சி. சே. மார்ட்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சி. எக்ஸ். மார்ட்டின்
C. X. Martyn

நாஉ
யாழ்ப்பாணம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1970–1977
முன்னவர் ஜி. ஜி. பொன்னம்பலம்
பின்வந்தவர் வி. யோகேஸ்வரன்
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 14, 1908(1908-03-14)
சமயம் உரோமன் கத்தோலிக்கர்
இனம் இலங்கைத் தமிழர்

சிரிலஸ் சேவியர் மார்ட்டின் (Cyrillus Xavier Martyn, பிறப்பு: 14 மார்ச் 1908)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

மார்ட்டின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத் தொகுதியில் 1965 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலத்திடம் தோற்றார்.[2] அதன் பின்னர் 1970 தேர்தலில் மீண்டும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 56 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] இலங்கையில் புதிய குடியரசு அரசியலமைப்புக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தமைக்காக மார்ட்டின் 1971 ஆம் ஆண்டில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.[4][5]

மார்ட்டின் 1977 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 900 வாக்குகளை மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தார்.[6] மார்ட்டின் உரோமன் கத்தோலிக்க மதத்தவர் ஆவார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Martyn, Cyrillus Xavier". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  3. "Result of Parliamentary General Election 1970". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  4. Rajasingham, K. T.. "Chapter 23: Srimavo's constitutional promiscuity". Sri Lanka: The Untold Story. http://www.atimes.com/ind-pak/DA19Df06.html. 
  5. வில்சன், ஜெயரட்னம் (1994). S. J. V. Chelvanayakam and the Crisis of Sri Lankan Tamil Nationalism. C. Hurst & Co.. பக். 116. ISBN 1-85065-130-2. http://books.google.co.uk/books?id=_2jvhndxPzQC. 
  6. "Result of Parliamentary General Election 1977". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  7. வில்சன், ஜெயரட்னம் (2010). Electoral Politics in an Emergent State: The Ceylon General Election of May 1970. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 77. ISBN 978-0-521-15311-9. http://books.google.co.uk/books?id=Hj22Puk37IUC. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சே._மார்ட்டின்&oldid=2238642" இருந்து மீள்விக்கப்பட்டது