந்து, மார்பு வலி ஏற்பட்டு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு [11][12] தனது 85 வயதில் 2017 சூன் 12 அன்று காலமானார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Suresh Krishnamoorthy (12 June 2017). "Jnanpith winner C. Narayana Reddy passes away". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 16 June 2017.
- ↑ 2.0 2.1 "Sahitya Akademi Fellowship: C. Narayana Reddy" (PDF). Sahitya Akademi. 6 July 2015. Archived from the original (PDF) on 6 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 13 June 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ http://www.thehansindia.com/posts/index/Telangana/2017-06-13/Literary-legend-walks-into-history-/306176
- ↑ http://www.newindianexpress.com/states/telangana/2017/jun/13/cinare-a-pioneer-of-free-verse-in-telugu-literature-1616091--2.html
- ↑ https://www.youtube.com/watch?v=AY4-hsQ4U3Q
- ↑ Vishnupriya Bhandaram (12 April 2012). "Poetic parlance". The Hindu. http://www.thehindu.com/books/poetic-parlance/article3306897.ece. பார்த்த நாள்: 13 June 2017.
- ↑ "C Narayana Reddy passes away: A look at his life". The Indian Express. 12 June 2017. http://indianexpress.com/article/india/c-narayana-reddy-dead-passes-away-a-look-at-his-life-4699713/. பார்த்த நாள்: 13 June 2017.
- ↑ 8.0 8.1 "Profile: C. Narayana Reddy". The South Asian Literary Recordings Project. பார்க்கப்பட்ட நாள் 13 June 2017.
- ↑ "Sahitya Akademi Award in Telugu". Sahitya Akademi. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 13 June 2017.
- ↑ "Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India). 21 May 2014. Archived from the original (PDF) on 15 November 2016. பார்க்கப்பட்ட நாள் 22 March 2016.
- ↑ "Doyen of Telugu literature C Narayana Reddy dies in Hyderabad". Hindustan Times (Hyderabad). 12 June 2017. http://www.hindustantimes.com/books/doyen-of-telugu-literature-c-narayana-reddy-dies-in-hyderabad/story-fTGH308c4INGpgRDXcV43K.html. பார்த்த நாள்: 13 June 2017.
- ↑ "Telugu poet and writer C Narayana Reddy, a recipient of the prestigious Jnanpithaward, passes away". Financial Express (Hyderabad). 12 June 2017. http://www.financialexpress.com/india-news/jnanpith-awardee-c-narayan-reddy-passes-away/713423/. பார்த்த நாள்: 13 June 2017.