சிறு பக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறு பக்கி
Indian nightjar, Caprimulgus asiaticus
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: கேப்ரிமுல்கிபார்மஸ்
குடும்பம்: பக்கி
பேரினம்: கேப்ரிமுல்கசு
இனம்: C. asiaticus
இருசொற் பெயரீடு
Caprimulgus asiaticus
Latham, 1790

சாவுக் குருவி, இந்திய சிறுபக்கி அல்லது சிறு பக்கி (Common Indian Nightjar)(கேப்ரிமுல்கசு ஆசியடிகசு) என்பது சிறுபக்கி சிற்றினம் ஆகும், இது தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் திறந்த நிலங்களில் வசித்து இனப்பெருக்கம் செய்யும் பறவை ஆகும். பெரும்பாலான இரவு பக்கிகளைப் போலவே இது வைகறை மற்றும் அந்தி வேளையில் செயல்பாடு மிக்கதாக காணப்படும். இவற்றை இவற்றின் ஓசைகளிலிருந்து கண்டறியப்படுகிறது.

விளக்கம்[தொகு]

சிறு பக்கி மைனாவின் பருமன் இருக்கும் இப்பறவை 24 செ.மீ. நீளத்தில் மற்ற பக்கிகளைவிட உருவில் சிறியதாக இருக்கும். இது கருப்புக் கோடுகளும் புள்ளிகளும் கொண்ட பழுப்பு நிற உடலைக் கொண்டது. வாலின் ஓர இறக்கைகளின் முனைகள் வெண்புள்ளிகளைக் கொண்டதாக இருக்கும். இதன் இறகுகள் ஆந்தையின் நிறத்தை ஒத்து இருக்கும். தரையில் இக்குருவி படுத்துவிட்டால் தரையின் நிறத்துடன் ஒன்றிவிடும். இதன் கால்கள் குட்டையாகவும், வலுவற்றதாக இருந்தாலும், இதன் வாய் அகலமாக அமைந்திருக்கும். இதனால் பூச்சிகளை வாயால் பிடிக்க நல்ல வசதி. இதன் முக்கிய உணவு பூச்சிகள் ஆகும்.

காணப்படும் பகுதிகள்[தொகு]

தமிழகம் எங்கும் ஆங்காங்கே மலை அடிவாரம் சார்ந்த இலையுதிர் காடுகள், புதர்காடுகள் ஆகியவற்றில் பள்ளமான நீரோடைகளை அடுத்துக் காணலாம். [2]

உணவு[தொகு]

பகல் முழுதும் நிழலில் பதுங்கியிருந்து இரவில் வெளிப்பட்டு பறக்கும் பூச்சிகளைப் பிடிக்கும். பறக்கும் தோற்றம் வௌவால் பறப்பதை ஒத்தது. சாலை ஓர மைல் கற்கள், வேலிக்கம்பிகள் ஆகியவற்றின் மீத அமா;ந்து ட்சக் ட்சக் எனக் கத்தும். புழுதியில் புரளும் விருப்பம் கொண்டது. [3]

இனப்பெருக்கம்[தொகு]

பிப்ரவரி முதல் செப்டம்பர் வரையான பருவத்தில் புதர்க்காடுகளில் தரையில் 2 முட்டைகள் இடும். நகர்ப்புறங்களில் புதர்கள் வளர்ந்திருக்கும் தோட்டங்களைக் கொண்ட வீடுகளிலும் முட்டையிட்டிருக்கக் காணலாம்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Caprimulgus asiaticus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Lamba, BS (1967). "Nestling of Common Indian Nightjar (Caprimulgus asiaticus Latham)". J. Bombay Nat. Hist. Soc. 64 (1): 110–111. 
  3. Saxena, R. (1992). "Mortality rate in Common Indian Nightjar in road accidents". Newsletter for Birdwatchers 32 (9–10): 17. https://archive.org/stream/NLBW32_910#page/n18/mode/1up. 
  4. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:81

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறு_பக்கி&oldid=3784861" இலிருந்து மீள்விக்கப்பட்டது