சி. கேசவ ஆதித்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ்.கேசவ ஆதித்தன்
S.Kesava Adithan
சி. கேசவ ஆதித்தன்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1980 – 26 நவம்பர் 1982
தொகுதி திருச்செந்தூர்
தனிநபர் தகவல்
பிறப்பு (1933-11-08)8 நவம்பர் 1933[சான்று தேவை]
காயாமொழி, தமிழ்நாடு
இறப்பு 26 நவம்பர் 1982(1982-11-26) (அகவை 49)[சான்று தேவை]
அரசியல் கட்சி அதிமுக (முன்னர் திமுக)
வாழ்க்கை துணைவர்(கள்) செந்தாமரை

சி. கேசவ ஆதித்தன் (S. Kesava Adithan)(8 நவம்பர் 1933-26 நவம்பர் 1982) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1980 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

அரசியல்[தொகு]

1980 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கேசவ ஆதித்தன், சின்ன தங்கம் மற்றும் டி. எஸ். சிவந்தி ஆதித்தன் (தபால் அலுவலர்) மகனாக 1933ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் பிறந்தார்.

நாசரேத்தில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் பாளையங்கோட்டையில் உள்ள தூய யோவான் கல்லூரியில் பல்கலைக்கழக முன் பட்டப்படிப்பினை படித்தார். தனது 16 வயதில் திமுகவில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ஆதித்தன், பின்னர் ம. கோ. இராமச்சந்திரனுடன் (எம்ஜிஆர்) அதிமுகவில் சேர்ந்தார்.[சான்று தேவை]

மாவடிப்பண்ணையைச் சேர்ந்த செந்தாமரை தேவியை 1956ஆம் ஆண்டு சனவரி மாதம் தனது 23ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டார்.[சான்று தேவை]

இவர்களுக்குச் சாரதா, பிரேமலதா, பிருந்தா, சுசரிதா என்ற நான்கு மகள்களும், சொக்கலிங்க குமரேச ஆதித்தன், தணிகேச ஆதித்தன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

இவர் நவம்பர் 26, 1982 அன்று ஒரு வாகன விபத்தில் இறந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கேசவ_ஆதித்தன்&oldid=3409843" இருந்து மீள்விக்கப்பட்டது