ஹுத் ஹுத் புயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹுத் ஹுத் புயல்
ஹுத் ஹுத் புயல் , அக்டோபர் 11, 2014
தொடக்கம்அக்டோபர் 7, 2014
காற்று3-நிமிட நீடிப்பு: 165 கிமீ/ம (105 mph)
1-நிமிட நீடிப்பு: 215 கிமீ/ம (130 mph)
அமுக்கம்960 hPa (பார்); 28.35 inHg
இறப்புகள்26 பேர்
பாதிப்புப் பகுதிகள்அந்தமான் நிக்கோபார் தீவுகள்

ஹுத் ஹுத் புயல் என்பது 2014 ஒக்டோபரில் வங்காள விரிகுடாவில் அந்தமானுக்கு அருகே உருவான புயலாகும்.[1] அந்தமானில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவடைந்து புயலாக மாறியது. அந்தமானுக்கு அருகேயுள்ள லாங் தீவுக்கு அருகில் நிலைகொண்ட இந்தப் புயலானது மேற்கு, வட மேற்காக நகர்ந்து, இந்தியாவின் கிழக்குக் கடற்கரையைக் கடந்த ஒரு வெப்ப மண்டலப் புயலாகும். 2014 இல் வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவான மிக பலம் வாய்ந்த புயலாகும்.

இது ஒக்டோபர் 12 அன்று முற்பகல் ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கும் ஒடிசாவின் கோபால்பூருக்கும் இடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.[2] இதனையடுத்து ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இப்புயலுக்குரிய ஹுத் ஹுத் என்ற பெயர் ஓமானின் பரிந்துரைக்கேற்ப வைக்கப்பட்டுள்ளது.[3] அராபிய மொழியில் இது ஓர் பறவையைக் குறிக்கிறது.

ஞாயிறு, அக்டோபர் 12, 2014 அன்று ஹுத் ஹுத் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது[4].

உயிரிழப்பு[தொகு]

இதுவரை புயலின் தாக்கத்தால் ஆந்திராவில் 26 பேர் பலியானதாகவும் 170 பேரைக் கானவில்லை எனவும் அறிவிக்கப்படுகின்றது.[5] ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மற்றும் விசாகப்பட்டினத்தில் மூவரும், ஒடிசா புரி மற்றும் கேந்தரப்பா மாவட்டங்களில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.[6]

புயல் உருவாக்கம்[தொகு]

புயலின் பாதை

தாழ்ந்த காற்றழுத்தம் உருவானதன் காரணமாக அந்தமான் கடல் பகுதிக்கு மேலாக ஒக்தோபட் 6 ந் திகதி தாழமுக்கம் கொண்டது[7] இது படிப்படியா உக்கிரமடைந்து ஒக்தோபர் 7ந் திகதி காற்றழுத்தமாக உருப்பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுத்_ஹுத்_புயல்&oldid=3648378" இருந்து மீள்விக்கப்பட்டது