இலங்கையில் உரோமன் கத்தோலிக்கம்
இலங்கையிலுள்ள உரோமன் கத்தோலிக்கம் உலகளவிலுள்ள உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஓர் பகுதியாகும். இது உரோமையில் உள்ள திருத்தந்தையின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுகின்றது. இலங்கை கொழும்பு மாகாணத்தின் கீழ், ஒரு உயர் மறைமாவட்டத்துடன் 11 மறைமாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. 2012 சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இலங்கையில் 1,237,038 கத்தோலிக்கர்கள் உள்ளனர்.[1] இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 6.1 சதவீதத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
1995 இல் கொழும்பில் நடைபெற்ற ஓர் விழாவில், திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இலங்கையில் ஆரம்பகால நற்செய்தி அறிவிப்பாளரும், இலங்கையின் திருத்தூதர் எனப்படும் அருட்தந்தை யோசப் வாசுக்கு அருளாளர் பட்டம் அளித்தார்.
இவற்றையும் பார்க்க[தொகு]
குறிப்புக்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2019-01-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-02-14 அன்று பார்க்கப்பட்டது.
உசாத்துணை[தொகு]
வெளியிணைப்புக்கள்[தொகு]
- The Catholic Church in Sri Lanka by Giga-Catholic Information
- Profile of the Catholic church in Sri Lanka
"Ceylon". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.