இயற்கைப் பேரழிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓர் கயறு சுழல் காற்று அதன் முடிவின் அறுகில், டிளக்கம்சா, ஓக்லகோமா.
கலிபோர்னியாவில் காட்டுத்தீ.

இயற்கைப் பேரழிவு (ஆங்கிலம்Natural disaster) அல்லது பெருங்கேடு என்பது இயற்கையாக நிகழும் இடையூறுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பதாகும். (எடுத்துக் காட்டாக, வெள்ளப் பெருக்கு, எரிமலை வெடிப்பு, நில நடுக்கம், மண்சரிவு போன்றவை), இந்தப் பேரழிவால் மிகையான அளவில் பொருட்சேதம், உயிர்ச்சேதம், ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் விவரிக்க இயலாத அளவிற்கு சேதமடைகிறது. இதனால் ஏற்படும் பெரும் நட்டத்தை தாங்கிக் கொள்வது சுலபமல்ல, அதன் சுவடுகள் வாழ்நாள் முழுதும் பாதிப்படைந்தவர்களை துன்பத்திலும், துயரத்திலும் ஆழ்த்தினாலும், ஒரு வகையில் இந்தக் கட்ட நட்டங்களைத் தாங்கி மீள்வதற்கான செயல்பாடுகளை அந்நாட்டு மக்களும் சமூகமும் எடுக்கும் விரைவான நடவடிக்கைகளை மிகவும் சார்ந்தே, சுற்றுப்புற சூழ் நிலைகளை பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்கான மிகச் சிறந்த, தெளிவான வழியாகும். அது மட்டுமன்றி, பேரழிவில் இருந்து மீண்டும் எழுவதற்கும், அதைத் துணிந்து போராடுவதற்கும், மக்கள் தன்னம்பிக்கையுடன் அதைப்புச்சத்தியுடன் துணிந்து செயல்படுவது மிகவும் முக்கியமாகும். மக்களின் ஆதரவு, அவர்கள் திறமையுடனும் விரைவாகவும் எடுக்கும் ஆக்கபூர்வமான செயல்பாடுகள், பதட்டப்படாமல் ஒற்றுமையுடன் செயல்படுதல், நேரம் காலம் பாராமல் அனைவரும் தமது பங்கை அளித்து சிரமங்களைப் பாராமல் செயல்படுவதால் நிலைமையை ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள சாத்தியமாகும், மேலும் நட்டங்களையும், பாதிப்புகளையும், ஓரளவிற்கு குறைக்கவும் வழி செய்யலாம்.[1] நாம் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான கூற்று இதுவேயாகும்: "காற்றானது சீற்றமடைந்து ஆல மரத்தையே வேரோடு சாய்ப்பது போலவே, அளவு கடந்த இடர்பாடுகள் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக நிகழும் பொழுது, அதுவே பேரழிவாக ஊறுபட்டு பேரழிவுகளுக்கு வித்திடுகிறது."[2] இயற்கையாக எழும் இடர்பாடுகள் சில பாதிப்படையக் கூடிய இடங்களில் மிகையாக நிகழும் போது மட்டுமே பேரழிவிற்கு வழி வகுப்பதாகக் காணப்படுகிறது, இதற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடுவது என்னவென்றால், மக்கள் வசிக்காத இடங்களில் கடுமையான நில நடுக்கம் ஏற்படுவதில்லை. இவ்விடத்தில் இயற்கை என்ற சொல்லே பிற்பாடு விவாதத்திற்குரியதாக உள்ளது, ஏன் என்றால் அழிவுச் சம்பவங்கள், இடையூறுகள் அல்லது இடர்ப்பாடுகள் அனைத்துமே மனிதர்கள் சம்பந்தப் பட்டு இருந்தால் மட்டுமே அர்த்தமுடையதாயிருக்கும், என்ற விவாதமே.[3] சொல்லப் போனால், மக்கள் வசிக்காத இடங்களில் நடைபெறும் சம்பவங்களைக் குறித்து மனிதர்கள் தெரிந்து கொள்ளாமலும், அக்கறை காட்டாமலும் இருக்கலாம்.

இயற்கை இடையூறுகள்[தொகு]

ஓர் இயற்கை இடையூறு என்பது, அதைச் சார்ந்த மக்களையும், சுற்றுச் சூழலையும் எதிர்மறை விளைவுகளுடன் பாதிக்கும் தன்மையுடைய அபாயங்களை அல்லது அச்சுறுத்தல்களைக் குறிக்கும் ஒரு நிகழ்வாகும். பல இயற்கையான இடையூறுகள் ஒன்றுடன் ஒன்று என தொடர்பு கொண்டவையாகும், உதாரணமாக, நில நடுக்கம் காரணமாக சுனாமி உருவாகலாம், வறட்சியின் விளைவாக நேரடியாக பஞ்சம்|பஞ்சமும் அதனுடனேயே சேர்ந்து கொள்ளை நோய்|கொள்ளை நோயும் தொற்றலாம். 1906 ஆம் ஆண்டில் ஸான் பிரான்ஸிஸ்கோவில் நிகழ்ந்த நில நடுக்கம் ஓர் பேரழிவாகும், ஆனால் பொதுவாக நடைபெறும் நில நடுக்கங்கள் இடையூறாக அமைவதே பேரழிவிற்கும் இடர்பாட்டிற்கும் இடையே நிலவும் பாகுபாட்டை விளக்கும் ஒரு வலுவான எடுத்துக்காட்டாகும். இடையூறுகள் பிற்பாடு வரப்போகும் எதிர்கால நிகழ்ச்சிகளோடு தொடர்பு கொண்டிருக்கும், பேரழிவுகள் கடந்த காலத்துச் சம்பவங்கள் அல்லது நடப்புச் சம்பவங்களோடு தொடர்பு கொண்டிருக்கும்.

இயற்கைப் பேரழிவுகள்[தொகு]

நில அசைவுப் பேரழிவுகள்[தொகு]

பனிச்சரிவு[தொகு]

யூட்டா மாநிலத்து கிழக்கு டிம்பநோகோஎஸ் மலை பனிச்சரிவு, அஸ்பென் க்ரோவ் சுவடுகள்.

குறிப்பிடத்தகுந்த பனிப்பாறை சரிவுகள் பின்வருவன வாகும்.

நில நடுக்கங்கள்[தொகு]

புவி ஓட்டில் திடுமென எதிர்பாராமல் ஏற்படுகின்ற அசைவே நில நடுக்கமாகும். அதன் அலைஅதிர்வுகள் பரும அளவில் மாறுபடும். நில நடுக்கத்திற்கு காரணமாக அமைந்த நிலத்தின் அடியிலான (கீழான) பிறப்பிடத்தினை 'குவியம்' என்றழைப்பர். அந்த குவியத்தின் நேர் மேலுள்ள முனையினை 'அதிர் மையம்' என்றழைப்பர். அவ்வாறு நில நடுக்கங்கள் ஏற்படும் பொழுது மக்களையோ அல்லது விலங்குகளையோ அது பாதிப்பதில்லை. நில நடுக்கத்தின் காரணமாக, இரண்டாம் பட்ச நிகழ்வுகளான கட்டிடங்கள் பாழடைந்துச் சரிதல், காட்டுத்தீ பரவுதல், சுனாமி உருவாகுதல், எரிமலை வெடித்தல் போன்ற நிகவுகளின் பின்னணியில் மக்களுக்கு பேரழிவுகளுடன் பேரிழப்பும் நேரிடுகிறது. பலமான கட்டிடங்களைக் கட்டுவது, சிறப்பான பாதுகாப்பு முறைகளை செயல் படுத்துவது, ஆரம்ப காலத்திலேயே எச்சரிக்கை செய்வது, முன்னதாகவே மக்களை இடம் பெயருவதற்கான முன்னேற்பாடுகளை திட்டமிட்டு செயல் படுத்துவது, ஆகிய சீரான நடவடிக்கைகள் மூலம் இது போன்ற பேரழிவு இடர்பாடுகளில் இருந்து ஓரளவிற்கு தடுக்கவோ அல்லது தவிற்கவோ முனையலாம். எனவே இயற்கை யல்லாத பேரழிவு என்ற கூற்று சட்டப்படி வாத ஆதாரமற்ற ஏற்றுக்கொள்ள முடியாத கூற்றாகும்.

நிலவியல் குறைபாடுகள் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் குவிந்து விட, அவை யாவற்றையும் ஒரே நேரத்தில் உடனுக்குடன் வெளியேற்றும் இயற்கை நிகழ்வுகளால் நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன.

சமீப காலங்களில் நிகழ்ந்த மிகக் குறிப்பிடத் தக்க நில நடுக்கங்களாவன:

லாஹர்ஸ்[தொகு]

லாஹர் என்பது ஒரு எரிமலைச் சேற்றுப் பெருக்கமாகும் அல்லது நிலச்சரிவாகும். அதனால் நிலச் சரிவும் நிகழ்வதுண்டு. 1953 ஆம் ஆண்டில் 'டாங்கிவாய் பேரிழப்பு' ஒரு லாஹாரால் நிகழ்ந்தது. அதே போல் ஆர்மிரோ பெருந்துன்பம் என்ற பேரழிவின் போது ஆர்மிரோ நகரம் முழுதும் புதையுண்டதுடன் 23000 பேர்கள் அதில் சிக்கி மடிந்தனர்.

நிலச்சரிவுகளும் சேற்றுப் பெருக்கமும்[தொகு]

இவை கலிபோர்னியா பகுதிகளில் கனமழை பெய்து முடிந்த காலத்தில் தவறாமல் அடிக்கடி நிகழ்பவையாகும்.

எரிமலை வெடித்துச் சிதறுதல்[தொகு]

பூ ஊ
  • எரிமலை வெடித்துச் சிதறும் நிகழ்வே பேரழிவாகலாம், அல்லது அக்கினிப் (தீப்பாறைகள்) பாறைகள் வீழ்வதும் பேரழிவாக உள்ளது. அப்படி மிகையானவை வெடித்துச் சிதறியதும் பற்பல விளைவுகள் தோன்றிட அது மானிட வாழ்க்கைக்கு ஊறு பயக்கின்றது.
  • ஒரு எரிமலை வெடித்து பேரழிவாக சிதறும் போது 'லாவா'தீக்குழம்பு வெளிப்படும். அதில் மிகையான வெப்பத்துடன் கூடிய உள்ளிருக்கும் பாறைகளும் இருக்கும். அதனுள் பல்வேறு வேறுபட்ட வடிவங்கள் மென்மைத் துகளாகவும், பிசு பிசுப்பாகவும் இருக்கும். இது எரிமலையில் இருந்து சிதறும் போது எதிரில் காணும் கட்டடங்கள் மற்றும் தாவரங்கள் எல்லாவற்றையும் பொசுக்கி அழித்து விடும்.
  • எரிமலை சாம்பல் - என பொதுவாக பொருள்படுவது- குளிர்ந்தபடி சாம்பல் மேகமாக வடிவு எடுக்கும், அருகிலுள்ள பகுதிகளில் அடர்ந்து தங்கிவிடும். நீருடன் கலந்தவுடன் 'திண்காறை' போல ஒரு கட்டியான பொருளாகி விடும். போதுமான அளவில் இத்தகைய சாம்பல் அதன் எடையால் மேல் கூரையையே நொறுக்கிவிடும். சிறிதளவு சுவாசித்தாலே போதும், உடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதித்து விடும். அந்த சாம்பலில் பொடித்த கண்ணாடித்தூள் கலந்து உள்ளதால் எஞ்சின் போல அசையும் உள்பகுதிகள் உராய்ந்து பாதிப்படையும்.
  • உன்னதஅக்கினி மலைகள் : டோபா பேரழிவு கோட்பாட்டின் படி 70 முதல் 75 ஆயிரம் வருடங்கள் முன்னர் டோபா ஏரியில் நிகழ்ந்த உன்னத எரிமலை சீற்றம் காரணமாக மக்கள் தொகை பத்தாயிரம் மக்கள் அல்லது ஆயிரம் உற்பத்தி ஜோடிகள் என்று குறுகியதால் மனித படிமலர்ச்சியில் ஒரு இக்கட்டான நிலை உருவானது. அது வட கோளரங்கத்திலுள்ள முக்கால் வாசி அளவு தாவர இனங்களையும் அழித்தது. உன்னத அக்கினி மலை கக்கும் சாம்பல் அதிவிரைவாக கார்மேகம் போல் படர்ந்து உலகெங்கும் தட்ப வெப்ப சீதோஷ்ண நிலையில் பல நூற்றாண்டுகளுக்கு பாதிக்கும் தன்மை கொண்டதாகும்.
  • பழம் பாறைகளின் துண்டுகளிலிருந்து ஒழுகும் உஷ்ண ஊற்றுகளில் நிரம்பி உள்ளதெல்லாம் வெப்ப எரிமலையின் சாம்பலாகும். அது வாயு மண்டலத்தில் ஊடுருவி பரவி தன்னுடைய எடை, ஆற்றொழுக்கு இரண்டாலும் விரிவடைந்து போகும் பாதையில் எதிர்கொள்ளும் பொருட்கள் யாவையும் எரித்துத் தள்ளுகிறது. ஒரு எரிமலைத் துண்டின் உஷ்ண ஊற்று ஒழுக்கே, பாம்பெய் முற்றிலுமாக சீரழிந்து போனதற்கு முக்கிய காரணம் என்று நம்புகிறார்கள்.

வெள்ளத்தால் பேரிழப்பு[தொகு]

பெரு வெள்ளம்[தொகு]

வரலாற்றுப் பதிவுகளில் இடம் பெற்ற மக்களை வெகுவாக பாதித்த ஒரு சில மிக குறிப்பிடத் தக்க வெள்ளங்கள் ஆவன:

வெப்ப மண்டலங்களில் ஏற்படும் சூறாவளிக்காற்று பொங்கும் புயல் பேரலை எழுச்சியுடன் கூடிய விரிவான வெள்ளப்போக்கை, பின் வரும்படி, பல இடங்களில் ஏற்படுத்தியது:

ஏரி வெடித்துக் கிளம்புதல்[தொகு]

நியோஸ் ஏரியின் வெடிப்பு வாயுக்களை கிளப்பியது: ஒரு பசு அதனால் பாதிப்படைந்தது.

ஏரி வெடித்து நீர்ப்பெருக்கு ஏற்படுவதுண்டு. அதன் காரணம் கரியமில வாயு. (CO)2']]எனப்படும் கரியமில வாயு ஏரியின் ஆழத்தில் இருந்து வெடித்து நீர் பொங்கி வருவதாகும், இதன் விளைவாக வனவிலங்குகள், கால்நடைகள், மனிதர்கள் யாவரும் பிராண வாயு இல்லாததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிப்பு அடையலாம். அப்படி ஏரியில் இருக்கும் நீரை இடம் பெயர்த்து, கரியமில வாயு வெடித்துக் கிளம்பும் சம்பவத்தால் ஏரியில் சுனாமி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.நிலச்சரிவுகள், எரிமலை சீற்றம் அடைவது அல்லது வெடித்துச் சிதறுதல் ஆகிய எதிர்வினைகளை இது போன்ற ஏரி வெடிப்பு சம்பவங்கள் முடுக்கி விடுவதாக அறிவியல் நிபுணர்கள் நம்புகிறார்கள்.

இதுநாள் வரை, இரண்டே இரண்டு ஏரி வெடிப்பு நிகழ்வுகள் மட்டுமே கவனத்திற்கு உட்பட்டு பதிவாகியுள்ளது.

  • 1984 ஆம் ஆண்டில், கமரூன், பகுதியில் ஏரி மொனௌன் என்ற ஏரியில் நிகழ்ந்த வெடிப்பின் காரணம் அருகில் வாழ்பவர்கள் 37 பேர்களை மரணமடைந்தார்கள்.
  • அதன் அருகில் ஏரி ந்யோஸ் என்ற ஏரியில் 1986 ஆம் ஆண்டில் நடந்த பெரும் வெடிப்பில் 1,700 முதல் 1,800 பேர்கள் மூச்சு திணறல்ஏற்பட உயிர்துறந்தனர்.

சுனாமிகள் 'ஆழிப் பேரலைகள்'[தொகு]

டிசம்பர் 26, 2004 அன்று நிகழ்ந்த நிலநடுக்கம் காரணம் உருவான சுனாமி பேரலை அஒ நங்கை தாக்குவது.

கடலுக்குள் நிலநடுக்கம் சுனாமியாக திரிந்துவிடும், அப்படி ஒரு சம்பவம் ஆஒ நங், தாய்லாந்து அலாஸ்கா நாட்டில் 2004 ஆம் ஆண்டு இந்தியன் பெருங்கடலின் நில நடுக்கம் நிகழ்ந்தது, சில நேரங்களில் நிலச்சரிவு நிகழ்வுகளும் இதற்கு வித்திட்டு அதனால் நடந்த நிகழ்வுகள்: அலாஸ்காவின் லிடுய விரிகுடாவில் நடந்தது.

வானிலை பேரழிவுகள்[தொகு]

பனிப்புயலுக்குப் பிறகு எங் திசையில் செலுத்துதல் பனிப்புயல், மார்ச் 1966

பனிப்புயல்கள்[தொகு]

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வீசிய முக்கியமான பனிப்புயல்கள் ஆவன:

பனி சூறாவளி|அர்மிச்டிசே நாள் பனிப்புயல்]] 1940 ஆம் ஆண்டு நிகழ்வு

சூறாவளிப் புயல்கள்[தொகு]

சைக்ளோன் சூறாவளி, டிரபிகள் அயன மண்டல சூறை , ஹரிகேன் சுழல்காற்று , தைபூன் சண்டமாருதம் ஆகிய புயல்கள் எல்லாமே அரிய இயல் நிகழ்ச்சிகளாகும். சூறாவளி புயல் வீசுவது அனைத்தும் கடல்பரப்பின் மேல் நடைபெறுகிறது. 1970 ஆம் ஆண்டில் நிகழ்ந்த போலா சூறாவளி மிகவும் கடுமையானதாகும், அதை விட பயங்கரமான சூறாவளி அட்லாண்டிக் சூறைக்காற்று 1780 ஆம் ஆண்டில் மார்டிநிக்குயூ செயின்ட் யூச்டேடுயஸ் மற்றும் பார்படாஸ் ஆகிய இடங்களை தாக்கியதாகும். 2005 ஆம் ஆண்டில் வீசிய கத்ரினா புயலானது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கடலோர வளைகுடா பகுதியை முற்றிலுமாக அழித்தது.

வறட்சி[தொகு]

வரலாற்றில் பதிவுபெற்ற மக்களை மிகவும் பாதித்த வறட்சிக் காலங்கள் ஆவன:

  • 1900 ஆம் ஆண்டு இந்தியாவை தாக்கிய வறட்சி - 250,000 முதல் 3.25 மில்லியன் மக்களை பலி வாங்கியது.
  • 1921-22 ஆம் ஆண்டு சோவித் யூனியன் வறட்சிகள் - 5 மில்லியன் பேர்களை பட்டினியால் மடியச் செய்தது.
  • 1928-30 ஆம் ஆண்டுகளில் வடமேற்கு சீனா வறட்சியால் வாடிய பொது, 3 மில்லியன் பேர்களுக்கும் மேலாக பஞ்சத்தில் மாண்டனர்.
  • 1936 மற்றும் 1941 ஆம் ஆண்டுகளில் சிசுவான் மாகாணம் - சீனாவில் - 5 மில்லியன் மற்றும் 2.5 மில்லியன் மரணங்களை முறையே சம்பவித்தது.
  • 2006 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, விக்டோரியா மற்றும் க்வீன்ஸ்லாந்து ஆகிய ஆஸ்திரேலிய மாகாணங்கள் யாவும் ஐந்து முதல் பத்து வருடங்கள் வறட்சியில் வாடித் தவித்தன. முதல்முறையாக, வறட்சியானது பெருநகர மக்களை மிகவும் பாதித்தது.
  • 2006 ஆம் ஆண்டு சிசுஅன் மாகணம் சீனா நவீன காலத்தில் கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்த அனுபவம் பெற்றது. எட்டு மில்லியன் மக்கள், மற்றும் ஏழு மில்லியன் கால்நடைகள் யாவும் தண்ணீர் பற்றாக் குறையால் வாடின.

ஆலங்கட்டி மழைப்புயல்[தொகு]

மழைப் புயல் அல்லது கல்மாரி பெய்யும் பொழுது பனிகட்டி யாக உரு எடுப்பதால் 'ஆலங்கட்டி' மழை எனவும் கூறுவதுண்டு. குறிப்பாக பாதிப்புடன் கூடிய பனிமழை தாக்கிய பகுதிகள்: முனிச், ஜெர்மனி ஆகஸ்ட் 31, 1986ஆம் ஆண்டு, ஆயிரக் கணக்கான மரங்கள் விழுந்தன. மற்றும் பல மில்லியன் டாலர்கள் இன்சூரன்ஸ் காப்பீடு தொகையாக வழங்கப் பெற்றது.

வெப்ப பேரலைகள்[தொகு]

சமீப வரலாற்றில் வீசிய மோசமான வெப்ப பேரலை யாதெனில் 2003 ஆம் ஆண்டில் ஐரோப்பியன் வெப்ப அலை ஆகும்.

காத்ரினா சூறாவளி

விக்டோரியா ஆஸ்திரேலியாவில் வீசிய வெப்ப அலை நிகழ்வில் பெருமளவு முட்புதர் தீ 2009 ஆம் ஆண்டு மூண்டது. மெல்பேர்ண் நகரத்தில் மூன்று தினங்களுக்கு மேலாக அதிக வெப்ப நிலையை உணர்ந்தது, வெப்பத்தின் அளவு 43 °C.க்கும் மிகையாக இருந்தது.

சுழல் வளிகள்[தொகு]

பல்வேறு வகையான சுழல் வளிகள்:

சூப்பர் செல் சுழல் வளிகள்

சூப்பர் செல் சுழல் வளிகள் மிக வன்மையான சுழல்காற்றாகும். அது இடியுடன் சேர்ந்து வருவதால், சூப்பர் செல் சுழல் வளியானது நெடுநேரம் இடிஒலி கலந்து வருவதுடன் வளியை அல்லது காற்றை தொடர்ந்து வேகமாக மேல் நோக்கி சுழற்ற வைக்கும். இப்புயல் காற்றுகள் அதிகப் பட்சமாக சுழல் வளியினை உருவாக்கும் இயல்பு படைத்ததாகும். இவ்வகையில் ஒருசில காற்றுகள் பெரியதொரு ஆப்பு வடிவத்தில் கம்பீரமாக அமைந்திருக்கும். சூப்பர் செல் இடிப்புயலானது அடைஅடுக்கு அல்லது பாளம் அதன் கீழ்ப்புறம் தொங்கிக் கொண்டிருக்கும். அதற்கு பெயர் "சுவர் மேகம்" ஆகும். அது அடுக்கு பாளமாகவே தோற்ற மளிக்கும். மேகம் அதன் கீழ்ப்புறம் அடியில் தொற்றிக் கொண்டிருப்பது போலுள்ள தோற்றத்துடன் அமைந்திருக்கும். பாளத்தின் ஒரு புறம் மழை இன்றி இருக்கும், மறுபுறம் அடர்ந்த அம்பு அல்லது ஈட்டி போல மழை பொழிந்து தோன்றும். சூப்பர் செல் சுழலும் மேல்பகுதியை ரேடார் மாயத்தாற்றங்களில் தோன்றி, அது "உள்ளிழை சூறாவளி" என்று வழங்குகிறது.

சூரைகாற்றுகள் சூப்பர் செல்லுடன் இடியோடு சேர்ந்து வரும் போது தரையில் நெடுநேரம் தொடர்பு கொண்டிருக்கும் ஒருமணி அதற்கும் மேலாக! மற்ற வகை சூறாவளிகள் போல வன்மை மிக அதிகம் படைத்திருக்கும். அதனால் மணிக்கு இருநூறு மைல் வேகத்தில் வீசும்.

நிலத்தாரை

பொதுவாகவே நிலத்தாரை சூப்பர் செல் சூறாவளியை விட பலம் குறைந்ததாகும். அதனுடன் சுவர்மேகம் மற்றும் உள்ளிழை சுழல் காற்று சேர்ந்து இருக்காது. முகில் திரள் குவியல்கள் கோபுரம் போலிருக்கும். அதை திரள் கார்முகிலின் அடியில் ஒருவேளை காண நேரிடலாம். அந்த நிலத்தாரை ஒரு இடத்தின் நீர்த்தாரைக்கு சமமான ஒரு நிகழ்வாகும். மழையால் குளிர்ந்து கீழ்நோக்கி செல்லும் இடிமின்னற்புயலின் முன் நுனை ஓரங்களில் அது உருவாகும், அதனை "வன்காற்றுமுகப்பு" என அழைப்பர்.

வன்காற்றுச்சுழல்

ஒரு வன்காற்றுச்சுழல் வலுவின்றி குறுகிய காலம் நீடிக்கும். இடிப்புயலில் வன்காற்று முகப்பில் தாற்காலிகமாக அடையும் அழுக்குத்துகளும் முகில் படிவுகளும் கொண்டு விளங்கும். மிதக்கும் முகிலுடன் தெளிவான தொடர்பு அல்லது சுழற்சி சட்டம் இருப்பது தென்படாமல் போனாலும், இவை துகள் அடைப்பேய்கள் போல் காட்சி தரும்.

நீர்த்தாரை

நீரின் மேலே சுழல்காற்று வீசி வரும்போது தாரையாக தோன்றும். ஒரு சில சூப்பர் செல் இடிப்புயலில் இருந்து வெளிவரும். ஆனால் பல வலு குன்றிய இடிபுயலில் இருந்து தோன்றும் அல்லது விரைவாக வளரும் முகில்திரள்களில் இருந்தும் வரும். நீர் தாரைகள் ஆற்றல் குறைந்து இருப்பதால் அழிவுகளும் குறைவான அளவில் இருக்கும். கத கத என அயன கடல் நீரில் சுமார் ஐம்பது கஜங்கள் அகலத்தில் எப்போதேனும் தோன்றும். அதன் புகை வாயில் தூய்மை வாய்ந்த நீர்த்துளிகள், நீராவி திரவமாற்றம் அடைவதால் அடர்த்தியாக காணலாம், உப்புநீர் கலந்ததாக அது இருக்காது. நீர்த்தாரைகள் வழக்கமாக தரை வந்து சேரும் போது சிதறிவிழும். நிலப்பகுதியை அவை அடைந்ததும் நீர்த்தாரைகள் தமது ஆற்றலை இழந்து மறைந்து விடும்.

கீழே கொடுத்தவை சூறாவளி போன்ற சுழல் காற்று வகையைச் சாரும்.

  • துகள் அடைப்பேய்கள்

பாலைவனம் அல்லது வறண்ட நிலத்தில் துகள் அடைபேய்கள் வெப்பம் தெளிவாக உள்ள நாட்களில் வரும். சூரியனின் வெப்பம் மிதமாக இருக்கும். பின் காலை அல்லது முன் மதிய நேரங்களில் இவை தோன்றும், தீங்கு செய்யாத வகையில் இவை பெரும்பாலும் பாலைவனத்தில் வீசும் தென்றல் காற்றாகி சுழல் வேகம் கொண்டு சில நேரங்களில் மணிக்கு எழுபது மைல் வேக விகிதத்தில் வீசும். உள்ளுக்குள் இந்தச் சுழல் காற்றுகள் பல வேற்றுமைகள் கொண்டதாக இருக்கும். இதனுடன் இடிப்புயல் உடன் காற்றுகள் கலந்து வராது. மேகமும் உடன் இருக்காது. வழக்கமாக இது வலுகுறைந்து இருக்கும். அதிலும் வலிமை குன்றிய சுழல்காற்று போல இருக்கும்.

வகைப்படுத்திப் பார்க்கின்ற போது இது ஒரு சில நிமிடங்கள் என வாழ்க்கை சக்கரம் கொண்டு விளங்கும், சில நேரங்களில் அதை விடவும் கூடுதலான காலம் கொண்டு இருக்கும். அதிகம் தீங்கு ஏதும் செய்யாது என்றாலும் சிறிய அளவில் சேதங்கள் ஏற்படுத்த வல்லவையாகும். சாலைகளில் ஓடுகின்ற வண்டிகளையும், வாகனங்களையும் எல்லாவற்றையும் அவை தாக்கும். காண்போரின் கண்களில் தூசுகளையும் கொண்டு வந்து சேர்க்கும்.

  • தீச் சுழல்கள்

சில நேரங்களில் காடுகளில் பரவும் காட்டுத்தீயானது அல்லது எரிமலை வெடிப்பானது தீ சுழல் காற்றை உருவாக்கும். அது சுற்றி வீசும் போது அனலையும் புகையையும் கக்கும். நெருப்பின் மேல் பரப்பில் பலம் குன்றிய சுழல் அல்லது சுழி காற்றில் உள்ள போது இது நடைபெறும்.நெருப்புடன் சுழன்று வரும் காற்றுகள் மணிக்கு நூறு மைல் வேகம் கொண்டு வீசும் என கணக்கிட்டுள்ளது. அவை அந்த அந்த நேரங்களில் தீசூரைகாற்றுகள், தீ பேய்கள், அல்லது தீ சுழல்கள் என்று அழைக்கப் படுகின்றன.[4]

தீ[தொகு]

கட்டுக்கு அடங்காத தீ என்பது காட்டு பகுதிகளில் பரவலாக திடுமென தோன்றும். இவை ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் ஆவன: மின்னல் மற்றும் வறட்சி என்றாலும் மனிதர்களின் அஜாக்கிரதை அதனாலும் கலவரம், சச்சரவுகள் ஏற்படும் போதும் தீப்பிழம்புகள் கொழுந்து விட்டு சூழ்ந்து கொண்டு எரியும். கிராமப்புறப் பகுதிகள் மட்டும் அல்லாமல், அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்கு இவை ஆபத்தாக அமைந்துவிடும்.

ஒரு குறிப்பிடத் தக்க அம்சமுடன் கட்டுக்கு அடங்காத காட்டுத்தீ 2009 ஆம் வருடத்தில் விக்டோரியன் எனப்படும் புதர்த்தீ ஆஸ்திரேலியா தீவு கண்டத்தில் ஏற்பட்டது.

ஆரோக்கியமும் நோயும்[தொகு]

தொற்றுநோய்கள்[தொகு]

ஒரு யெச் 5 எநிய் வைரஸ, ஏவியான் இன்பிளுஎன்சா

ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் போது சுலபமாக தொற்றிக் கொள்ளும் நோய்கள் மனித மக்கள் தொகையில் அதி விரைவாக, வேகமாக பரவும். பெரும்பரவல் தொற்றுகள் என்பது உலகெங்கிலும் விரைவாகப் பரவும். வரலாற்றில் பலபல தொற்றுகள் வந்துள்ளன. அதில் முக்கியமானது கருப்பு சாவு ஆகும். கடந்த நூற்றாண்டுகளில் முக்கியமான பெரும்பரவல்கள் தொற்றுகள் ஆவன:

  • 1918 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் புளு பெரும் பரவல்நோய், உலகளவில் 50 மில்லியன் பேர்களை கொன்றுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.
  • 1957-58 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த ஆசியான் புளு பெரும்பரவல் நோய் ஒரு மில்லியன் பேர்களின் உயிரைக் குடித்ததாக மதிப்பிட்டுள்ளது.
  • 1968-69 ஆம் ஆண்டு ஹோங் காங் புளு பெரும்பரவல் நோய்
  • 2002-3 ஆம் ஆண்டு சரஸ் பெரும்பரவல் நோய்
  • எய்ட்ஸ் பெரும்பரவல் நோய், தொடக்கம் 1959 ஆம் ஆண்டு முதல்
  • எச் ஒன்று என் ஒன்று இன்பிளுயன்சா பன்றி காய்ச்சல் பெரும்பரவல் நோய் 2009

பிற நோய்கள் மிக நிதானமாகப் பரவுகின்றன. ஆனால் அவற்றை உலக சுகாதார நிறுவனம்சர்வ தேச ஆரோக்கிய ஆபத்து நெருக்கடிகளாகவே கருதப்படுகின்றன.

பஞ்சம்[தொகு]

நவீன காலங்களில் பஞ்சம் துணை-சஹாரா ஆப்பிரிக்கக் கண்டத்துப் பகுதிகளைத் தாக்கியுள்ளது. அப்பஞ்சம் மிக அதிகப் பட்ச கடுமையானதாகும். அதில் இறந்தோர் எண்ணிக்கை 20 நூற்றாண்டு ஆசியப் பஞ்சங்களில் மாண்டோர்களைக் காட்டிலும் குறைவேதான்!

விண்வெளி[தொகு]

'கம்மா' ஒளிக்கற்றை வெடிப்புகள்[தொகு]

விளைந்த நிகழ்வுகள்[தொகு]

நவீன காலங்களில் 1908 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் நடந்த 'டுங்குஸ்கா நிகழ்வே' செயல்விளைவு ஏற்படுத்திய நிகழ்வுகளில் மிகவும் பெரியதாகும்.

சூரிய கிளர் ஒளிக்கற்றைகள்[தொகு]

சூரிய கிளர் ஒளிக்கற்றைகள் என்பது ஓர் அரிதான நிகழ்வாகும். அப்பொழுது சூரியன் தன் கதிர்வீச்சை மிக அதிக பட்சமாக வெளியிடுன்றன. அது சாதாரண காலத்தில் வெளிவரும் வீச்சை விட அதிகமாகும். அத்தகைய சூரியக் கிளரொளிக் கற்றைகள் வெளிவந்த தினங்கள்:

ஒரு சில சூரிய கிளர் ஒளிக்கற்றைகள்:

  • எ க்ஸ் 20 நிகழ்வு ஆகஸ்ட் 16, 1989 ஆம் ஆண்டு
  • அதேபோல் கிளரொளி ஏப்ரல் 2 ஏற்பட்ட 2001
  • மிக சக்தி வாய்ந்த கிளரொளி நடந்தது நவம்பர் 4 2003, மதிப்பளவு எக்ஸ் 40 மற்றும் எக்ஸ் 45
  • இதுவரை நிகழ்ந்ததில் மிக அதிக ஆற்றல் பெற்ற கிளரொளி வீச்சு கடந்த 500 வருடங்கள் இல்லாத அளவில் நடந்தது செப்டம்பர் 1859 வருடமாகும்.

சூப்பர்நோவா, ஹைப்பர்நோவா நட்சத்திரங்கள்[தொகு]

எதிர்காலத்தில் இயற்கை பேரழிவுகள்[தொகு]

ஐக்கியப் பேரரசினைத் தாயகமாகக் கொண்ட 'சேரிட்டி ஆக்ஸ்பேம்'அமைப்பு பொதுப்படையாக அறிவித்தது என்ன என்றால் 2015 ஆம் ஆண்டிற்குள் 375 மில்லியன் பேர்கள் மொத்தத்தில் வெப்ப வானிலை சம்பந்தமான நோய்களுக்கு உரிய இலக்காக ஆக நேரிடும் என்று எச்சரித்துள்ளது.[5]

காப்பீடு[தொகு]

இயற்கைப் பேரழிவுகள் காப்பீட்டுத் தொழிலில் மிக சிறப்பான பங்கு ஆற்றி வருகின்றது. நஷ்ட ஈடாக ஒருசில அழிவுகளுக்கு அது நிதியுதவி அளிக்கின்றது. (சூறாவளிகள், காட்டுத்தீ, போன்றன.)

பிற பெருங்கேடுகளுக்கு ஈடு செய்ய பெரிய காப்பீடு நிறுவனங்கள் தக்க முறையில் ஈடு செய்து வருகின்றன.[6]

குறிப்புகள்[தொகு]

  1. ஜி. பேங்காஃப், ஜி. ஃப்ரெர்க்ஸ், டி. ஹில்ஹார்ஸ்ட் (2003). Mapping Vulnerability: Disasters, Development and People. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:ISBN 1-85383-964-7. 
  2. B. Wisner, P. Blaikie, T. Cannon, and I. Davis (2004). At Risk - Natural hazards, people's vulnerability and disasters. Wiltshire: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:ISBN 0-415-25216-4. 
  3. D. Alexander (2002). Principles of Emergency planning and Management. Harpended: Terra publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:ISBN 1-903544-10-6. 
  4. சீதோஷ்ண கலைக்களஞ்சியம், சீதோஷ்ண சேனல், இணைத்தது ஜூன் 2, 2009, http://www.theweatherchannelkids.com.
  5. பிபிசி: வானிலை பேரழிவுகள் பற்றிய ஆக்ஸ்பாம் எச்சரிக்கை
  6. III. (2008). 2008 இணையதளம்: பெருங்கேடு பற்றிய பார்வை

புற இணைப்புகள்[தொகு]

  • "When Nature Attacks". Newsweek. 2008-05-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-09-16 அன்று பார்க்கப்பட்டது.
  • "Global Risk Identification Program (GRIP)". GRIP. 2017-09-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-14 அன்று பார்க்கப்பட்டது.
  • "World Bank's Hazard Risk Management". World Bank. 2010-04-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-09-16 அன்று பார்க்கப்பட்டது.
  • "Global Facility for Disaster Reduction and Recovery (GFDRR)". GFDRR.
  • "Disaster News Network". 2006-11-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-11-05 அன்று பார்க்கப்பட்டது.
  • "EM-DAT International Disaster Database". 2006-11-05 அன்று பார்க்கப்பட்டது.
  • "Natural Hazard Information from the Coastal Ocean Institute". Woods Hole Oceanographic Institution. 2006-08-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-11-05 அன்று பார்க்கப்பட்டது.
  • "ProjectArcix: Global Disaster Information Portal". 2014-05-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-14 அன்று பார்க்கப்பட்டது.
  • "Global Disaster Alert and Coordination System". ஐரோப்பிய ஆணையம் and ஐக்கிய நாடுகள் அவை website initiative.
  • "What the Development Programme of the United Nations (UN) does to reduce the human risks linked to Natural Disasters". United Nations Development Programme (UNDP). 2015-01-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-09-16 அன்று பார்க்கப்பட்டது.
  • "Pioneering Disaster Risk Index (DRI) Tool". United Nations Development Programme (UNDP). 2014-06-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-09-16 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  • "World's Worst Natural Disasters". 2009-07-01 அன்று பார்க்கப்பட்டது.வரலாற்றில் இடம் பெற்ற உலகின் மிகப் பயங்கரமான

பேரழிவுகள் பற்றிய பட்டியல் அடங்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கைப்_பேரழிவு&oldid=3632505" இருந்து மீள்விக்கப்பட்டது