சிறீதர் ரெட்டி
மருத்துவர் சிறீதர் ரெட்டி Dr Sridhar Reddy | |
---|---|
பிறப்பு | 21 திசம்பர் 1967 ஐதராபாத்து (இந்தியா), இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | அரசு பல்மருத்துவக் கல்லூரி, ஐதராபாத்து (இந்தியா) |
பணி | மருத்துவர் சிறீதர் பன்னாட்டு பல் மருத்துவமனைகளின் தலைவர் ஐதராபாத்து |
அறியப்படுவது | பல்மருத்துவர், சமூகச் செயற்பாட்டாளர். |
மருத்துவர் சிறீதர் ரெட்டி (Dr. Sridhar Reddy) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பல் மருத்துவர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். சிறீ கிருட்டிண சைதன்ய வித்யாவிகார் தெருவோரக் குழந்தைகள் அறக்கட்டளையின் [1] தலைவராகவும் உள்ளார், [2] இது ஓர் அரசு சாரா அமைப்பாகும். இவர் தனது குழுவுடன் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் செயல்பாடுகளில் பணியாற்றுகிறார். [3] [4]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]சிறீதர் ரெட்டி 1967 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 21 ஆம் தேதி ஐதராபாத்தில் வேமன ரெட்டி மற்றும் இலட்சுமி ராச்சியம் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ஐதராபாத்தில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பல்மருத்துவம் பட்டம் பெற்றார். 1992 ஆம் ஆண்டில் தாவணகெரேவில் உள்ள பாபுச்சி பல் மருத்துவக் கல்லூரியில் பல் அறுவை சிகிச்சையில் முதுநிலை படிப்பை முடித்தார் [5] தும்கூரில் உள்ள சித்தார்த்தா பல் மருத்துவக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார் [6]
தொழில்
[தொகு]சிறீதர் ரெட்டி ஒரு பல் மருத்துவராக முதலில், முகம், தாடை அல்லது வாயிலுள்ள நோய்களுக்கு மருத்துவம் செய்யும் சிறப்பு பல்மருத்துவரான அறுவைச் சிகிச்சை நிபுணர் சி.சனசேகரனிடம் ஒரு வருடம் சம்பளம் இல்லாமல் கவுரவ அடிப்படையில் பணியாற்றினார். பின்னர் 1995 ஆம் ஆண்டில் தனது சொந்த மருத்துவமனையை "சிறீதர் சிறப்பு பல் மருத்துவமனையாகத் தொடங்கினார். [7] 2006 ஆம் ஆண்டில், தனது பல்சிறப்பு பல் மருத்துவமனையான " மருத்துவர் சிறீதர் பன்னாட்டு பல் மருத்துவமனை & ஆராய்ச்சி மையத்தை" அப்போதைய முதல்வர் ஒய்.எசு. இராசசேகர ரெட்டி மூலம் திறப்பு விழா செய்து தொடங்கினார்.[8]
கிருட்டிணா மாவட்டத்தின் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். [9]
சமூக கொள்கை
[தொகு]- சிறீதர் ரெட்டியாக இவர் அரசுப் பள்ளிகள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் தெருவோரக் குழந்தைகளுக்கான இலவச பல் மருத்துவ முகாம்களை நடத்தும் நடமாடும் பல் மருத்துவ வசதியை நடத்தி வருகிறார். [10]
- இவரது குழந்தைகள் இல்லம் மூன்று வளாகங்களில் நடத்தப்படுகிறது. [11] விசயவாடாவில் இரயில்வே குழந்தைகள் திட்டத்தையும் இவ்வமைப்பு வழங்குகிறது. மேலும் இங்கு இரயில் நிலையத்திலிருந்து அழைத்து வரப்படும் குழந்தைகளுக்கு ஆலோசனை, கல்வி மற்றும் தொழில் திறன்கள் வழங்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. [12]
தொழில்முறை சாதனைகள்
[தொகு]- இந்தியாவில் கதிரியக்கவிசியோகிராபி, உள்முக புகைப்படக்கருவி, பல்நோக்கு லேசர் சிகிச்சைகள் மற்றும் புளூ கேம் தொழில்நுட்பம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். [13]
- ஈநாடு சுகிபவ திட்டத்தின் கீழ் உதடு பிளவு உள்ள குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்தார். [14]
- இந்தியாவில் உள்ள முகம் தாடை மற்றும் வாய்வழி அறுவை சிகிச்சை இதழால் இவர் அங்கீகரிக்கப்பட்டார்.[15]
சமூக சேவைகள்
[தொகு]2009 ஆம் ஆண்டில் கிருட்டிணா நதி வெள்ளத்தின் போது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினார். [16] இவரது குழுவினர் ஊத் ஊத் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் பொருட்களை வழங்கினர் மற்றும் கிருட்டிணா நதியில் எட்லங்கா என்ற தீவு கிராமத்திற்கு தரைப்பாலத்தை அமைத்தனர்.
கனடிய செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன், கிராமங்களில் பேரிடர் அபாயத்தைக் குறைக்கும் பயிற்சியை நடத்தினார். [17] [18] மும்பை தீவிரவாத தாக்குதலில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த திரங்கா ஒற்றுமை இரத்த தான முகாமை நடத்தினார். [19]
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]- இந்திய குடியரசுத் தலைவர் சிறீ பிரணாப் முகர்ச்சியிடமிருந்து தங்கப் பதக்கம், 2016. [20]
- மத்திய சுகாதார அமைச்சர், சிறீ சகத் பிரகாசு நட்டா 2014 ஆம் ஆண்டில் தேசிய அளவிலான தகுதிச் சான்றிதழ் [21]
- சர்வதேச பல் மருத்துவ இதழ் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டின் சிறந்த பல் மருத்துவர் விருது. [22] [23]
- ஆந்திர மாநில ஆளுநரிடமிருந்து ரெட் கிராசு எக்சலன்சி விருது. [24]
- இயற்கைப் பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்குச் செய்த சிறந்த சேவை விருது. [25]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New chairman for SKCV Trust". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2015-06-21.
- ↑ "Executive summary of the multi stakeholder document" (PDF). Railway Children.
- ↑ "Red Cross gesture to rehabilitated children - ANDHRA PRADESH". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2009-11-08.
- ↑ "DISASTERS UPDATE" (PDF). National Institute of Disaster Management. பார்க்கப்பட்ட நாள் 2009-11-08.
- ↑ "Jan 2014 Edition by Prarambh". Empressario.
- ↑ "Jan 2014 Edition by Prarambh". Empressario.
- ↑ "Empressario, Jan 2014 Edition". Empressario.
- ↑ "YSR inaugurates dental hospital". The Hindu.
- ↑ "Certificates of Merit" (PDF). Indian Red Cross.
- ↑ "Importance of dental health stressed". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2010-07-02.
- ↑ "CRY- Giving the needy Childen their just future". eknazar.
- ↑ "NGO's told to work to end child labour". The Hindu.
- ↑ "Digital dentistry is the future". The Hindu.
- ↑ "Free surgery for children with cleft lip". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2015-09-16.
- ↑ "Scientific Abstracts of 40th Annual Conference of Association of Oral and Maxillofacial Surgeons of India, 19th to 21st November 2015" (PDF). Journal of Maxillofacial and Oral Surgery.
- ↑ "REPORT OF THE GENERAL SECRETARY" (PDF). Indian Red Cross.
- ↑ "Encouraging Youth To Impart Service To Society". The Hans India. பார்க்கப்பட்ட நாள் 2014-12-08.
- ↑ "Right to Information Act, 2005" (PDF). Indian Red Cross.
- ↑ "Students campaign for Tiranga blood donation camp". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2009-01-31.
- ↑ "President's gold medal for dentist". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2016-08-29.
- ↑ "Annual General Meeting of Indian Red Cross Society India 2014". Indian Red Cross.
- ↑ "Winners of 2015". FAMDENT.
- ↑ "Winners of 2016". FAMDENT.
- ↑ "Dr.A.Sridhar Reddy receiving gold medal from Governor of A.P-Red Cross Vijayawada". YouTube.
- ↑ "Drastic drop in number of blood donors in Krishna". The Hindu.