உள்ளடக்கத்துக்குச் செல்

சி. சே. மார்ட்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சி. எக்ஸ். மார்ட்டின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சி. எக்ஸ். மார்ட்டின்
C. X. Martyn
இலங்கை நாடாளுமன்றம்
யாழ்ப்பாணம்
பதவியில்
1970–1977
முன்னையவர்ஜி. ஜி. பொன்னம்பலம்
பின்னவர்வி. யோகேஸ்வரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1908-03-14)14 மார்ச்சு 1908
சமயம்உரோமன் கத்தோலிக்கர்
இனம்இலங்கைத் தமிழர்

சிரிலஸ் சேவியர் மார்ட்டின் (Cyrillus Xavier Martyn, பிறப்பு: 14 மார்ச் 1908)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

மார்ட்டின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத் தொகுதியில் 1965 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலத்திடம் தோற்றார்.[2] அதன் பின்னர் 1970 தேர்தலில் மீண்டும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 56 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] இலங்கையில் புதிய குடியரசு அரசியலமைப்புக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தமைக்காக மார்ட்டின் 1971 ஆம் ஆண்டில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.[4][5]

மார்ட்டின் 1977 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 900 வாக்குகளை மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தார்.[6] மார்ட்டின் உரோமன் கத்தோலிக்க மதத்தவர் ஆவார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Martyn, Cyrillus Xavier". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. Retrieved 2013-10-05.
  3. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. Retrieved 2013-10-05. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. Rajasingham, K. T. "Chapter 23: Srimavo's constitutional promiscuity". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2002-02-13. Retrieved 2013-10-05.
  5. வில்சன், ஜெயரட்னம் (1994). S. J. V. Chelvanayakam and the Crisis of Sri Lankan Tamil Nationalism. C. Hurst & Co. p. 116. ISBN 1-85065-130-2.
  6. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. Retrieved 2013-10-05.
  7. வில்சன், ஜெயரட்னம் (2010). Electoral Politics in an Emergent State: The Ceylon General Election of May 1970. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 77. ISBN 978-0-521-15311-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சே._மார்ட்டின்&oldid=3553689" இலிருந்து மீள்விக்கப்பட்டது