காயாமொழி
காயாமொழி
Kayamozhi | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 8°30′32″N 78°2′43″E / 8.50889°N 78.04528°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி |
அரசு | |
• வகை | பஞ்சாயத்து |
• நிர்வாகம் | காயாமொழி பஞ்சாயத்து |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 5,497 |
மொழிகள் | |
• அதிகாரபூர்வம் | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் | 628205 |
தொலைபேசிக் குறியீடு | 04639 |
வாகனப் பதிவு | TN69 |
அண்மைய நகரம் | திருச்செந்தூர் |
பாலின விகிதம் | 1000:1154 ♂/♀ |
படிப்பறிவு | 85% |
மக்களவைத் தொகுதி | தூத்துக்குடி முன்னர் திருச்செந்தூர் |
சட்டப்பேரவைத் தொகுதி | திருச்செந்தூர் |
இணையதளம் | kayamozhi |
காயாமொழி (Kayamozhi) கிராமம் இந்தியாவின் தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு மேற்கே 9 கி.மீ.[1][2] தொலைவில் அமைந்துள்ளது.
சொற்பிறப்பியல்
[தொகு]காயாமொழி = காயாத + மொழி, வற்றாத மொழி வளம் & இயற்கை வளங்களை கொண்ட கிராமம் என்று பொருள்படும்.
வரலாறு
[தொகு]தமிழ்நாடு மாகாணத்தின் வடப்பட்டு பகுதியின் தலைநகரமாக காயாமொழி விளங்கியதாக சான்றுகள் தெரிவிக்கின்றன.[3]
குடிமையியல்
[தொகு]மக்கள்தொகை
[தொகு]காயாமொழியின் மொத்த மக்கள் தொகை 5497.இதில் ஆண்கள் 2,552 மற்றும் பெண்கள் 2,945. எழுத்தறிவு 85%
குக்கிராமங்கள்
[தொகு]காயாமொழி கிராமப் பஞ்சாயத்தின் கீழ் வரும் தெருக்கள் பின்வருமாறு:
- ஆறுமுகபுரம்
- ஆதித்தனார் காலனி
- அம்மாள்புரம்
- கந்தசாமிபுரம்
- காயாமொழி
- குமாரசாமிபுரம்
- மத்திமான்விளை
- மேலரசூர்
- பள்ளத்தூர்
- ராமலிங்கபுரம்
- ராமநாதபுரம்
- சுப்பிரமணியபுரம்
- தேரிகுடியிருப்பு
- ஊத்தாங்கரைவிளை
- வள்ளுவர் நகர்
புவியியல்
[தொகு]- பிறப்பிடம்: திருச்செந்தூரில் இருந்து சாலை வழியாக 9 கிமீ தொலைவில் காயாமொழி உள்ளது. மறுபுறம், காயாமொழி உடன்குடியிலிருந்து சாலை வழியாக 10 கி.மீ தொலைவில் உள்ளது. இது கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி போன்ற முக்கிய நகரங்களுடன் சாலைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
- ஒருங்கிணைப்புகள்: 8°30′32″N 78°2′43″E.
- கடல் மட்டத்திலிருந்து உயரம் : 19 மீ (69 அடி)
- எல்லைகள்:
எல்லைகள் | அமைந்துள்ள இடங்கள் |
---|---|
தெற்கு | மாயாண்டி சுவாமி கோவில் & கால்வாய் பாலம் |
வடக்கு | ஆர்.டி.மணிநாடார் திருமண மண்டபம் |
கிழக்கு | கால்வாய்கள் & முப்புடாதியம்மன் கோயில் |
மேற்கு | வணங்காமுடி அய்யனார் கோவில் |
தென்கிழக்கு | காயாமொழி குளம் |
தென்மேற்கு | தேரி மணல் திட்டுகள் |
வடகிழக்கு | ஊத்தாங்கரைவிளை கால்வாய் |
வடமேற்கு | கோவில்கள் |
- நிலவகைப்பாடு:
காயாமொழியில் வயல்வெளிகள் மற்றும் வறண்ட நிலப் பகுதிகள் இருப்பதால், முறையே மருதம் (விவசாய நிலம்) மற்றும் பாலை (வறண்ட நிலம்) திணைகளின் கீழ் வகைப்படுத்தலாம்.
- புவியியல் பண்புக்கூறுகள்:
காரணிகள் | குறிப்புகள் |
---|---|
மண் | பெரும்பாலும் செம்மண், சில இடங்களில் கரிசல் மண் & வண்டல் மண்ணையும் காணலாம். |
நீர் | கால்வாய்கள் கிராமத்தை வரவேற்கிறது. தாமிரபரணி நதியிலிருந்து வரும் நீர் கிராமத்தின் வடக்கே கிராமத்தின் மேற்கிலிருந்து கிழக்காக கடந்து செல்கிறது. இக்கிராமத்தின் தெற்கே அமைந்துள்ள குளத்திற்கு [4] இந்த பிரதானத்திலிருக்கும் துணைக் கால்வாய் உணவளிக்கிறது. |
மழைப்பொழிவு | கிராமத்தின் சராசரி மழைப்பொழிவு 1500 - 1700மிமீ/ஆண்டு வரை மாறுபடும். தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழை அதிக அளவு மழை நீரை விளைவிக்கிறது. |
காற்று | காற்றின் சராசரி வேகம் மணிக்கு 15 - 20கிமீ வரை மாறுபடும். இருப்பினும் ஆடி மாதம் (ஜூலை - ஆகஸ்ட்) தொடங்கும் போது காலநிலை மாற்றத்தின் காரணமாக இது அதிகபட்சத்தை அடையலாம். காற்றில் உள்ள ஈரப்பதம் தோராயமாக 60 - 75℅ இருப்பினும் இது பருவமழை காலங்களில் (தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை) அதிகபட்சத்தை அடையலாம். |
வெப்பநிலை | கிராமத்தின் வெப்பநிலை 26° - 30 °C இடையே உள்ளது |
பொருளாதாரம் & வேலைவாய்ப்பு
[தொகு]காயாமொழியின் பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த கிராமத்தை பூர்வீகமாக கொண்ட மக்கள் "தினத்தந்தி" [5] நாளிதழிலும் வேலை செய்கிறார்கள்.
ஐந்துக்கும் மேற்பட்ட "சுயஉதவி குழுக்கள்" பெரும்பாலும் நடுத்தர வர்க்க பெண்களின் தேவைகளை தீர்க்க உள்ளன.
அரசு வேலைவாய்ப்பு திட்டங்கள் :
"தூய்மையான பாரத இந்தியா[6]" மற்றும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு[7] திட்டம் போன்ற அரசாங்கத் திட்டங்களும் உள்ளன.
தொழிற்சாலைகள் :
"பனை வெல்லம் தயாரிப்பு[8] & தேங்காய் நார் கயிறு திரிக்கும்[9] தொழிற்சாலைகள் இந்த கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக செயல்பட்டு வருகிறது.
குறிப்பிடத்தக்க இடங்கள்
[தொகு]காயாமொழியில் உள்ள பொழுதுபோக்கிற்கான இடங்கள் :
காயாமொழியின் பசுமை நுழைவாயில் (கிழக்கு பகுதி).
காயாமொழி குளம்[10], காயாமொழிக்கு தென்கிழக்கு.
காயாமொழி கால்வாய், காயாமொழிக்கு தென்கிழக்கு.
சிவப்பு மணல் குன்றுகள்[11], காயாமொழிக்கு மேற்கு மற்றும் தேரிகுடியிருப்பு.
தளவாய்புரம் கால்வாய் மற்றும் பாலம், காயாமொழிக்கு கிழக்கு
ஊத்தங்கரைவிளை கால்வாய் மற்றும் பாலம், காயாமொழிக்கு வடகிழக்கு.
காயாமொழி மெயின் பஜார்
காயாமொழி மெயின் பஜார் எனப்படுவது கிராமத்தின் நான்கு வழிச் சாலைகளின் சந்திப்பு ஆகும். கிழக்கே திருச்செந்தூர், மேற்கே தேரிக்குடியிருப்பு, தெற்கே உடன்குடி, வடக்கே நாசரேத் & குரும்பூரையும் இந்த சாலைகள் இணைக்கிறது.
இது காயாமொழியின் பிரதான மற்றும் முக்கிய இடமாகும். முக்கிய மளிகைக் கடைகள், உணவகங்கள், அலைபேசி சார்ந்த கடை, தபால் அலுவலகம், மருந்தகம் மற்றும் பஞ்சாயத்து அலுவலகம் ஆகியவற்றைக் கொண்ட இடமாக விளங்குகிறது.
மறுபுறம், இந்த இடம் பேருந்து நிறுத்தமாகவும் மற்றும் மூன்று சக்கர வாகன (ஆட்டோ)நிறுத்தமாகவும் செயல்படுகிறது.
வசதிகள் & பயன்பாடுகள்
[தொகு]கல்வி
[தொகு]பள்ளிகள் :
1) சி பா ஆதித்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி, காயாமொழி[12][13].
2) கோவிந்தம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, காயாமொழி[14].
3) கல்வி சபா சரசுவதி துவக்கப்பள்ளி, காயாமொழி[15].
4) வி கே ஆர் எஸ் துவக்கப்பள்ளி, காயாமொழி.[16]
5) ஜாரியா துவக்கப்பள்ளி,[17] காயாமொழி.
6) கலைவாணி துவக்கப்பள்ளி, சுப்பிரமணியபுரம், காயாமொழி[18].
மழலையர் அங்கன்வாடி :
1) குமாரசாமிபுரம் அங்கன்வாடி 2) ராமநாதபுரம் அங்கன்வாடி 3)முஸ்லீம் தெரு அங்கன்வாடி ஆகிய மூன்று அங்கன்வாடிகள் அமைந்துள்ளது.
கல்லூரிகள் :
காயாமொழிக்கு அருகே திருச்செந்தூரில் ஆதித்தனார் அறக்கட்டளையின்[19] கீழ் இயங்கும் ஆதித்தனார் அரசு ஆடவர் கலை அறிவியல் கல்லூரி, கோவிந்தம்மாள் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஆதித்தனார் உடற்பயிற்சி கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.
மருத்துவம் & நலவாழ்வு
[தொகு]1) அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காயாமொழி[20][21].
- காயாமொழி மற்றும் அதன் சுற்று வட்டார குக்கிராமம மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்கிறது.
- இங்கே சித்த மருத்துவ பிரிவு, இரத்த பரிசோதனை நிலையம், தொழுநோய் & காசநோய் பிரிவுகள், கண் & காது பரிசோதிக்கும் இடம், சிறு மூலிகைத்தோட்டம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காய்ச்சல் பகுதியையும் கொண்டுள்ளது.
2) அரசு கால்நடை மருத்துவமனையும் [22] காயாமொழியில் அமைந்துள்ளது.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் & நீர் வள வசதிகள்
[தொகு]காயாமொழி குமாரசாமிபுரம் & முஸ்லிம் தெருவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ளன. தூய்மையான குடிநீர் சிறந்த முறையில் சுத்திகரிக்கப்பட்டு குறைந்த செலவில் வழங்கப்படுகிறது.
அரசு நியாயவிலைக் கடைகள்
[தொகு]1) குமாரசாமிபுரம் நியாய விலை கடை
2) வள்ளுவர் நகர்[23] நியாய விலைக்கடை ஆகிய இரண்டும் காயாமொழியின் அரசு நியாய விலை கடைகள் ஆகும்.
விளையாட்டு & திடல்
[தொகு]காயாமொழி சிவப்பு மணல் குன்றுகளின் சிறு பகுதியானது விளையாட்டு திடலாக செயல்படுகிறது. மட்டைப்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகள் பெரும்பாலும் விளையாடப்படுகிறது. மேலும் அதற்கான வசதிகளும் அமையப்பெற்றுள்ளது.
வங்கி & வணிகம்
[தொகு]1) தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி[24], காயாமொழி.
2) வேளாண் கூட்டுறவு வங்கி[23], காயாமொழி.
3) காயாமொழி அலுவல் நிலையம்[25].
4) சுப்பிரமணியபுரம் அலுவல் நிலையம்[26].
ஆகிய வணிகம் சார்ந்த நிறுவனங்கள் காயாமொழியில் அமைந்துள்ளன.
இதுதவிர இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பரமன்குறிச்சியிலும் எஸ் பி ஐ வங்கி, இந்தியன், கனரா & ஐசிஐசிஐ வங்கிகள் திருச்செந்தூரிலும் அமைந்துள்ளது.
இ சேவை மையம்
[தொகு]1) காயாமொழி வேளாண் கூட்டுறவு வங்கி
2) காயாமொழி இ சேவை மையம்[27]
ஆகியவை காயாமொழி ஊராட்சியின் இ சேவை மையங்களாக செயல்படுகிறது.
மின்உற்பத்தி அலுவலகம்
[தொகு]காயாமொழி மின்உற்பத்தி அலுவலகம்[28] சுற்றுவட்டார குக்கிராமங்களின் மின்உற்பத்தி & அதன் கட்டணம் பெறும் தலைமை இடமாகும்.
நூலகம்
[தொகு]காயாமொழியில் இரண்டு நூலகங்கள் உள்ளன. ஒன்று சி பா ஆதித்தனார் பள்ளி அருகிலும் மற்றொன்று டி எம் பி வங்கி(காயாமொழி பஜார்) [29] அருகிலும் அமைந்துள்ளது.
மாணாக்கர் விடுதி
[தொகு]1) அரசு மாணவர் விடுதி[30] 2) அரசு மாணவியர் விடுதி[31] ஆகிய இரண்டு விடுதிகள் பள்ளி மாணாக்கர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
திருமண மண்டபங்கள்
[தொகு]1) பா. இராமச்சந்திர ஆதித்தனார் திருமண மண்டபம், காயாமொழி[32]. 2) சுப்பையா விலாஸ் திருமண மண்டபம், சுப்பிரமணியபுரம். 3) ஆர் டி மணி நாடார் திருமண மண்டபம், கந்தசாமிபுரம்[33]. ஆகிய திருமண மண்டபங்கள் காயாமொழியினில் அமைந்துள்ளன.
பிற வசதிகள்
[தொகு]பொது கழிப்பறை
காயாமொழி குமாரசாமிபுரத்தில் பொதுக் கழிப்பறை வசதியும் உள்ளது. பராமரிப்பு இல்லாததால், தற்போது, ''''செயல்படுத்தும் நிலையில் இல்லை''.
கல்லறை தோட்டம்
அறிக்கைகளின்படி, இந்த கிராமத்தில் மயானங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஒவ்வொரு தெருக்களும் குறைந்தபட்சம் ஒரு இடுகாட்டினை கொண்டு உள்ளது. தண்ணீர் தொட்டி, அடி பம்ப் செட் அப்கள் மற்றும் இறுதி சடங்குகளுக்கான காத்திருப்பு கூடங்கள் போன்ற வசதிகள் கொண்டுள்ளது.
அரசு மதுபானக்கடை காயாமொழியிலும் டாஸ்மாக் வசதி உள்ளது. இது பைபாஸ் ரோடு (திருச்செந்தூர் - நாகர்கோயில்) காயாமொழி வழியாக செல்லும் சாலையின் மூலையில் அமைந்துள்ளது.
போக்குவரத்து, சுற்றுலா தலங்கள்
[தொகு]போக்குவரத்து
[தொகு]அண்மைய நகர போக்குவரத்து வசதிகள் |
|
---|
உள்ளூர் போக்குவரத்து வசதிகள்
- ஆட்டோ, மினி வேன் நிறுத்தம்🛺🚞 - காயாமொழி மெயின் பஜார்.
- பேருந்து நிறுத்தம்🚃
சுற்றுலா தலங்கள்
[தொகு]எண் | சுற்றுலா தலங்கள் | முகவரி |
---|---|---|
1 | அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் | திருச்செந்தூர். (காயாமொழியில் இருந்து 12கிமீ) |
2 | திருச்செந்தூர் கடற்கரை | திருச்செந்தூர். (காயாமொழியில் இருந்து 12கிமீ) |
3 | முத்தாரம்மன் திருக்கோவில் | குலசேகரன்பட்டினம். (காயாமொழியில் இருந்து 15கிமீ) |
4 | குலசேகரன்பட்டினம் கடற்கரை | குலசேகரன்பட்டினம் (காயாமொழியில் இருந்து 15கிமீ) |
5 | கற்குவேல் அய்யனார் கோவில் | தேரிகுடியிருப்பு
(காயாமொழியில் இருந்து 2கிமீ) |
6 | அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் | மேலப்புதுக்குடி (காயாமொழியில் இருந்து 6கிமீ) |
7 | வனத்திருப்பதி பெருமாள் கோவில் | புன்னையாடி / புன்னைநகர், கச்சனாவிளை (காயாமொழியில் இருந்து 9கிமீ) |
8 | மணப்பாடு கடற்கரை & திருச்சபை | மணப்பாடு (காயாமொழியில் இருந்து 18கிமீ) |
9 | காயல்பட்டினம் கடற்கரை | காயல்பட்டினம் (காயாமொழியில் இருந்து 18கிமீ) |
10 | நவ திருப்பதி கோவில்கள் | தூத்துக்குடி & திருநெல்வேலி மாவட்டம். |
11 | நவ கைலாயங்கள் | தூத்துக்குடி & திருநெல்வேலி மாவட்டம் |
- நீர்நிலைகளின் (கடல்,குளம்) இருப்பை குறிக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Panchayat Villages of Tiruchendur Block in Tuticorin District". Archived from the original on 2010-12-09. Retrieved 2021-12-17.
- ↑ "Revenue Villages of Tiruchendur Taluk in Tuticorin". Archived from the original on 2016-03-04. Retrieved 2021-12-17.
- ↑ Tacaratan̲, Ā (2001). "Mān̲āṭu : Mān̲avīra Vaḷanāṭṭuc Camūka Varalār̲u" (in ஆங்கிலம்). Centre for Preservation of Tamil Palm-Leaf Manuscripts. Retrieved 2022-02-17.
- ↑ "KayamozhiKulam , Kayamozhi". wikimapia.org (in ஆங்கிலம்). Retrieved 2022-02-18.
- ↑ https://www.worldcat.org/title/daily-thanthi/oclc/60632502
- ↑ https://sk.sagepub.com/cases/swachh-bharath-clean-india-campaign-tourism-industry
- ↑ "Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)". mnregaweb2.nic.in. Retrieved 2022-02-18.
- ↑ https://onlinelibrary.wiley.com/doi/10.1111/jfpe.12337
- ↑ https://link.springer.com/chapter/10.1007/978-3-030-21055-7_8
- ↑ "kayamozhi new kulam". wikimapia.org (in ஆங்கிலம்). Retrieved 2022-02-18.
- ↑ Vinod, Paulmathi (2019-02-20). "தேரிக்காடு - தமிழகத்தின் பாலைவனம்". Roaming Owls (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-02-18.
- ↑ "S B Aditanar Government higher secondary School". Wikimapia.org. Archived from the original on 2022-02-18. Retrieved 2022-02-18.
- ↑ "GHSS, KAYAMOLI - Kayamozhi, District Thoothukkudi (Tamil Nadu)". schools.org.in (in ஆங்கிலம்). Retrieved 2022-02-18.
- ↑ "Govindammal Girls Higher Secondary School, Kayamozhi". Wikimapia. Archived from the original on 2022-03-16. Retrieved 2022-02-18.
- ↑ "SARASWATHI PS, KAYAMOLI - Kayamozhi, District Thoothukkudi (Tamil Nadu)". schools.org.in (in ஆங்கிலம்). Retrieved 2022-02-18.
- ↑ "VKRSPS, KAYAMOLI - Kayamozhi, District Thoothukkudi (Tamil Nadu)". schools.org.in (in ஆங்கிலம்). Retrieved 2022-02-18.
- ↑ "JARIA PS, KAYAMOLI - Kayamozhi, District Thoothukkudi (Tamil Nadu)". schools.org.in (in ஆங்கிலம்). Retrieved 2022-02-18.
- ↑ "KALAIVANI PS, SUBRAMANIAPURAM - Kayamozhi, District Thoothukkudi (Tamil Nadu)". schools.org.in (in ஆங்கிலம்). Retrieved 2022-02-18.
- ↑ "Aditanar Educational trust". Aditanar educational institutions. March 2022.
{{cite web}}
:|first=
missing|last=
(help) - ↑ "Kayamozhi Community Health Center - Address and Reviews - Opp. Govt. Boys Higher Secondary School, Kayamozhi, Tiruchendur, Tiruchendur, Thoothukkudi, Tamil Nadu - Phone Number - TabletWise". aarogya.us (in ஆங்கிலம்). Retrieved 2022-02-18.
- ↑ "kayamozhi phc, Kayamozhi - Hospital in Tuticorin". www.indiainfo.net. Retrieved 2022-02-18.
- ↑ "Veterinary Dispensary Nalumavadi, Kayamozhi - Animal hospital in Tuticorin". www.indiainfo.net. Retrieved 2022-02-18.
- ↑ 23.0 23.1 "Co Op Society, Ration Shop, Valluvar Nagar, Kayamozhi Pincode | Tiruchendur, Tuticorin, Tamil Nadu 05". pincodes.org (in ஆங்கிலம்). Retrieved 2022-02-18.
- ↑ Lohia, Ganesh B. "TMB Kayamozhi Branch | Tamilnad Mercantile Bank Ltd". www.tmbl.in (in ஆங்கிலம்). Retrieved 2022-02-18.
- ↑ "Kayamozhi Sub Post Office, Tiruchendur 05, Tuticorin, Tamil Nadu". Post Offices (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-02-18.
- ↑ "Subramaniapuram Branch Post Office, Tiruchendur 05, Tuticorin, Tamil Nadu". Post Offices (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-02-18.
- ↑ https://in.worldorgs.com/catalog/kayamozhi/government-office/e-seva-centre
- ↑ "TNEB Kayamozhi in Thoothukudi | Veethi". www.veethi.com. Retrieved 2022-02-18.
- ↑ "Pincode of Kayamozhi Library Bazar Street, Tuticorin, Tamil Nadu, India". pincodeno.com. Retrieved 2022-02-23.
- ↑ "Govt Boys hostel Sivanthi aditanar boys HSS Kayamozhi Tiruchendur TUTICORIN pincode 628205". www.pin-code.net.in. Archived from the original on 2022-02-23. Retrieved 2022-02-23.
- ↑ "Pincode of Kayamozhi Girls Hostel,pry Health Centre Santhi Compound, Kayamozhi, Tuticorin, Tamil Nadu, India". pincodeno.com. Retrieved 2022-02-23.
- ↑ "P.Ramachandra Adithan Marriage Hall - Kaayaamozhi". wikimapia.org (in ஆங்கிலம்). Retrieved 2022-02-18.
- ↑ https://www.justdial.com/Thoothukudi/R-T-Mani-Nader-Marriage-Mall-Kandasamypuram/9999PX461-X461-180302163539-R6D1_BZDET[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "TCR – Tuticorin Airport Current Weather and Airport Delay Conditions". FlightStats.