குருத்து ஞாயிறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இரு புற பட sandwiching தவிர்க்க வேண்டும் (சிறு திரை வாசிப்பான்களில் சிக்கல் உண்டாகும்)
சி r2.5.1) (தானியங்கிஇணைப்பு: en:Palm Sunday
வரிசை 103: வரிசை 103:
[[பகுப்பு:சமயங்கள்]]
[[பகுப்பு:சமயங்கள்]]


[[ar:أحد الشعانين]]
[[an:Domingo de Ramos]]
[[an:Domingo de Ramos]]
[[ar:أحد الشعانين]]
[[arz:حد السعف]]
[[be:Вербніца]]
[[be:Вербніца]]
[[be-x-old:Вербная нядзеля]]
[[be-x-old:Вербная нядзеля]]
வரிசை 110: வரிசை 111:
[[ca:Diumenge de Rams]]
[[ca:Diumenge de Rams]]
[[cs:Květná neděle]]
[[cs:Květná neděle]]
[[csb:Palmòwô Niedzela]]
[[cy:Sul y Blodau]]
[[cy:Sul y Blodau]]
[[da:Palmesøndag]]
[[da:Palmesøndag]]
[[de:Palmsonntag]]
[[de:Palmsonntag]]
[[ee:Debaya Kɔsiɖa]]
[[el:Κυριακή των Βαΐων]]
[[el:Κυριακή των Βαΐων]]
[[es:Domingo de Ramos]]
[[en:Palm Sunday]]
[[eo:Palmofesto]]
[[eo:Palmofesto]]
[[ee:Debaya Kɔsiɖa]]
[[es:Domingo de Ramos]]
[[fi:Palmusunnuntai]]
[[fr:Dimanche des Rameaux]]
[[fr:Dimanche des Rameaux]]
[[fy:Palmpeaske]]
[[fur:Domenie des Palmis]]
[[fur:Domenie des Palmis]]
[[fy:Palmpeaske]]
[[ga:Domhnach na Pailme]]
[[ga:Domhnach na Pailme]]
[[gl:Domingo de Ramos]]
[[gl:Domingo de Ramos]]
[[he:יום ראשון של הדקלים]]
[[ko:성지주일]]
[[hi:पाम रविवार]]
[[hi:पाम रविवार]]
[[hr:Cvjetnica]]
[[hr:Cvjetnica]]
[[hu:Virágvasárnap]]
[[id:Minggu Palma]]
[[id:Minggu Palma]]
[[is:Pálmasunnudagur]]
[[is:Pálmasunnudagur]]
[[it:Domenica delle Palme]]
[[it:Domenica delle Palme]]
[[ja:聖枝祭]]
[[he:יום ראשון של הדקלים]]
[[kn:ಪಾಮ್ ಸಂಡೆ]]
[[ka:ბზობა]]
[[ka:ბზობა]]
[[kn:ಪಾಮ್ ಸಂಡೆ]]
[[csb:Palmòwô Niedzela]]
[[ko:성지주일]]
[[sw:Jumapili ya matawi]]
[[la:Dominica in Palmis de passione Domini]]
[[la:Dominica in Palmis de passione Domini]]
[[li:Paumezóndig]]
[[lt:Verbų sekmadienis]]
[[lt:Verbų sekmadienis]]
[[li:Paumezóndig]]
[[hu:Virágvasárnap]]
[[ml:ഓശാന ഞായർ]]
[[ml:ഓശാന ഞായർ]]
[[arz:حد السعف]]
[[nl:Palmzondag]]
[[nl:Palmzondag]]
[[ja:聖枝祭]]
[[nn:Palmesundag]]
[[no:Palmesøndag]]
[[no:Palmesøndag]]
[[nn:Palmesundag]]
[[nrm:Pâques flleuries]]
[[nrm:Pâques flleuries]]
[[pl:Niedziela Palmowa]]
[[pl:Niedziela Palmowa]]
வரிசை 150: வரிசை 151:
[[sc:Dominiga de sas prammas]]
[[sc:Dominiga de sas prammas]]
[[sco:Paum Sunday]]
[[sco:Paum Sunday]]
[[sh:Cvjetnica]]
[[simple:Palm Sunday]]
[[simple:Palm Sunday]]
[[sk:Kvetná nedeľa]]
[[sk:Kvetná nedeľa]]
[[sl:Cvetna nedelja]]
[[sl:Cvetna nedelja]]
[[sr:Цвети]]
[[sr:Цвети]]
[[sh:Cvjetnica]]
[[fi:Palmusunnuntai]]
[[sv:Palmsöndagen]]
[[sv:Palmsöndagen]]
[[tl:Linggo ng Palaspas]]
[[sw:Jumapili ya matawi]]
[[te:తాటాకు ఆదివారం]]
[[te:తాటాకు ఆదివారం]]
[[th:วันอาทิตย์ใบลาน]]
[[th:วันอาทิตย์ใบลาน]]
[[tl:Linggo ng Palaspas]]
[[uk:Вхід Господній у Єрусалим]]
[[uk:Вхід Господній у Єрусалим]]
[[vi:Chúa nhật Lễ Lá]]
[[vi:Chúa nhật Lễ Lá]]

14:22, 14 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

இயேசு ஆடம்பரமாக எருசலேமுக்குள் நுழைகிறார். விவிலிய ஓவியம். காலம்: 19ஆம் நூற்றாண்டு.

குருத்து ஞாயிறு (Palm Sunday) அல்லது குருத்தோலைத் திருவிழா என்பது இயேசு கிறித்து எருசலேம் நகருக்குள் ஆடம்பரமாக நுழைந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும்[1]. இது இயேசு சாவினின்று உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய ஞாயிறு நிகழும். இயேசு எருசலேமுக்குள் நுழைந்த நிகழ்ச்சியை நான்கு நற்செய்தியாளரும் விவரித்துள்ளனர். காண்க:

குருத்து ஞாயிறு: விவிலிய அடிப்படையும் பொருளும்

நற்செய்தி நூல்கள் தரும் தகவல்படி, இயேசு தாம் துன்புற்று இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன்னால் எருசலேம் நகருக்குள் மிகுந்த மாட்சிமையோடு நுழைந்தார்[2]. இயேசு ஒரு "கழுதைக் குட்டியின்மேல் ஏறி அமர்ந்து எருசலேமுக்குள் நுழைந்தார்." அவர் சென்ற வழியில் மக்கள் தங்கள் மேலுடைகளை விரித்தார்கள்; வேறு சிலர் இலைதழைகளைப் பரப்பினார்கள். அவர்கள்

என்று கூறி ஆர்ப்பரித்தனர். இப்பாடல் பழைய ஏற்பாட்டில் திருப்பாடல்கள் என்னும் நூலில் காணப்படுவது (காண்க: திபா 118:25-26).

யோவான் நற்செய்திப்படி மக்கள் "குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவுக்கு எதிர்கொண்டுபோனார்கள்" (காண்க: யோவான் 12:13). இவ்வாறு, குருத்தோலைகளை அசைத்து, வழியில் துணிகளை விரித்து, இலைதழைகளைப் பரப்புவது ஓர் ஆழ்ந்த பொருள் படைத்த செயலாக மாறியது.

கிறித்தவ வழிபாட்டில் குருத்து ஞாயிறு

குருத்து ஞாயிறு கொண்டாடும் நாள், 2009–2020
ஆண்டு மேற்கு கிறித்தவ சபைகள்
(கத்தோலிக்க சபை; ஆங்கிலிக்கன் சபை...)
கிழக்கு கிறித்தவ சபைகள்
2009 ஏப்பிரல் 5 ஏப்பிரல் 12
2010 மார்ச்சு 28
2011 ஏப்பிரல் 17
2012 ஏப்பிரல் 1 ஏப்பிரல் 8
2013 மார்ச்சு 24 ஏப்பிரல் 28
2014 ஏப்பிரல் 13
2015 மார்ச்சு 29 ஏப்பிரல் 5
2016 மார்ச்சு 20 ஏப்பிரல் 24
2017 ஏப்பிரல் 9
2018 மார்ச்சு 25 ஏப்பிரல் 1
2019 ஏப்பிரல் 14 ஏப்பிரல் 21
2020 ஏப்பிரல் 5 ஏப்பிரல் 12

மேற்குத் திருச்சபையில் கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கன் சபை, லூத்தரன் சபை ஆகிய கிறித்தவ சமூகங்கள் குருத்து ஞாயிறு கொண்டாட்டத்தைக் கடைப்பிடிக்கின்றன.

கத்தோலிக்க சபை வழக்கப்படி, குருத்தோலை கோவிலுக்கு வெளியே அல்லது (குளிர்நாடுகளில்) கோவிலின் தலைவாயிலைத் தாண்டி அமையும் பகுதியில் மந்திரிக்கப்படும். வழிபாட்டை நிகழ்த்தும் குரு சிவப்பு வழிபாட்டு ஆடைகளை அணிந்திருப்பார். எல்லாரும் குருத்தோலைகளைக் கைகளில் தாங்கியிருப்பார்கள். இயேசு தாம் துன்புற்று இறந்ததற்கு முன்னால் எருசலேம் நகருக்குள் ஆடம்பரமாக நுழைந்த நிகழ்ச்சி நற்செய்தி நூலிலிருந்து பறைசாற்றப்படும். குருத்து ஞாயிறு ஏன் கொண்டாடப்படுகிறது என்பதைக் குரு விளக்குவார். இறைவேண்டலுக்குப் பின் பவனி தொடங்கும். சிலுவை, எரியும் மெழுகுவத்தி கொண்ட விளக்குத்தண்டுகள், தூபக்கலசம் ஆகியவற்றைத் தாங்கி துணையாளர் முன்செல்வர். அவர்களைத் தொடர்ந்து சிறுவர், பெண்கள், ஆண்கள் என்று எல்லா மக்களும் செல்வார்கள். இறுதியில் குரு செல்வார். பவனியின்போது பாடல்கள் பாடப்படும். குறிப்பாக, "ஓசன்னா" என்னும் குரல் கேட்கும். அச்சொல்லுக்கு எபிரேய மொழியில் "இறைவா, விடுவித்தருளும்" என்பது பொருள். மேலும் "வாழ்க!" என்பதும் அதன் பொருளாகும். கோவிலுக்கு வெளியே அல்லது முற்றத்திலிருந்து தொடங்கும் பவனி திருப்பீடத்தை அடைந்ததும் திருப்பலி தொடங்கும்.

குருத்து ஞாயிறன்று மக்கள் பிடித்திருக்கின்ற குருத்துகள் அடுத்த ஆண்டில் வருகின்ற திருநீற்றுப் புதன் என்னும் நாளின்போது எரித்து சாம்பலாக்கப்படும். அச்சாம்பல் மந்திரிக்கப்பட்டு மக்களின் தலைமேல் பூசப்படும். கத்தோலிக்க திருச்சபை வழக்கப்படி இச்சடங்கு இறைவனின் அருளை இறைஞ்சுகின்ற ஒரு வழிபாட்டு நிகழ்வு ஆகும்.

கிழக்குத் திருச்சபையில் குருத்து ஞாயிறு "ஆண்டவர் எருசலேமில் நுழைந்த திருநாள்" என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. இது வழிபாட்டு ஆண்டின் முக்கிய பன்னிரு திருநாள்களுள் ஒன்றாகும். புனித வாரத்தின் முதல் நாளாக இது கருதப்படுகிறது. அதற்கு முந்திய நாளாகிய ஞாயிறன்று இயேசு இலாசருக்கு உயிரளித்த நிகழ்ச்சி கொண்டாடப்படும்.

உலக நாடுகளில் குருத்து ஞாயிறு கொண்டாட்டம்

எருசலேமில் திருக்கல்லறைக் கோவிலில் குருத்து ஞாயிறு. 2009.

கிறித்தவம் பரவியிருக்கின்ற எல்லா நாடுகளிலும் குருத்து ஞாயிறு கொண்டாடப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் சில சிறப்புப் பழக்கங்களும் நடைமுறையில் உள்ளன.

யோர்தான், இசுரயேல் நாடுகள்

யோர்தானிலும் இசுரயேலிலும் கத்தோலிக்க திருச்சபை, மரபுவழித் திருச்சபை, கீழைச் சபை, ஆங்கிலிக்கன் சபை போன்ற கிறித்தவக் குழுக்களைச் சார்ந்த மக்கள் இந்நாள் வழிபாட்டில் பெருந்திரளாகக் கலந்துகொள்வார்கள். சிறுவர்கள் தம் கைகளில் ஒலிவ மரக்கிளை, ஒலைக் குருத்து போன்றவற்றைத் தாங்கிச் செல்வர். அக்கிளைகளைச் சிலுவை வடிவில் மடிப்பது வழக்கம். ரோசாப் பூக்களால் சிலுவை செய்வதும் உண்டு. ஒலிவக் கிளையைத் திருநீரில் அமுக்கி அந்நீரைக் குரு மக்கள்மீது தெளிப்பார்.

லாத்வியா நாடு

ஓலைக் குருத்துகளுக்குப் பதிலாக "வில்லோ" (willow) மரக்கிளைகளை மக்கள் தாங்கி பவனியாகச் செல்வார்கள்.

இந்தியா

இந்தியாவில், குறிப்பாகத் தமிழகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களில் தென்னங் குருத்துக்களை நேரடியாக மரத்திலிருந்து வெட்டிக் கொண்டு வருவார்கள். ஒலைகளைத் தனித்தனியாகப் பிரித்து மக்களுக்குக் கொடுப்பார்கள். பலரும் சிலுவை வடிவத்தில் ஓலைகளை மடித்துக்கொள்வார்கள். சிலர் குருவி, புறா, கிலுக்கு, மணிக்கூண்டு போன்று விதவிதமான வடிவங்களில் ஓலைகளைக் கீறிப் பின்னிக்கொள்வார்கள். குறிப்பாக, சிறுவர்கள் இதில் உற்சாகத்தோடு கலந்துகொள்வார்கள். கோவிலின் உள்ளே தூயகப் பகுதியில் தரையில் செவ்வந்தி போன்ற பூக்களைத் தூவுவது கேரளத்தில் வழக்கம். சில இடங்களில் குருத்தோலைப் பவனி செல்லும் போது மக்கள் துணிகளை வழியில் விரிப்பதும் உண்டு.

மால்ட்டா

மால்ட்டா நாட்டில் ஒலிவக் கிளைகளும் பனைமரக் குருத்துகளும் பவனியில் செல்வோரின் கைகளில் இருக்கும். ஒலிவக் கிளைகளை இறந்த இயேசுவின் சிலைமீது விரிப்பார்கள். இயேசு ஒலிவத் தோட்டத்தில் துயருற்றார் என்பதை அது நினைவுபடுத்துகிறது.

ஓலாந்து

இந்நாட்டின் சில பகுதிகளில் அப்பத்தைச் சிலுவை வடிவில் செய்வார்கள். அதுபோலவே சேவல் வடிவத்திலும் ஆக்குவார்கள் (பேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்தபோது சேவல் கூவிற்று (காண்க: மாற்கு 14:66-72).

போலந்து

செயற்கைக் குருத்தோலைகளைச் செய்து அவற்றுள் மிக நீண்ட ஓலைக்குப் பரிசு வழங்கும் பழக்கம் போலந்தில் உள்ளது. 2008இல் மிக நீண்ட குருத்தோலை 33.39 மீட்டர் இருந்ததாம்!

உருமேனியா, பல்கேரியா

இந்நாடுகளில் குருத்து ஞாயிறு "மலர் ஞாயிறு" எனக் கொண்டாடப்படுகிறது. ரோசா, லில்லி, மார்கரட், ஜாஸ்மின், வயலட் போன்ற மலர்களின் பெயர்களைத் தாங்கியவர்கள் அந்நாளை விழாநாளாகச் சிறப்பிப்பர்.

பிலிப்பீன்சு

இந்நாட்டின் சில பகுதிகளில் குருத்து ஞாயிறு நாடகமாக நடிக்கப்படுகிறது. பவனியின்போது குரு ஒரு குதிரையின்மீது ஏறிகொள்வார். அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் குருத்தோலைகளைத் தாங்கிச் செல்லும். சில இடங்களில் பெண்கள் நீண்ட ஆடைகளை வழியில் பரப்புவர். குருத்தோலைகளை மக்கள் வீடடுக்குக் கொண்டு சென்று, வீட்டு வாயிலில் அல்லது சாளரங்களின் வெளியே தொங்க விடுவார்கள்.

ஆதாரங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருத்து_ஞாயிறு&oldid=742776" இலிருந்து மீள்விக்கப்பட்டது