சிவகங்கை சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவகங்கை சமஸ்தானம் என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் சமஸ்தானம் த்தில் இருந்து பிரிக்கப்பட்ட ஒரு சமஸ்தானம் ஆகும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்த மன்னர் முத்து வடுகநாதர் தேவர் இராணி வேலு நாச்சியார் சிவகங்கை சமஸ்தானத்தை தலைநராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் அவர்கள் வாழ்ந்த அரண்மனை இன்றுமுள்ளது.

Sivagangai Palace with Velunachiyar Statue
Indian First women freedom fighter Queen Velunachiyar

வரலாறு[தொகு]

17 ஆம் நூற்றாண்டுகளில் ராமநாதபுர சமஸ்தானம் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்தது. இன்றைய சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை , தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது தான் அன்றைய ராமநாதபுர சமஸ்தனமாகும்.

1674 முதல் 1710 வரை ராமநாதபுர சமஸ்தானத்தை ஆட்சி செய்து வந்தவர் மன்னர் இரகுநாத கிழவன் சேதுபதி அவர் மறைவுக்கு பின் மன்னர் முதலாம் விஜயரகுநாத சேதுபதி மன்னரானார். சிவகங்கையிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள நாலுகோட்டை என்ற சிற்றுரை தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்த அரசுநிலையிட்ட விஜயரகுநாத சசிவர்ணத் தேவர் வீரத்தை அறிந்து தனது மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை பெரியஉடையார்தேவர் மகன் சசிவர்ணத்தேவருக்கு மணமுடித்து சுமார் 1000 படை வீரர்களையும், இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான பிரான்மலை, சிங்கம்புணரி, திருப்பத்தூர், திருமயம், காளையார்கோவில், தொண்டி, திருப்புவனம் போன்ற பகுதிகளை சீதனமாக அளித்து வரி வசூலிக்கும் உரிமையை அளித்தார்.

முதலாம் விஜயரகுநாத சேதுபதிக்கு பின் சுந்தரேசுவர ரகுநாத சேதுபதி மன்னரானார். அவரை இரகுநாத கிழவன் சேதுபதி மகன் பவானி சங்கர சேதுபதி சிறைபடுத்தி மன்னராக தனக்குத் தானே முடிசூடிக் கொண்டார். பவானி சங்கரன் மன்னரான பின் சிவகங்கை மன்னர் சசிவர்ணத் தேவர் மீது படையெடுத்து சிவகங்கையை தன் ஆளுமைக்கு உட்படுத்தினார். பின்னர் சுந்தரேசுவர சேதுபதி தம்பி கட்டயத்தேவனை நாட்டை விட்டு துரத்தினார்.

ஒரு நாள் சசிவர்ணத்தேவர் சிவகங்கைக் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கு தவம் செய்து கொண்டிருந்த சாத்தாப்பையா என்ற முனிவரை சந்தித்தார். அந்த முனிவர் சசிவர்ணத்தேவரை பார்த்த உடனே நடந்தது அனைத்தையும் தெரிவித்தார். பின் சில மந்திரங்களை அவரிடம் சொல்லிவிட்டு தஞ்சை மன்னர் துளஜாஜி பற்றியும் அவர் வளர்க்கும் புலியை பற்றித் தெரிவித்து அந்த புலியை கொன்று உன் வீரத்தை காண்பித்து அந்த மன்னரிடம் உதவி கேள் என்று சொன்னார். சசிவர்ணத்தேவர் அங்கு மாறுவேடத்தில் சென்று அந்த புலியை கொன்று தன் வீரத்தை நிருபணம் செய்தார். இவருக்கு முன்னமே அங்கு அடைக்கலம் புகுந்த கட்டயத்தேவர் இவரின் வீரத்தை பார்த்து அவரை அடையாளம் கண்டு கொண்டார். பின்னர் இருவரின் நிலைமையை புரிந்து கொண்ட தஞ்சை மன்னர் தன் படைகளை அளித்து பவானி சங்கரன் மீது போர் தொடுத்து 1730 இல் உறையூர் போரில் பவனிசங்கரனை வீழ்த்தி ராமநாதபுரத்தை மீட்டு கட்டயத்தேவர் மன்னரானார்.

மன்னர்கள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகங்கை_சமஸ்தானம்&oldid=3148706" இருந்து மீள்விக்கப்பட்டது