சிறுநீர் பெய்யும் சிறுவன்

ஆள்கூறுகள்: 50°50′42″N 4°21′00″E / 50.84499°N 4.34998°E / 50.84499; 4.34998
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

50°50′42″N 4°21′00″E / 50.84499°N 4.34998°E / 50.84499; 4.34998

மேனக்கன் பிசு
Bruxelles Manneken Pis.jpg
கலைஞர்Jerome Duquesnoy
ஆண்டு1388: original version
1619: current version
வகைவெண்கலம்
உயரம்61 cm
அமைவிடம்பிரசல்சு


சிறுநீர் பெய்யும் சிறுவன் என்பது பெல்சிய நாட்டின் பிரசல்சு நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலை. ஆடையில்லாத நிலையில் சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு நீரூற்றினைக் கொண்ட சிறிய வெண்கலச் சிலை இது.

வரலாறு[தொகு]

பின் வரும் கதை இச்சிலைக்கான காரணமாகக் கூறப்படுகிறது. இதைத் தவிர வேறு சில கதைகளும் உள்ளன. ஒரு வசதிமிக்க வணிகர் பிரசல்சு நகருக்கு தனது குடும்பத்துடன் வந்தார். அப்போது கடைத்தெருவில் அவரது இளைய மகன் காணாமல் போய்விட்டான். அச்செல்வர், தனது மகன் கிடைத்தால் அவன் கிடைக்கும் போது என்ன செய்து கொண்டிருந்தானோ அதைப்போலவே ஒரு சிலை வைப்பதாக வேண்டிக்கொண்டாராம். அவர் தனது மகனைக் கண்ட போது அவன் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்ததாகவும் அதனாலேயே அச்சிலையை அமைத்ததாகவும் கூறப்படுகிறது.