உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுநீர்க் கழிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுநீர் கழிக்கும் சிறுவனைச் சித்தரிக்கிறது.

சிறுநீர்க் கழிப்பு (Urination) என்பது சிறுநீர்ப்பை யிலிருந்து சிறுநீர் வடிகுழாய் மூலம் சிறுநீர் வெளியேறுவதைக் குறிக்கும். இது சிறுநீர்த்தொகுதியின் கழிவு வெளியேற்ற முறை ஆகும். இது மருத்துவ முறையில் சிறுநீர்கழிப்பு, வெளியேற்றம், அல்லது சில நேரங்களில் அரிதாகக் கழிப்பு எனப்படுகிறது, மேலும் பேச்சு வழக்கில் இது ஒன்றுக்குப் போதல், பெய்தல், மூத்திரம் கழித்தல் எனப் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது.

ஆரோக்கியமான மனிதர்கள் மற்றும் பல விலங்குகளுக்கு சிறுநீர்க் கழித்தல் என்பது தன்னார்வக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மழலைகள் சில வயது முதிர்ந்தோர், நரம்பியல் ரீதியாகப் பாதிப்பு உள்ளவர்கள் ஆகியோருக்கு சிறுநீர்க்கழித்தல் என்பது ஒரு அனிச்சைச் செயலாக நடைபெறும். வயது முதிர்ந்த மனிதர்கள் நாளொன்றுக்கு ஏழு தடவை சிறுநீர் கழிப்பது வழக்கமானதாகும்.[1]

சில விலங்குகளில், கூடுதலாகக் கழிவுப்பொருட்களை வெளியேற்றுவது அல்லது சிறுநீர் கழித்தல் என்பது அதன் எல்லைகளைத் தீர்மானிப்பதாக இருக்கலாம். அல்லது கீழ்ப்படிதலை வெளிப்படுத்தலாம். அல்லது தனது இணைக்காகவும் இருக்கலாம். உடலியல் ரீதியாக, சிறுநீர்க் கழித்தல் மைய நரம்பு மண்டலம், தன்னியக்க நரம்பு மண்டலம், உடற்காப்பு நரம்பு மண்டலம் ஆகியவற்றினிடையே உள்ள ஒருங்கிணைப்பால் நிகழ்கிறது. பான்டின் சிறுநீர் மையம், பெரிக்யூக்யூக்டல் சாம்பல் மற்றும் பெருமூளைப் புறணி ஆகியவை உள்ளிட்ட மூளை மையங்கள் சிறுநீர்க்கழித்தலைக் கட்டுப்படுத்துகின்றன. நஞ்சுக்கொடிசார் பாலூட்டிகளில் சிறுநீரானது ஆண்குறி அல்லது யோனியில் உள்ள திறப்பு மூலம் வெளியேற்றப்படுகிறது.[2][3] :38,364

சிறுநீர்ப்பை உட்புறத் தோற்றம்

சிறுநீர் கழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் உறுப்புகள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்வழி ஆகும். டெட்ரூசர் என அறியப்படுகிற மென்மையான சிறுநீர்ப்பை தசையானது லும்பார் தண்டுவட நரம்பிழைகளிலிருந்து வரும் சிம்பதெடிக் நரம்புமண்டல இழைகள் மற்றும் திருவெலும்பு முள்ளந்தண்டிலிருந்து வரும் பாரா சிம்பதெடிக் இழைகள் ஆகியற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது]].[4] இடுப்பெலும்பு நரம்புகளில் உள்ள நரம்பிழைகள் வழியே சிறுநீர்ப்பையில் சிறுநீர் உட்செல்கிறது. சிறுநீர்ப்பைக்குச் செல்லும் பாராசிம்பதடிக் நரம்பிழைகள் இந்த நரம்பின் வழியேதான் பயணிக்கிறது. இவையே சிறுநீர் வெளியேறக் காரணமான தூண்டுதலை உருவாக்குகின்றன. ஆண் அல்லது பெண்ணின் சிறுநீர்வழியானது தண்டுவடத்திலிருந்து புறப்படும் சோமாட்டிக் நரம்புகளால் சூழப்பட்டதாகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Diagnosis and Treatment of Overactive Bladder (Non-Neurogenic) in Adults: AUA/SUFU Guideline" (PDF). 2014. Archived from the original (PDF) on 26 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 1 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Marvalee H. Wake (15 September 1992). Hyman's Comparative Vertebrate Anatomy. University of Chicago Press. p. 583. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-87013-7. பார்க்கப்பட்ட நாள் 6 May 2013.
  3. Roughgarden. Evolution's Rainbow: Diversity, Gender, and Sexuality in Nature and People. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-24073-5. பார்க்கப்பட்ட நாள் 17 October 2013.
  4. Wennemer, D.O., Heidi K. (7 July 2008). "Urinary Incontinence – Part 2". United States Department of Veterans Affairs. Archived from the original on 25 September 2008. பார்க்கப்பட்ட நாள் 24 March 2013.
  5. Serotoninergic, noradrenergic, and peptidergic innervation of Onuf's nucleus of normal and transected spinal cords of baboons (Papio papio). (subscription required)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுநீர்க்_கழிப்பு&oldid=3554493" இலிருந்து மீள்விக்கப்பட்டது